அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, July 6, 2008

உத்தரவு வாங்கிக்கிறேன்....

இதுதான் கடைசிப் பதிவு....இதுவரை பெரிதாய் ஏதும் எழுதிவிடவில்லைதான், ஆனால் நிறைய அழுத்தங்களையும், ஆதங்கங்களையும் இறக்கிவைக்க இரண்டாம் சொக்கன் நிறையவே உதவியிருக்கிறான், அந்த வகையில் திருப்திதான்.

அடையாளங்களை உருவாக்குவதும் அதை தக்க வைப்பதும் கடினம்தான்...உழைப்பும்,ஒருங்கினைப்பும் இல்லையேல் அது சாத்தியமுமில்லைதான். ஆனால் உருவான அடையாளங்கள், ஒரு கட்டத்தில் அதன் எல்லைகளுக்குள் நம்மை தக்க வைக்க முயல்வதும், அதற்காய் வளைந்து கொடுப்பதும் எனக்கு இஷ்டமாயில்லை. அதன் பொருட்டே இந்த பதிவினை நிறைவு செய்கிறேன். என்னால் புதிய அடையாளங்களை உருவாக்கவும், அதனை உயர்த்திப் பிடிக்கவும் முடியுமென்கிற திமிரும் கூட காரணமாயிருக்கலாம்...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம், எது எப்படியோ போகட்டும்.

இரண்டாம் சொக்கன் என்கிற பெயர் கொஞ்சம் வித்தியாசமானதும், மனதுக்கு நெருக்கமானதாயும் இருந்தது. இந்த பெயருக்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது, இந்த இறுதிப் பதிவில் அதை சொல்லி முடிக்கிறேன்.

ஏற்கனவே மாயாவி என ஒரு பதிவர் இருப்பது தெரியாமல் இந்த பதிவிற்கு முதலில் வைத்த பெயர் மாயாவி என்பதே...அவர் வந்து சவுண்ட் விடவே, சொக்கன் என மாற்றினேன்,பார்த்தால் சொக்கர் ஏற்கனவே தமிழில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்.

இதென்னடா பெயருக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுதில் மதுரை போக வேண்டியிருந்தது...வழமை போல சொக்கருக்கும்,மீனாட்சிக்கும் அட்டெண்டன்ஸ் போட போனேன்.கோவிலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஐடியா தோன்றியது, நாமளும் இத்தனை வருசமா சொக்கரோட க்ளோஸா சுத்தீட்டு இருக்கோமே, ஏன் நாம இரண்டாம் சொக்கன்னு பேர் வைச்சிக்க கூடாதுன்னு....

யார் வேணுன்னாலும் இரண்டாம்னு வச்சிக்க முடியுமா, அதுக்கு ஒரு தகுதி, தராதரம் வேணும்ல...படங்காட்றதுககாக பேர வைக்கப் போய், சொக்கர் கோவமாகி திருவிளையாடல் ஏதும் நடத்தீட்டார்னா நாம தாங்குவோமா, நாம வேற ஹாஃப் பாயில்ட் ஆ(நா)த்திகன்.

இப்படில்லாம் யோசிச்சிட்டே, சொக்கநாதர் சன்னிதி வந்தேன்...அவர்கிட்ட...பாஸ், நான் இரண்டாம் சொக்கன்னு பதிவுக்கு பேர் வச்சிக்கலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தா இப்பவே சொல்லீடுங்கோ, நீங்க கோவிச்சு, நான் டேமேஜாகாம இருக்கனும்னா, சீக்கிரமா ஒரு சிக்னல் குடுங்க நான் புரிஞ்சிக்கறேன்னு தாக்கல் சொல்லீட்டு சன்னிதி விட்டு வெளியே வந்தேன்.

அதோட அதை மறந்துட்டு எல்லாம் சுத்தீட்டு, கடைசியா மீனாட்சி சன்னிதி முன்னால இருக்கற பலிபீடம் முனால வந்து, பெரிசா ஒரு கும்புடு போட்டு...போய்ட்டு வாறேன் தாயீன்னு சொல்லீட்டு இருக்கும் போது திடீர்னு நம்ம தோளை ஒரு முரட்டு கரம் ஒன்னு இருக்கமா புடிச்சி திருப்பிச்சு...

எவண்டாது..ன்னு திரும்பினா அஞ்சடி ஒசரத்துல வறுமையை உடம்பிலும், உடையிலும் தேக்கிய வயதானவர் ஒருவர். நான் சுதாரிக்கறதுக்குள்ள என் கைக்குள்ள ஒரு கவரை திணிச்சு, அதிகாரமா...”இதுல ருத்ராட்சம் இருக்கு, உனக்குத்தான்...போட்டுக்க”ன்னு சொல்லீட்டு விடுவிடுன்னு நடந்து முக்குறுனி பிள்ளையார் சன்னிதி பக்கம் நடந்து போயிட்டார்.

எனக்கு ஒன்னுமே புரியலை, அந்த பெரியவர் பின்னால போய் பாக்கலாம்னு ரெண்டு அடி நடந்தேன், அப்புறம் ஒன்னுமே தோனாம தெப்பக்குளம் படிக்கட்டுல வந்து உக்காந்தேன்.அதி காலை நேரத்துல அந்த இடத்தில் வேற யாருமே இல்லை...அந்த கவரை பிரிச்சா உள்ளே புத்தம் புதுசான சிவப்பு கயித்துல கோர்த்த ஒரு ருத்ராட்சம் இருந்துச்சி.

ரொம்ப நேரம் ஒன்னும் புரியல, இந்த காலை நேரத்துல ஆளரவம் இல்லாத ஒரு சூழல்ல...என்னை வலுவா புடிச்சி என் கையில எதுக்கு திணிச்சுட்டு போகனும். அப்பத்தான் மண்டைக்குள்ள வெளக்கெறிஞ்சிச்சு...இரண்டாம் சொக்கனுக்கு ஓக்கேன்னு பாஸ் சொல்ல்ராறோன்னு. என்ன கொடுமையிது....ஹி..ஹி...

சரி இதையே சம்மதம்னு வச்சிக்குவம்னு மொத வெலையா இரண்டாம் சொக்கனை அரங்கேற்றியாச்சு...இப்ப இந்த பதிவோட அவரை ஏறக்கட்டியுமாச்சு...பாரம் குறைந்தது.

அந்த ருத்ராச்சத்தை ரொம்ம நாளாய் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன், ஒரு சுபநாளில் ஹைகமாண்ட் அதை பறிமுதல் செய்து ஒரு தங்கசங்கிலியில் கோர்த்து கொடுக்க.... இப்பொழுது அதை உருட்டிக் கொண்டே இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.

முக்கிய அறிவிப்பு: இனிமேற்கொண்டு இரண்டாம் சொக்கன் என்கிற பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அனுமதிக்க வேண்டாம். மீறி அனுமதித்தால் அதற்கு நானே, முதலாம் சொக்கரோ எந்த வகையில் பொறுப்பாக மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பால, இன்னொரு மேட்டர், ஆரும்...பதிவ விட்டு போவாதே, தொடர்ந்து எளுதளைன்னா உண்ணாவிரதம் இருப்பேன், மறியல் பன்ணுவேன்னலாம் ஆர்ப்பாட்டம் பண்ணி அளுவாச்சி காட்டக்கூடாது. உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எங்கன போயிரப்போறேன், எனக்கு வேற யார் இருக்கா....எனக்கே அளுவாச்சியா வருது...ஹி..ஹி...முடிச்சிக்கறேன்

Tuesday, June 17, 2008

நான் இப்ப நாலாங்க்ளாஸ்

மெய்யாலுமே...நாலாங்க்ளாஸ் வந்துட்டேன்....ஒரு முக்கியமான அறிவிப்பு இந்த பதிவின் கடைசியில் இருக்கிறது.

ஹி..ஹி..பதிவெழுத ஆரம்பிச்சி மூனு வருசம் முடிஞ்சத வேறெப்படி சொல்றதாம். மூனு வருசம் போனதே தெரியலை. என்னோடு சம காலத்தில் எழுத ஆரம்பித்த பலர் தாமே முன்வந்து காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். புதியவர்கள் பலர் நம்பிக்கையளிக்கிறார்கள். பலர் மின்மினி பூச்சிகளாய் வெளிச்சம் காட்டி கரைந்து போய்விட்டனர்.

இப்போது தொடர்ச்சியாக மூன்று நான்கு வருடங்களாய் பதிவெழுதுபவர்களை விரல்விட்டு என்ணிவிடலாம்.நம்மில் பலர் தங்களின் சுயபிரதாபங்களை அப்படி இப்படி கொஞ்சம் பில்டப்புடன் பதிவாய் எழுத ஆரம்பித்து,வாசக வட்டம் வந்த பின்னர் அதற்கென வலிந்து எழுத ஆரம்பிப்பதையும்,ஒரு கட்டத்தில் வாசகவட்டத்தை தக்க வைக்க எல்லாவிதமான குரங்கு சேஷ்ட்டைகள் செய்வதை என்னைப் போலவே எல்லோரும் அவஸ்தையுடன் அவதானித்திருப்பீர்கள்.

என்வரையில், நான் எந்த கும்பலையும் சேராததனாலேயே இத்தனை காலம் பதிவுலகில் இருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கென வாசகவட்டம் எப்போதுமே இருந்ததில்லை. அதை நான் விரும்பியதுமில்லை, அதற்கென எழுதுவதுமில்லை.நான் இங்கே பெரிதாய் இதுவரைக்கும் அங்கீகரிக்கப் பட்டதுமில்லை, இப்போதைக்கு அது குறித்த வருத்தமுமில்லை. சமயங்களில் பலருக்கு உவப்பில்லாத கருத்துக்களை முன்வைக்கும் வாய்ப்புகள் வந்த போது அதை நிறைவாகவே செய்திருக்கிறேன் என்கிற திருப்தி இருக்கிறது.

பதிவுலகில் என்ன சாதித்தாய் என்கிற கேள்விக்கு என்னால் பெருமையாய் பதில் சொல்லமுடியும்....இன்னமும் நிறைய சாதிக்க வேண்டியிருப்பதால் அதை பற்றி பீற்றிக் கொளள விரும்பவில்லை, ஆனால் அந்த முயற்சி எத்தகையது என்பது பதிவுலகில் என்னை தொடரும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.அந்த நண்பர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் நான் என்றென்றும் கடமைப் பட்டவன்.

நெறய எழுதலாம்தான்...அதெல்லாம் இனி அஞ்சாங்க்ளாஸ் வந்த பின்னால எழுதறேன்...சரியா

விரைவில் இந்த பதிவு கைவிடப்படும்...(ஹி..ஹி..ஆரம்பிச்சிட்டான்யா ன்னு தோணுதா?)

(இரண்டு நிமிடங்களில் தட்டிய எக்ஸ்ப்ரஸ் பதிவிது...இந்த டீட்டெய்ல் நம்ம கவி.முத்துலட்சுமி அவர்களுக்காக...ஹி..ஹி)

ஒலக நாயகன் கவனத்திற்கு....

வலையுலகில் ஒரு வழியாக தசாவதார அலை ஓய்ந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த பதிவினை எழுதுகிறேன். ஒலக நாயகனை விட விஜய்.டி.ராசேந்தர் ஒரு விஷயத்தில் உயர்வானவராக தெரிகிறார். டி.ஆர் தன் சொந்த காசில் நம்மை இம்சிக்கிறார், ஒலக நாயகனோ ஊரான் காசில் தானும் இம்சைப்பட்டு எல்லாரையும் இம்சித்திருக்கிறார்.

ஆளாளுக்கு உலகத்தரம், உல்கத்தரம்னு சொல்றாங்க...என் வரையில் உலகத்தரமான தமிழ்படம்னா பருத்தி வீரனைச் சொல்வேன்...அதுதான் உலகத்தரம்..அதாவது உயர்வான தரம்.கோடி கோடியாய் செலவழிப்பதாலயே ஒரு படம் உலகத்தரமானதாகி விடாது என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.

உள்ளூர் தயாரிப்பாளர்களை போண்டியாக்கிவிட்ட ஒலக நாயகன் தனது அடுத்தடுத்த பரிசோதனைகளுக்காக இப்போது வால்ட் டிஸ்னி மாதிரியான உலகத்தர படாதிபதிகளுக்கு படம் காட்ட துவங்க்யிருக்கிறார்.பாவம் அவர்களாவது இந்த கலைஞானி(?)யிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்பதே என்னுடைய கவலை.

ஒருவேளை அப்படி யாராவது இளிச்சவாய் ப்ரொட்யூசர்கள் கிடைத்தால் கமலஹாசன் பின் வரும் சாதனைகளையும் முயற்சித்து, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு(!) கொண்டு செல்ல என் வாழ்த்துகள்.

1913ல் வெளியான Sixty Years a Queen என்ற படத்தில் Rolf Leslie, 27 வேடங்களில் நடித்திருக்கிறார்.

1929ல் வெளியான Only me என்ற படத்தில் Lupino Lane, 24 வேடத்தில் நடித்திருக்கிறார்.

1915 வெளியான Birth of a Nation என்ற படத்தில் Joseph Henabery 13 வேடங்களில் நடித்திருக்கிறார்

1965 ல் வெளியான Pas question le samedi என்ற படத்தில் Robert Hirsch 12 வேடங்களில் நடித்திருக்கிறார்.

எது எப்படியோ தனது தசாவதாரத்தின் மூலம் நமது நடிகர் திலகத்தின் அருமை பெருமையை மேலும் நம்மை உணரச்செய்த பெருமை கமலுக்கு மட்டுமே உரித்தானதாகி விட்டது.

பா.ம.க உறவு முறிந்தது - தி.மு.க

பா.ம.க உடனான உறவு முறிந்ததாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது...

இன்று மாலை அன்னா அறிவாலயத்தில் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில், பா.ம.க உடனான உறவு குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க வின் இந்த அறிவிப்பால், மத்திய அமைச்சரவையில் இருக்கும் டாக்டர்.அன்புமணி ராமதாஸின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தப் போவதில்லை என முதல்வர்.கருனாநிதி கூறியுள்ளார்.

Monday, June 9, 2008

எழுதவே பிடிக்கலை....

இப்பல்லாம் பதிவெழுதவே பிடிக்கலை...எழுதாம இருந்துரலாம்னு நினைச்சேன், அதுலயும் ஒரு அபாயமிருக்கறத கண்டுபிடிச்சப்புறம்தான் இந்த பதிவை எழுத ஆரம்பிச்சேன். என்ன காரணமுன்னு தெரியனும்னா முழுப்பதிவையும் நீங்க படிச்சாகனும்.

மொதல்ல கொஞ்சம் அரசியல் பேசுவம்...சரியா!, அழகிரி கலைஞருக்கு கட்டளைன்னு போட்டு ஏதோ ஒரு வாரபத்திரிக்கை வெளம்பரம் பார்த்தேன். சன் டிவி சகோதரர்களை சந்திக்கக்கூடாதுன்னு அழகிரி கலைஞரை மெரட்டின வெவகாரம் CNNIBN, லயும், அவங்க சம்பந்தி ஹிண்டுவுலயும் வந்திருந்திச்சி...மெய்யாலுமே சந்தோசமாய்ட்டேன். அழகிரி செஞ்சது கரெக்ட்டுதான்...பின்ன உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய நெனச்சவய்ங்கள இம்புட்டு விட்டதே பெரிய விசயம். என்னடா இவன் அழகிரியோட அடிவருடியாய்ட்டானான்னு யோசிக்கிறீங்களா...

மதுரக்காரய்ங்க பாசக்காரப் பயலுக, உயிரயும் கொடுப்பாய்ங்க, ஆனா அதே நேரத்துல வம்பு, த்ரோகம்னு வந்துட்டா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்...அத இப்ப அழகிரிகிட்ட பாக்கும் போது சந்தோசமாருக்கு. நான் இருக்கறவரை அந்தப் பயலுகளை எங்க குடும்பத்துக்குள்ள நொழயவிடமாட்டேன்னு சொன்னது சரிதான்னு நினைக்கிறேன். நாஞ் சொல்றது நெறயபேருக்கு புடிக்காதுன்னு நினைக்கிறேன்.

இப்ப ஒரு சினிமா பாட்டு....ஒரு காலத்ல இந்த பாட்டையும், பாட்லவர்ற புள்ளையயும் பார்த்து கெறங்கிப் போய் கெடந்தவன் நான். இது வரைக்கும் கள்ளங்கபடமில்லாத அழகோட ஒரு ஹீரோயின் வரலைன்னுதான் சொல்லுவேன். மணிஷா கொய்ராலா பம்பாய் படத்துல ஆரம்பத்துல கொஞ்சம் பாசாங்கில்லாத அழகோட வருவார்.

நான் சொல்ற ஹீரோயினோட பேரு பாக்யஸ்ரீ, கொஞ்சப்படம்தான் நடிச்சார், அப்பாலிக்கா கல்யாணம் பண்ணீட்டு செட்லாய்ட்டார்னு நினைக்கிறேன். நான் சொல்ற படம் "மைய்னே ப்யார் கியா", பாட்டு 'தில் தீவானா பின் சஜ்னா'...என்னாவொரு மெலடி, அப்படியே கரைச்சிருவாய்ங்க இந்த பாட்ல. அப்ப லவ்வடிச்சிட்டிருந்த சமயமா...இந்த பாட்ட கேட்டாலே ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே லவ்விங்ஸ்தான் ஹி...ஹி...

பாட்ட இங்கன போய் பாருங்க...இப்பவே சொல்லீட்டேன் பாட்ல சல்மான்கான் சம்பந்தமேயில்லாம குரங்கு மாதிரி குட்டிக்கரணமெல்லாம் போட்டு உங்களை படுத்துவார்...பாக்யஸ்ரீக்காக பொறுத்துக்கங்க. பாட்டு வரியையும், அர்த்தத்தையும் இங்கபோட்ருக்கேன். படிச்சிப் பார்த்துட்டு சொல்லுங்க. ஹிந்தியில விஷாரத் வரை படிச்சது இந்த மாதிரி பாட்டுக் கேக்கத்தான் யூஸாவுது(சைக்கிள் கேப்ல நான் ஹிந்தி பண்டிட்!..னு சொல்லியாச்சி..ஹி..ஹி..)

Dil Deewana Bin Sajna Ke Maane Na
The heart is crazy, without my dear, it does not listen.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na
It is mad, even after making it understand it does not understand
Dhak Dhak Bole, It Ut Dole Din Raina
It goes Dhak Dhak (beating of the heart), it dances day and night.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

Duniya Mange Apni Murade Main To Mangu Saajan
The world asks for its wishes. I just ask for my dear.
Rahe Salaamat Mera Sajna Aur Sajna Ka Aangan
Let my dear and his abode be safe
Iske Siva Dil Rab Se Kuch Bhi Chahe Na
Other than this, my heart does not ask for anything else from God.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

Jee Yeh Chahe Bana Ke Aanchal Tum Ko Lapetu Tan Pe
My heart desires that I should wrap you around my body like a Palloo (long hanging end of the sari).
Kabhi Yeh Sochu Main Ud Jau Tum Ko Liye Gagan Pe
Sometimes I think I should fly away with you in the clouds.
Aur Bhi Kuch Hain Dil Ke Iraade Kya Kehna
There are many more wishes in my heart, what should I say?
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

இப்படி இம்சை பண்றதுக்கு இவன் பதிவெழுதாமலே இருந்திருக்கலாம்னு தோணுமே....எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஆனாலும் ஏன் எழுதறேன்ன்னா...

ஒரு வேளை நான் எழுதறதை நிறுத்தீட்டா, அப்புறம் நீங்க எல்லாருமா சேர்ந்து என்னை திரு.ஜெயகாந்தனுக்கு இனையா வச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா...என்ன கொடுமையிது, இதெல்லாம் இந்த தமிழ்கூறும் நல்லுலகிற்கு தேவையா, அதுனால....நீங்க படிச்சாலும் படிக்காட்டியும், நான் தொடர்ந்து எளுதறதா இருக்கேன்.

ஹி...ஹி...ம்ம்ம்ம்

Wednesday, May 28, 2008

தூவல் கொட்டாரத்திலிருந்து பாண்டி அன்னை வரை...

சனிக்கிழமை மதியம் சேனல் மேய்ந்து கொண்டிருந்த போது ஏசியா நெட்டில் தூவல்கொட்டாரம் ஆரம்பித்தது. கல்லூரி நாட்களில் இருந்து மளையாள படங்கள் என்றாலே ஒரு கிக்தான். என்ன ஒரு வித்தியாசம் அப்போது படத்திற்கு இடையே வரும் பிட்டுக்காக படம் பார்த்தேன், இப்போது படங்களை பார்க்கிறேன்....அவ்வளவே. மளையாள படங்களில் வரும் கிராமமும் அது சார்ந்த சூழலும் அதன் மக்களும் என்னை கவர்ந்ததுண்டு. அடுத்த பிறவி என ஒன்றிருக்குமானால் கேரளாவில் ஏதாவது ஒரு கிராமத்தின் வசதியான ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டுமென நினைத்திருக்கிறேன். இந்திய அளவில் மிகச்சிறந்த நூறு நடிகர்கள் என பட்டியலிட்டால் அதில் நிறைய மலையாளா நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.

தூவல் கொட்டாரமும் கிராமிய பிண்ணனி சார்ந்த ஒரு கதைதான்...கதையெல்லாம் சொல்லி உங்களை கொடுமைப்படுத்தப் போவதில்லை.வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். மிகச்சிறந்த படமென்று சொல்லமுடியாது, ஆனால் கீராமீயமும் அதன் மக்களும்,உறவுகளும் முடிந்தவரையில் பாசாங்கில்லாமல் நகைச்சுவையாக பதியப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி. எல்லாம் சரிதான் இதுவரையில் தூவல்கொட்டாரத்திற்கு அர்த்தம் தெரியாது...அழகிய மளையாள சேச்சிகள் யாராவது என் சந்தேகத்தை தீர்த்துவைக்க முன்வந்தால் சந்தோஷப்படுவேன்.

படம் பார்த்து முடித்த கையோடு பாண்டிச்சேரி கிளம்பினேன்...திட்டமிட்ட பயணம் இல்லை...திடீரென தோன்றியது. பாண்டிச்சேரி பக்கம் அடிக்கடி போயிருந்தாலும் அரவிந்தர் ஆசிரமத்திறகு போனதில்லை. இந்த முறை அரவிந்தாஸ்ரமம் சென்றுவிட்டு ஆரோவில் போய்வருவது என தீர்மானம். ஐந்தரை மணிவாக்கில் கிளம்பி திண்டிவனம் போய் அப்டிக்கா லெஃப்ட்ல கட் பண்ணி பாண்டிச்சேரியை முத்தமிட்டபோது ஏழரை. வழக்கமாய் டேராப் போடும் 'மாஸ்'ஸில் முகம் கழுவி கடற்கரை போய் குடும்பமாய் பத்து மணி வரை அரட்டையடித்துவிட்டு, அஞ்சப்பரில் ஒரு கட்டு கட்டிவிட்டு அறை திரும்பியபோது சந்தோஷமாய் உணர்ந்தேன்.


(எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது கேட்டுப்பாருங்கள்)

காலையில் அரவிந்தாஸ்ரமம், பெரிய வளாகமாயிருக்குமென நினைத்திருந்தேன், ஏமாற்றமாய் போய்விட்டது. ஒரு வீடும் அதன் பக்கத்தில் தோட்டம் மாதிரியான இடத்தில் அரவிந்தர் மற்றும் மதர் என்றழைக்கப்படும் அன்னையும் ஒரே சமாதியில்.....எல்லோரும் மண்டியிட்டு சமாதியில் தலைவைத்து கண்மூடி தியாணித்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள் எல்லாரையும் விரட்டிக் கொண்டிருந்தார். சமாதியை சுற்றி நிறைய பேர் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். எனக்கும் தியானம் செய்யவேண்டுமென ஆசைதான், ஆனால் மனது அலைகிறது. மவனே எத்தனை நாள் அலைவே...என்னிக்காவது ஒரு நாள் அடங்குவேல்ல அன்னிக்கு தியானம் பண்ணிக்கிறேனென தியானத்தை தியாகம் செய்தவன் நான். சமாதியில் நானும் மண்டியிட்டு தலைவைத்து கண்னை மூடினேன், வித்தியாசமாய் ஏதும் தோன்றவில்லை.... பின்னால் விரட்டிய ஆசாமியின் முகம்தான் நியாபகத்துக்கு வந்து தொலைத்தது.

அந்த வீட்டில் அரவிந்தர் தொடர்பான நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.எனக்கு அரவிந்தரைப்பற்றி எதுவும் தெரியாது, அதன் பொருட்டு நாலைந்து தமிழ்புத்தகங்களை வாங்கினேன். அரவிந்தரின்,'எனது சிறை அனுபவம்' என்ற புத்தகத்தை முதலில் வாசிக்க நினைத்திருக்கிறேன். இந்த வருடத்திற்குள் வாசித்தாகவேண்டும்.

ஆரோவில் போய் ஏமாந்தது தனிக்கதை, எழுதுகிற எனக்கே இந்த இடத்தில் சலிப்பு தட்டுகிறது...பாவம் பிழைத்துப் போங்கள். இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


இரண்டாம் சொக்கன் என்கிற பெயருக்கான காரணத்தைக் கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களும்,தொலை பேசி அழைப்புகள் வந்து தொல்லை செய்வதாக நினைப்பதால் எதிர்வரும் பதிவொன்றில் அதை பகிர்ந்து கொள்கிறேன்....ஹி...ஹ்ஹி...ஹி

Tuesday, May 20, 2008

அடுத்த நிதியமைச்சரும், பிரியாணிக்கடையும்

கொள்ளிக்கட்டையால் தலை சொறிந்தால் எப்படியிருக்கும்....அப்படித்தானிருக்கிறது சென்னை வெய்யில். என்னை சுற்றி அத்தனை பேரும் விடுமுறையை கொண்டாடிவிட்டு வந்து என் வயிற்றெறிச்சலை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கமிட்மெண்ட்களை நினைத்தால் தூக்கமே வருவதில்லை. இதில் விடுமுறையாவது வெங்காயமாவது......

எனக்கென்னவோ கலைஞர் சாதுர்யமாய் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டாரோ என நினைக்கிறேன். என்னவெல்லாம் நடக்கும் என இப்போதே சொல்கிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மத்திய அரசில் இருந்து கலைஞர் விலகமாட்டார். ஆனால் காங்கிரஸிடம் இருந்து விலகுவார்.

தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன்,முஸ்லீம் லீக் இவர்களோடு வாசன் கோஷ்டி சேர்ந்து கொள்ளும்.

பாரதீய ஜனதா கட்சியுடன் அம்மா வேண்டா வெறுப்பாய் கூட்டனி வைத்துக் கொள்வார். வைக்கோ வழக்கம் போல தமாஷ் பண்ணுவார்.

கேப்டன் நாற்பது தொகுதியிலும் அம்மாவின் ஓட்டை பிரித்து தி.மு.க கூட்டனி வெற்றிக்காக பாடுபடுவார்.

சிதம்பரத்தின் புண்ணியத்தால் பாரதீய ஜனதாகட்சி நாடெங்கும் நிறைய இடத்தில் ஜெயித்துத் தொலைக்கும்.

மூன்றாம் அணி கோமாளிகள் லல்லு, முலாயம், மாயாவதி, கம்யூனிஸ்ட் எல்லாருமாய் சேர்ந்து சந்திரபாபு நாயுடுவை அடுத்த பிரதமராக்குவார்கள்.

வழக்கம் போல டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராய் தொடர்வார்.

இதுதான் நடக்கப் போவுது.......

கொஞ்சம் முயற்சி செய்தால் எங்க குடும்பத்து மூத்த உறுப்பினர் ஒருவர் கஜினி முகமது கணக்காய் போரடிக்கொண்டிருக்கிற அல்லது கிடைக்க வாய்ப்பிருக்கிற அம்மா கட்சி சீட் அவரின் வயதின் காரணமாய் இளைஞனான எனக்குத் தரப்பட்டால்.....ட்ட்டொட்டடாய்ங்.....ஹி..ஹி... அம்மா அடுத்த பிரதமரானால் .நான் நிதியமைச்சராகிட வாய்ப்பிருக்கிறதா என இனிமேல்தான் பிரசன்னம் பார்க்க வேண்டும். மனசாட்சி, மானம் வெக்கம் எல்லாத்தையும் கழட்டி எதாவது ஒரு வங்கியில் ஐந்து வருசத்துக்கு பிஃக்ஸட் டெப்பாசிட்டில் போட்டு விட்டு கட்சி உறுப்பினர் அட்டை வாங்க வேண்டியிருக்கும். என்ன கொடுமையிது. ஏன் இப்படி விபரீதமாய் யோசிக்கிறேன். ஜீரணிக்கவே முடியலை....இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனை வரத்தான் வேண்டுமா....

நானும் தமிழ்நாடெங்கும் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கடைசியாய் செட்டிலாகியிருப்பது அண்ணாநகர் தபால் தந்தி அலுவகத்திற்கு பக்கதிலிருக்கும் அலஹாபாத் வங்கிக்கு அடுத்திருக்கும் 'சோனாபெல்' தான். சின்ன கடைதான்...உட்கார்ந்தெல்லாம் சாப்பிட முடியாது. வீட்டுக்கு வாங்கிப்போய்தான் சாப்பிடவேண்டும். அண்ணா நகர் பக்கம் வந்தால் ட்ரை பண்ணி பாருங்கள். கடந்த பத்து வருசமாய் அதே ருசி...எப்படித்தான் மெய்ண்டெய்ன் பண்ணுகிறார்களோ தெரியவில்லை. இந்த கடைக்கு நிறைய பிரபலங்கள் வாடிக்கையாளர்கள் எனக்கு தெரிந்த இரண்டுபேரில் ஒருவர் நம்ம ட்ரம்ஸ் சிவமணி, இன்னொரு பிரபலம்...ஹி...ஹி...நாந்தேன்...

வடபழனி சிக்னலில் இருந்து கோயம்பேடு சிக்னல் வரைக்கும் இம்புட்டுத்தான் எளுத முடிஞ்சது......

இன்றைக்கு இத்துடன் முடித்துக் கொல்கிறேன்....ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்

Monday, May 19, 2008

கந்தனுக்கு அரோகரா...





குறிஞ்சி நிலத்து குமரனுக்கு பிறந்த நாளுக்காய் நம்ம மொய்...

ஹேப்பி பர்த்டே பாஸ்....

விஷ்ஷிங் யு மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் அஃப் த டே...

லாங் லிவ் டமில் காஃட்

Thursday, May 15, 2008

துறைசார்ந்த பதிவுகளும் தமிழ்மணமும்..

துறைசார்ந்த பதிவுகள் எங்கே?

யாரும் துறை சார்ந்த பதிவுகளை கண்டுக்காததனால தூக்கீட்டாங்களா, இல்லை அதுல யாரும் உருப்படியா எழுதலையா?

இடநெருக்கடியாக் கூட இருக்கலாம்.

கன்ஸிடர் பண்ணுங்கப்பா....சந்தோசப்படுவம்ல.

ஹி..ஹி...இதை மெனக்கெட்டு சொல்ல கொஞ்சம் சுயநலமும் இருக்கு.

Monday, May 12, 2008

தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...





தசாவதாரத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் தொன்னூறுகளில் வந்த மளையாள பட பாடலொன்றின் அப்பட்டமான தழுவல். பாடலை கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...இது தற்செயலா இல்லை அப்பட்டமான திருட்டா என....

ம்ஹும்....இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர் என உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களெல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது இத்தனை செலவு செய்து காப்பியடிக்கத்தான் வேண்டுமா....ம்ம்ம்ம்ம்

Sunday, May 4, 2008

ஃபைவ் ஸ்டார் சாமியும், மொபல் பதிவுகளும்

புதிதாய் எழுத ஏதுமில்லைதான், அதற்காக எழுதாமல் இருந்து விட முடியுமா என்ன? குறுதி அழுத்தம் எகிறிக்கொண்டிருப்பதால் இனி காருக்கு ட்ரைவர் கட்டாயம் என்கிற ஹைகமாண்ட்டின் அதிரடி சட்டத்தை எதிர்த்து பொங்கியெழுந்து போராடி பலனில்லாமல் போகவே இப்பொழுதெல்லாம் பின் சீட்டில் பெரிய வெங்காயம் போல உட்கார்ந்து தீவிரமாய் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நேற்று கிழக்கு பதிப்பகத்தின் சிரிப்பு டாக்டர் படித்தேன். இன்றைக்கு கிரிவலம் பற்றிய புத்தகம் எடுத்து வந்து படிக்காமல் உங்களுக்காக இதை லாப்டாப்பிக் கொண்டிருக்கிறேன்.

நேற்று இரவு ஏதோவொரு ஹிந்தி ச்சானலில் 'கேம்ளர்' என்கிற படத்தை பார்த்தேன். தேவ் ஆனந்த் மாதிரியான சவடாலான ஸ்டைல் ஹீரோ இடத்தை நிரப்ப இதுவரை இன்னொரு ஆள் வரவில்லையென்றுதான் நினைக்கிறேன், ராஜேஷ் கண்ணா இந்த இடத்தை ஓரளவிற்கு பிடித்தார் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். நமது நடிகர் திலகம் கூட நிறைய படங்களில் தேவ் ஆனந்தின் ஸ்டைலை காப்பியடித்திருக்கிறார். எனக்கும் தேவ் ஆனந்த், ஷம்மி கபூர் போன்ற கோமாளித்தனமான ஹீரோக்களைத்தான் பிடிக்கிறது. இந்த வகையில் நமது ஜெமினியும் சேர்த்தி.

வேலூர் தங்க கோவிலுக்கு பிரியங்கா போனார் என்கிற செய்தியை படித்தவுடன், தில்லியிலிருந்து வந்து பார்க்கும் அளவிற்கு என்ன இருக்கிறது என்கிற ஆவலில் நேற்று காலையில் காரை விரட்டிப்போனேன். வேலூருக்கு போய் பத்து பன்னிரெண்டு வருசம் ஆகியிருந்ததால் வேலூரின் வளர்ச்சியை பார்த்து பிரம்மித்தென். மானாமதுரை ரேஞ்சிற்கு இருந்த வேலூர் இன்றைக்கு போஷாக்காய் இருக்கிறது. கோட்டையை சுற்றிய அகழியில் படகுச்சவாரி செய்பவர்களை பார்க்க பரிதாபமாய் இருந்தது. (எத்தனை நாளைக்குத்தான் பொறாமைப்படுவது...ஹி..ஹி..).

வேலூரை தாண்டி ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீபுரம் என்கிற இடத்தில் அநியாயத்துக்கு பிரம்மாண்டமாய் கட்டியிருக்கிறார்கள். அநேகமாய் இந்தியாவின் முதல் 5ஸ்டார் கோவில் என்கிற பெருமையை இந்தை கோவில் தட்டிக் கொண்டு போகும். எங்கு திரும்பினாலும் இறைக்கப்பட்ட பணம்தான் தெரிகிறது. தர்மதரிசனம், கட்டண தரிசனம் இங்கேயும் உண்டு, ஞாயிற்றுகிழமைகளில் 100 ரூபாய், வார நாட்களில் 250 ரூபாய். எல்லாமே பெரிது பெரிதாய் இருப்பதால் ஏதோ எக்ஸிபிஷனுக்குள் நுழைந்த உணர்வுதான் வருகிறது.

கருவறையில் எனது குருவினை மனதில் தியானித்து வணங்கினேன். இப்பொழுதெல்லாம் குருவழிபாட்டில்தான் மனம் லயிக்கிறது. குருவை மிகையாக ஆராதிக்க வேண்டிய அவசியமில்லை. குருவின் அனுசரனையையும், வழிகாட்டுதலையும் நினைத்து வணங்கினாலே அது குருவழிபாடு என நினைத்திருக்கிறேன். இது குறித்து சித்தர்கள் பித்தர்கள் பதிவின் தொடர்ச்சியில் பார்ப்போம். கோவிலில் மிக நேர்த்தியாக உங்களிடம் இருந்து பணம் வசூலிக்க நிறைய ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் செலவழித்து விட்டு வரலாம்.

கோவிலின் எதிரில் இதை நிர்மாணித்த நாராயணி பீடத்தின் சாமியார் இருக்கிறார். அவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன். அவரை எல்லோரும் நாராயணி அம்மா என்கிறார்கள். அவரை பார்த்த்தவுடன் அதிர்ச்சியாய் போய்விட்டது. வயதான ஆசாமியாய் இருப்பார் என நினைத்தால் 32 வயது இளைஞர். எனது நண்பன் ஒருவன் மெலிவாய் இருந்தால் எப்படி இருப்பானோ அத்தகைய தோற்றம். இத்தனை சின்ன வயதில் இவரால் இத்தனை பெரிய நிர்மாணம் செய்ய முடியுமானால் அவரின் நிர்வாக ஆளுமை குறித்த வியப்பில் எனக்கு மரியாதையே தோன்றியது. அவரின் ஆசிரமத்திற்குள்ளேயே ஒரு கோவில் இருக்கிறது. அதற்கு அவர் பூசை செய்து கொண்டே போக செம்மறியாடுகளாய் பக்தர்கள் பின் தொடர நானும் தொடர்ந்தேன். கடைசியாய் நன்கு கொழுத்த பசுவொன்றிற்கு கோபூஜை செய்தார், உட்கார்ந்து முழுதாய் பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் முயற்சித்திருந்தால் அவரை தனியாக சந்தித்திருக்கலாம். கொடுத்து வைக்கவில்லை...யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ நாராயணி அம்மாவாகிய இவர் துர்க்கை, சரஸ்வதி, லக்ஷ்மியின் சொரூபம் என ஆசிரம நிர்வாகி ஒருவர் பயபக்தியுடன் சொன்னார். அவர் நம்பிக்கை அவருக்கு, நாமென்ன சொல்ல முடியும்.மொத்தத்தில் சென்னைக்கு அருகாமையில் போய் வர ஒரு பிக்னிக் ஸ்தலமாக இதை கொள்ள குடும்பத்துடன் முடிவு செய்தோம். மாலை நேரத்து விளக்கொளியில் கோவில் இன்னமும் சூப்பராய் இருக்குமாம்...போய்த்தான் பாருங்களேன்.

இதை நெல்சன் மாணிக்கம் ரோட்டின் ட்ராபிக் நெரிசலில் சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த முயற்சி ஒர்க்கவுட் ஆகுமானால் இனி இதுமாதிரி நிறைய பதிவுகளை போட்டுக் கொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, April 23, 2008

வெயில் கொடுமை தாங்கல்ய்யா...அதான்...ஹி..ஹி...

ஸ்ஸ்ஸப்பா....சென்னைய்ல வெய்யல் தாங்கலை....எங்கிட்டு திரும்பினாலும் கொளுத்துது. சரி ஜில்ல்ல்ல்ல்லுனு தேடுவோம்னு தேடினா சூடாத்தான் ஒன்னு கெடச்சிது.சரி சூட்டோட சூடா உங்ககிட்ட பகிந்துக்கலாம்னுதான்....பாத்துட்டு கேட்டுட்டு சொல்லுங்க.


பெரிசு மச்சக்காரர்தான்....வயித்தெறிச்சல கெளப்புறாங்கய்யா....

Sunday, April 13, 2008

PUTHTHAANDU VAAZTHUKAL

நண்பர்களே....

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்....இந்த இனிய நாளில் ஒரு இனிய ஹிந்தி பாடலை பகிர்ந்து கொள்கிறேன்...டபக்கென உணர்ச்சி வசப்பட்டு தமிழ் புத்தாண்டில் ஹிந்தி பாடலா என கொந்தளிக்காதீர்கள். உண்மையிலேயே மிகவும் இனிய கருத்தாழமிக்க காதல் பாடல் இது.

மேலும் இந்த மாதிரி முரணாய் சொல்வதும் செய்வதும் நமக்கு புதிதில்லை, நாம் ஏற்றுக்கொள்வதற்கெனவே பிறந்தவர்கள். அதை எண்ணி எண்ணி அகமகிந்து உணர்ச்சி வயப்படுவதும் நம் வாடிக்கைதானே...

நம்முடைய


பெரியார் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்

புரட்சித்தலைவர் ஒரு மளையாளி...

புரட்சித்தலைவியோ கன்னடர்...

சூப்பர் ஸ்டாரோ மராட்டியர்..

கேப்டனோ தெலுங்கர்...

தமிழ் வருடங்களின் பெயர்களோ சமஸ்கிருதத்தில்....

தமிழ்நாட்டு கடவுள்களுக்கோ சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் விளங்குகிறது...

நாக்கு பிடுங்கி சத்யராஜின் படங்களில் ஹிந்தி ஹீரோயின்தான்....

தமிழ்பாடல்களை ஹிந்தி பாடகர்கள் பாடினால்தான் வாயை பிளந்து கேட்கிறோம்...

இதையெல்லாம் ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்னுடைய இந்த ஹிந்தி பாடல் பெரிதில்லைதானே....


சரி, எல்லாத்தையும் மறந்துட்டு பாட்டை கேட்டு, பார்த்து மகிழுங்கள்....



புத்தாண்டை கொண்டாடுவோம்....புதிய நம்பிக்கைகளோடு....

Thursday, April 10, 2008

சித்தர்களும் பித்தர்களும் -2

இந்த தொடரை எழுத துவங்கிய பின்னரே, இனையத்தில் சித்தர்களை தேடினேன்...ஏகப்பட்ட விவரங்களுடன் பலர் எழுதியிருந்ததை காண முடிந்தது. ஏற்கனவே பலர் எழுதியதை திரும்ப எழுதுவதை காட்டிலும் இதுவரை சொல்லாத சில செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சித்தர்களின் எண்ணிக்கை குறித்து ஆளுக்கு ஒரு பட்டியலை நீட்டினாலும், எல்லா பட்டியலிலும் காணக்கிடைப்பது கோரக்காநாதர், மச்சேந்திரர் ஆகிய இருவர் மட்டுமே.பதினெட்டு சித்தர்கள் என்பது தத்துவார்த்தமான ஒரு குறியீடாகவே இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சித்தர்களிடையே காணப்படும் மற்றொரு பொதுத்தன்மை அவர்கள் கடவுள் வழிபாட்டினையோ, ஆராதனைகளையோ, இறைவனின் புகழ் பாடுவதையோ தவிர்த்திருக்கிறார்கள் என்பதே. கடவுளை வடிவநிலை படுத்தாது கருத்துநிலை படுத்தினர் என்பதுதான் உண்மை. சிவன் என்கிற பெயர் குறியீடாக குறிக்கப்பட்டதே தவிர பெரும்பாலான நேரங்களில் அது என்றே தங்களின் இறைவனை குறிப்பிடுகின்றனர். தத்துவம் என்றால் தத்= சிவன், துவம்= அதன் மெய்யியல்புகளை குறிப்பது ஆகும்.

சிவனாகிய குருவின் தொடர்ச்சியான சீடர்களே சித்தர் பரம்பரையினராய் அறியப்படுவது எந்த அளவிற்கு குரு சிஷ்யபரம்பரை முக்கியமானதாய் இருந்திருக்கிறது எனபதை புலப்படுத்தும். குருவுடன் ஒன்றுவதே பிராதனமாயும் அதை குருயோகம் என்றும் அறியத்தருகின்றனர். குருவானவர் தனது சீடனுக்கு மெய்ஞானத்தை நோக்கவும்,பயிலவும், சோதிக்கவும், சிந்திக்கவும், தியானிக்கவும்,பயிலவும் அனுபவித்து உணரவும் உதவிசெய்கிறார்.

குருவும் அவரின் தன்மையையொட்டி பலவகையாக அறியப்படுகிறார்.

பிரேரகர்கள் - சாதனைகளின் பயன்கள்,சிறப்புகளை சாதகர்களுக்கு சொல்லி ஊக்குவிப்பவர்

சூசகர்கள் - சாதனைகளை துவங்கிவைத்து அதன் நோக்கத்தை உணர்த்துபவர்

வாசகர்கள் - சாதனைகளையும் அதன் நோக்கங்களை விளக்கி காட்டுபவர்

தர்சகர்கள் - சாதனைகளை தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக்காட்டி நோக்கங்களை உணர்த்துபவர்

சிக்க்ஷகர்கள் - சாதனைகளையும் அவற்றின் குறிக்கோளையும் போதிப்பவர்

போதகர்கள் - சாதனைகளைப்பற்றியும் நோக்கங்களை பற்றியுமான உண்மை ஞானத்தை உணர்த்துபவர்கள்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சித்தர்கள் பாலவர்க்கம், மூல வர்க்கம்,கயிலாயவர்க்கம் மூன்று வகையாக கருதப்படுகின்றனர்.

பாலவர்க்கத்தினருக்கு முதல்வனாய் முருகபெருமானார் கருதப்படுகிறார். இவருக்கு சித்தசேனன் என்கிற பெயரும் உண்டு.இவர்கள் குண்டலினி சக்தியை மேம்படுத்திய முக்தர்கள் ஒருவகையில் குண்டலினி யோகிகள் என்றும் அழைக்கலாம்.

மூலவர்க்கத்தினருக்கு முதல்வனாய் திருமூலரை குறிப்பிடுகின்றனர்., இந்த மரபை நந்திவர்க்கம் என்றும் கூறுகின்றனர்.

திருமூலரும், கம்பளிசட்டை சித்தரும் கையிலாய வர்க்கம் என கூறிக்கொள்கின்றனர், இவர்களின் முதல்வனாக அகஸ்தியரை கூறுகின்றனர்.

இன்னொரு வகைப்பாட்டியலின் படி சித்தர்களை 'யோக சித்தர்', 'காயசித்தர்கள்', 'ரசவாத சித்தர்கள்' என பிரிக்கின்றனர். இதில் யோக சித்தர்கள் மற்றவரை விட உயர்ந்த நிலையை எட்டியவர்கள். யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயல்பவர்கள். காய சித்தர்கள் என்பார் தங்கள் உடலை வலுவுள்ளதாக்கி அழியாத தன்மையை பெற முயல்பவர்கள் இவர்களுக்கு முக்தி பெரிதில்லை. ரசவாத சித்தர்கள் மருத்துவத்திலும், உலோகவியலிலும் தேர்ச்சியனவர்கள்.

நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் ஒரு துளியாகத்தான் இருக்க வேண்டுமெனவும், சித்தர் பாடல்களை அழிப்பதையே தங்கள் நோக்காக கொண்ட சைவசித்தாந்திகளை பற்றிய தகவலும் அறியக்கிடைக்கிறது. இன்றைக்கு தொகுக்கப்பட்டிருக்கும் சித்தர் பாடல்கள் அனைத்துமே செவிவழியாக அறியப்பட்டு 16ம் நூற்றாண்டுக்கு பின்னரே ஓலைச்சுவடிகளில் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் இருக்கிறது.

தொடரும்....

Wednesday, April 2, 2008

நான் ஏன் ப்யூர் நான் வெஜிட்டேரியனா இருக்கேன்னா....



இதுனாலதான்....இதை பார்த்து மிரண்டு போய், எதுக்குடா வம்பு மிச்ச இருக்கிற நாளையும் நான் வெஜிட்டேரியனாவே இருந்து ஓட்டீரலாம்னு முடிவு பண்ணீருக்கேன்....

நீங்க எப்படி....?

எல்லாரும் என்னவோ ஏதோன்னு வந்து ஏமாந்திங்களா....ஸ்ஸ்ஸ்ஸாப்ப்ப்ப்பாடி...இன்னிக்கு நைட் நிம்மதியா தூக்கம் வரும்...ஹி..ஹி...

Monday, March 31, 2008

நான் ஒரு முட்டாளுங்க.....


ஏப்ரல் ஒன்ணும் நாணும்...

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காக பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....நான் ஒரு முட்டாள் என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்க முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

சக முட்டாள்களுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

அப்படியே என்னோட பேஃவரைட் பாட்ட கேட்ருங்க........

Tuesday, March 25, 2008

தமிழச்சி விவகாரமும், தமிழ்மண நிர்வாகியின் கருத்தும்?

தமிழச்சியின் பதிவுகள் தமிழ்மணத்தில் இருந்து விலக்கப்பட்டது குறித்து இருவேறு கருத்துக்கள் இருந்தாலும்...தமிழச்சியின் இந்த பதிவில் தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான திரு.சுந்தரமூர்த்தி என்பவரின் கருத்தாக இரண்டு பின்னூட்டங்கள் காணப்படுகின்றன.

இதை அவர்தான் எழுதினாரா என்பது தெரியவில்லை, ஏனெனில் அவரது பதிவில் சமீபத்தில் தான் யாருக்கும் பின்னூட்டமிடவில்லை என கூறியிருக்கிறார்.

தமிழ்மண நிர்வாகி - தமிழச்சி என்கிற தனிப்பட்ட மோதலில் தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கருத்து என்கிற போர்வையில் தேவையில்லாத பிற ப்ரச்சினைகள் எழ வாய்ப்பிருப்பதால் உடனடியாக தமிழ்மண நிர்வாகம் தங்களது நிலைப் பாட்டினை தெளிவாக்குதல் அவசியம் என நினைக்கிறேன்.....

தமிழச்சியும், தமிழ்மணமும்....எனது வேண்டுகோளும்.

தமிழச்சியின் பதிவுகளுக்கு இனி தமிழ்மணத்தில் இடமில்லையாம்....

அவரது பதிவினை தமிழ்மணத்தில் இருந்து விலக்குவதற்கான தார்மீக காரணங்கள் நிறையவே இருந்த சமயத்தில் வாளாவிருந்துவிட்டு இப்பொழுது, கடந்த சில நாட்களாய் தமிழ்மண நிர்வாகி ஒருவருடன் நடந்த எதிர்பாட்டுகளுக்காய் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்பது சொல்லாமல் புரியக்கூடிய உண்மை.

தமிழ்மணம் தனது சட்ட திட்டங்களுக்குள் வராத எவரையும் நீக்கலாமென்பதை யாரும் மறுக்கவில்லை....அதற்கு விளக்கம் தரவேண்டிய அவசியமும் இல்லைதான்....ஆனால் இத்தகைய தனிநபர் விருப்புவெறுப்புகளை முன்னிறுத்தி தனது செயல்களை நியாயப்படுத்துமானால் அது மிகவும் வருந்தத்தக்கது.

தமிழ்மணம் மீண்டும் தமிழச்சியின் பதிவுகளை திரட்டவேண்டும் என்பதே என்னுடைய எதிர்பாப்பும், வேண்டுகோளும்.....நிர்வாகம் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

Wednesday, March 19, 2008

மயங்கி...கிறங்கி...இழைந்து...குழைந்து....



இப்படித்தான் சொல்லவேண்டும்...இந்த பாடலை...சமீபத்தில் இப்படியாக மயங்கி,கிறங்கி...இழைந்து குழைய வைத்த பாடலை நான் கேட்டதில்லை.பாடலின் வெற்றியை இசையமைப்பாளரும், கவிஞரும், இயக்குனரும், நடிகர்களும் அநியாயத்திற்கு சமமாய் பகிர்ந்து கொள்கிறார்கள்....


ஹிந்தி தெரியாதவர்கள் நிச்சயமாய் கவித்துவமான இந்த பாடலின் ஜீவனை தவ்றவிட்டவர்கள் என்பது என்னுடைய கருத்து....ம்ம்ம்ம்ம்ம்

இந்த மொழிபெயர்ப்பு என்னுடையதில்லை...இனையத்தில் கிடைத்தது...இதில் பாடலின் அர்த்தம் முழுமையாக பெயர்க்கப்படவில்லை என்பது என்னுடைய கருத்து..ஆனால் நான் தேடியவரையில் கிடைத்த நல்ல மொழிபெயர்ப்பு.....

படித்துப்-பார்த்து-கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்....எப்படியிருக்கிறதென்று....

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai

It is said that this is a celebration of spring
but love is distressed to see...

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden, the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Saare sehmein nazaare hain
Soye soye waqt ke dhaare hain
Aur dil mein khoyi khoyi si baatein hain

The slow sleepy flow of time has
silenced much of the sorrow here
and many unsaid things are lost in the heart.

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden, the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Kaise kahein kya hai sitam
Sochte hain ab yeh hum
Koi kaise kahein woh hain ya nahi hamaare

How does one say what troubles them so.
I wonder this now
how does one actually tell you that they are not in love with you?

Karte to hain saath safar
Faasle hain phir bhi magar
Jaise milte nahi kisi dariya ke do kinaare

We journey through life together,
but there exists a distance between us
like that of the two banks of a river that never meet.

Pass hain phir bhi paas nahi
Humko yeh gham raas nahi
Seeshe ki ek diwar hai jaise darmiyaan

We are together, yet we are not.
This pain of separation is unacceptable to me.
There is, as it were, a wall of glass divides us.

Saare sehmein nazaare hain
Soye soye waqt ke dhaare hain
Aur dil mein khoyi khoyi si baatein hain

The slow sleepy flow of time has
quietened much of the sorrow here
and many unsaid things are lost in the heart.

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden, the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Hum ne jo tha naghma suna
Dil ne tha usko chuna
Yeh dastaan hamein waqt ne kaisi sunaai

The tune that I thought I would hear
was the song that my heart chose.
But what is this tune that fate has chosen for me to hear instead?

Hum jo agar hain gumgheen
Woh bhi udhar khush to nahi
Mulaquaato mein hai jaise ghul si gai tanhai

If it can be said that I am sad,
truth is she is not happy there either.
It is as if our encounters are blended with loneliness.

Milke bhi hum milte nahi
Khilke bhi gul khilte nahi
Aankhon mein hai baharein dil mein khiza

We meet but we do not unite
The flower blooms but doesn’t blossom.
When I look around I see that it is spring but there is an autumn in my heart.

Saare sehmein nazaare hain
Soye soye waqt ke dhaare hain
Aur dil mein khoyi khoyi si baatein hain

The slow sleepy flow of time has
quietened much of the sorrow here
and many unsaid things are lost in the heart.

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Monday, March 17, 2008

சித்தர்களும், பித்தர்களும்...1

சித்தர்களை பற்றி எழுதுவதாய் வாக்குக் கொடுத்தபின்னர்...எதிலிருந்து ஆரம்பிப்பது என்கிற குழப்பம் நிறையவே இருந்தது....இருக்கிறது. சித்தர்களின் உலகம் மிகவும் விஸ்தீரனமானது. அவர்களை பற்றி நாம் அறிந்ததும், தொகுத்ததும், பதிந்ததும் மிகக்குறைவே....இதனால் பல்வேறு கருத்தியல்களும், முரன்பாடுகளும்...தெளிவின்மையும் நிறையவே தேங்கிக் கிடக்கிறது.....பொதுவில் நான் நேர்மையாக உணர்ந்த விதயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...தவறிருப்பின் தயங்காமல் சுட்டிடுங்கள்...திருத்திக்கொள்கிறேன்.

சித்தம் என்கிற தமிழ் பதம் மனம் மற்றும் அது தொடர்பான பகுப்புகளை உள்ளடக்கியது என்றாலும், சித்தர்கள் தங்களின் சமகால வாழ்வியல் சூழல்களில் இருந்து விலகியவர்களாகவும், வேறுபட்டவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. பிறர் சாராத தேடலில் தாங்கள் கண்டுணர்ந்தவைகளை தங்களளவில் புடம்போட்டு புதிய பரிமாணங்களை உருவகித்துப் பார்த்தவர்கள். அவர்களுடை ஆன்மீக தேடல் நிச்சயமாய் ஆராதனைகளோடோ, வழிபாடுகளுடனோ சம்பந்தப்படவில்லை. தனிமையையும், நிலைத்திருத்தலையுமே அவர்கள் பிரதானமாய் கருதினர் எனலாம்.

சித்தர்களின் கூற்றுப்படி நமது உடலான ஐந்து நிலைகளை கொண்டது...அதாவது 1.பரு உடல், 2.வளி(உயிர்ப்பு) உடல், 3.மன உடல், 4.அறிவு உடல், 5.ஆன்ம உடல் ...இந்த ஐந்து நிலைகளை கடந்தவரே சித்தராய் ஆகமுடியும் என்றும், இந்த நிலை இறையோடு இறையாய் கலந்த உயர்ந்த நிலை என்றும் இந்த நிலைக்கு அழிவில்லை என்பதாக வலியுறுத்துகிறார்கள். அதாவது சித்தர்கள் அனைவரும் இன்றைக்கும் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர் என்று கூட கொள்ளலாம்.

சித்தர்களின் மரபு எங்கிருந்து துவங்குகிறது என பார்த்தோமானால், முதல் சித்தனாகிய சிவன் தனது இனையான சக்திக்கு குண்டலினி எனும் பிராணயாமத்தை கற்றுக்கொடுத்ததில் இருந்து துவங்குகிறது. சிவனின் நேரடி சீடர்களாய் அகத்தியர், நந்திதேவர், திருமூலர் ஆகிய மூவரைத்தான் சொல்கிறார்கள். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பதும் அதில் இருவர் தமிழகத்திலேயே சமாதியானதாகவும் தெரிகிறது. நந்திதேவர் காசியில் சமாதியானதாய் சொல்கிறார்கள்.

தமிழ் மரபியலில் சித்தர்கள் பதினெட்டு பேர் என்றும், வட இந்தியாவில் 84 பெயரை கூறுகின்றனர். தமிழ் நூலியலில் பதினெட்டு பேர் யார் என்பதில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றன...ஆளாளுக்கு ஒரு பட்டியலை நீட்டினாலும், பா.கமலகண்ணன் என்கிற ஆய்வாளர் இதுவரை ஒரு லட்சம் சித்தர்களின் பாடல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படி சித்தர்களின் எண்ணிக்கை 102 என புதிய தகவலை தருகிறார். மேலும் போகநாதர் எழுதிய 'போக்ர் ஏழாயிரம்' என்கிற நூலின் ஆறாவது காண்டத்தில் 696-953 வரையிலுள்ள பாடல்களில் 42 சித்தர்களை பற்றிய தகவல்கள தரப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

இந்த சித்தர்கள் ஒரே மாதிரியான கோட்பாடுகளை உடையவர்களா என பார்ப்போமெனில் ஆச்சர்யமான சில உண்மைகளை காணலாம்...திருமூலர் போன்றவர்களின் குரல் ஆன்மீக சைவக் குரலாகவும், சிவ வாக்கியர் மாதிரியானவர்கள் இதற்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களாகவும், பட்டினத்தார் போன்றவர்கள் ஆனாதிக்கத்தின் பிம்பமாயும், சிலர் தலித்திய் சிந்தனைக்காரகளாகவும்...ஏன் இடதுசாரி கருத்துக்களை உடையவர்களாகவும் பகுக்க முடியும்....

பொதுவில்....அகங்காரத்தில் இருந்து விடுதலை, தன்னை அறிதல், அதிகாரங்கள், அதிகார மைய்யங்களுக்கு எதிரான போக்கு அல்லது ஆதிக்க எதிர்ப்பு, எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகி தனித்திருத்தல், சடங்குகளை எதிர்ப்பது, வழிபாடுகளை புறக்கணித்தல், தனித்துவமான மருத்துவம், யோகக்கலை போன்றவைகளைன் அடையாளமாகவே சித்தர்களை பார்க்க முடிகிறது....

மேலும் விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்வோம்....

Friday, March 14, 2008

அம்பாஸ்டர் காரு நாலு கோடி ரூவாயாம்..!



பூனாவை சேர்ந்த பிரபல கார் டிசைனர் தீலீப் சபாரியா வடிவமைத்த இந்த அம்பாஸிடர் காரின் விலை நாலு கோடியாம்....ஏகப்பட்ட வசதிகளுடன் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறாராம்....

ம்ம்ம்ம்....என்னைக்கு என்னோட டிசைனர் காரும் இப்படி சுத்தப் போகுதோ....சுத்த வைக்கானும்...ம்ம்ம்ம்ம்

Thursday, March 6, 2008

பறக்கும் சித்தரும், நான் பார்த்த சித்தரும்....

நேற்றைய பதிவுகள் இரண்டும் தமிழச்சியின் புண்ணியத்தால் களை கட்டியது, அத்தனை நெருக்கமில்லாதவங்க, அல்லது அறிமுகமில்லாதவங்கன்னா நன்றியெல்லாம் சொல்லலாம், தமிழச்சி அப்படியா....

டாப்லெஸ் சித்தர் ஒருவர் திருவண்ணாமலையில் பறந்து போன சம்பவத்தை வைத்து ஆயிரக்கணக்கில் தியரிகளை உருவாக்குவார்கள், கருத்து கந்தசாமிகள் ஊடகங்களில் கதை விடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன்.புஸ்ஸ்ஸென போனதில் எனக்கு வருத்தமே....பரவாயில்லை என் பங்கிற்கு நானும் கொஞ்சம் கதை சொல்கிறேன்.

இம்மாதிரி பறப்பதெல்லாம் சாத்தியமே....மந்திர, தந்திர பிரிவுகளில் தனித்தனி உபாயங்களை சொல்லியிருக்கிறார்கள்.. மந்திர முறையில் நிறைய மூச்சு பயிற்சியும், கொஞ்சம் மந்திரங்களும் இருந்தால் போதும். தந்திர முறையில் குழப்பமான ஒரு ரெசிப்பி சொல்லியிருக்கிறார்கள். அதை தயார் செய்வதற்குள் உங்கள் தாவு தீர்ந்து டவுசர் கிழிந்து போவது உறுதி.

சாம்ப்பிளுக்கு ரெண்டு மூனு வரி.....உயிருள்ள பச்சை தவளையின் மூளையை அம்மாவாசை நாளில் மண்சட்டியில் போட்டு ஒரு மண்டலம் வெயிலில் காயவைத்து அத்துடன்.........குமட்டிக் கொண்டு வருகிறதா...இந்த பறக்கும் ரகசியம் முழுமையாக வேண்டுமானால் தலைக்கு பத்து டாலருடன் தனி மெயில் செய்யலாம். பறப்பதும், பரலோகம் போவதும் உங்கள் சாய்ஸ்....

நிஜத்தில் நம்மிடையே இம்மாதிரியான ஆசாமிகள் நிறைய உலவுகிறார்களாம்,தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத அவர்களை கண்டுபிடிப்பதற்கு தனி திறமை வேண்டுமாம், மதுரையில் விஜயராகவன் என்கிற ஒருவரை ஒரு இஸ்லாமிய நண்பர் மூலம் சந்தித்தேன்....அவரின் வீட்டில் கொடிய வறுமை, ஆனால் யாரிடமும் கைநீட்டி காசு வாங்கமாட்டார்.அவரின் பேச்சும் செயலும் கடைசி வரை மர்மமாகவே இருந்தது. பத்து சூரியன் இருப்பதாகவும், அதில் எட்டு சூரியன் பார்த்துவிட்டேன் என்பார்.

நாம் நினைப்பதை மடமடவென சொல்லிவிட்டு சிரிப்பார், அவருக்கு போன் பண்ணனுமா ஏன் உங்க காச செலவு பண்றீங்க அவரயையே கூப்டசொல்றேன் என்பார், சற்று நேரத்தில் சம்பந்தப்பட்டவர் நம்மை கைபேசியில் அழைத்து, ஆச்சர்யப்படுத்துவார்...நினைத்த மாத்திரத்தில் தன்னால் எங்கேயும் போகமுடியும் என்றும், எங்கே என்ன நடக்கிறது என்பதை உட்கார்ந்த இடத்திலிருந்தே சொல்லியும் பல சமயங்களில் ஆச்சர்ய படுத்தியிருக்கிறார்.

மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு ஹோட்டல் கட்ட ஆரம்பித்தார்கள்(பெயர் வேண்டாமே!), வேலை ஆரம்பித்த முதல் நாளில் அந்த இடத்தின் உரிமையாளர் இறந்து போக, அதை இன்னொருவர் வாங்கி வேலை ஆரம்பிக்க அவர் மகன் இறந்து போக...பதறிப் போய் இன்னொருவரிடம் விறக்...புதியவர் வேலை ஆரம்பிக்க பள்ளம் தோண்டிய கூலித்தொழிலாளி ரத்தம் கக்கி செத்து போக....கொஞ்ச நாட்களுக்கு பின்னர் ஒரு இஸ்லாமியர் தைரியமாய் அந்த இடத்தை சல்லிசாக வாங்கினார்.....சில நாட்களில் அவரின் தாயார் மரணித்துப் போக.....இந்த சமயத்தில்தான் என் நண்பர் விஜயராகவனிடம் அதை சொன்னார்.அந்த இடத்திற்கு என்னை கூட்டிப்போ எனறார்.

எதை தின்னால் பித்தம் தெளியும் என்றிருந்த இடத்துக்காரர் வண்டியணுப்பி கூட்டிப்போனார். இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது....வெறும் காலுடன் அந்த காலி மனையை சுற்றி சுற்றி வந்தவர்...எனக்கு கொஞ்சம் கல் வேண்டும் என்றார். கற்களை அந்த மனையில் ஐந்தாறு இடத்தில் போட்டார்.....பின்னர் உரிமையாளரிடம் வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டி வந்து இரவு பதினோரு மணிக்கு மேல் இந்த இடத்தை தோண்டு, எலும்புக்கூடுகள் கிடைக்கும் அதை சுடுகாட்டில் வைத்து எரித்துவிடு என சொல்லி விட்டு போய்விட்டார்.

சொன்ன மாதிரியே வெளியூர் ஆட்கள் குறிப்பிட்ட இடங்களை தோண்ட குவியல் குவியலாய் எலும்புக்கூடுகள்....அதை அவர் சொன்ன மாதிரி செய்தபின்னர்...எந்த கெடுதலும் இல்லை.இன்றைக்கு அந்த இடத்தில் ஒரு லாட்ஜ் இருக்கிறது....இதற்காக அந்த மனிதர் காசு எதுவும் வாங்கவில்லையென பின்னர் கேள்விபட்டேன்.புரியாத மறைமொழிகளில் ஏதாவது பிதற்றிக் கொண்டிருப்பார்.உங்களுக்கு புலனாகாத உலகம் ஒன்று உங்களுடனே இருக்கிறது.....நீங்கள் கட்டிறுக்கியதால் கட்டுடைத்த உலகம் அது என்பார்.....

என்னாங்கடா ஓவரா படம் காட்றீங்கன்னு மனதில் நினைத்த கணத்தில்....நீ குருவின் அம்சம், உனக்கு அப்படித்தான் தோன்றும் தப்பில்லை என்பார். திடீரென ஒரு நாள் என் இடத்துக்கு வந்தவர், ஒரு பேப்பர் குடு என வாங்கி...சர சரவென கட்டங்கள் வரைந்தார். அதில் என்னென்னவோ கிறுக்கினார். இதை பத்திரமாய் உன் பர்ஸில் வைத்துக் கொள், இந்த காகிதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதே...அடுத்த பதினோரு மாதத்தில் உனக்கு ஒரு பெரிய ஆக்ஸிடண்ட் காத்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டாயானல் பிழைத்தாய், நிறைய தர்மம் செய் அப்புறம் உன் பாடு என சொல்லிவிட்டு விடுவிடுவென போய்விட்டார். இன்றைக்கும் அந்த காகிதம் என் பர்ஸில்....

நீங்கள் சித்தரா என கேட்டால் சிரிப்பார்....நான் வழிப்போக்கன்...கொஞ்ச நாள் உன்னுடன் வருவேன், உன் பேரனும் கூட என் வழியில் வருவானாய் இருக்கும்...யார் கண்டது என சொல்லி சிரிப்பார்.இன்னமும் நிறைய எழுதலாம் இந்த மனிதரை பற்றி.....பிரிதொரு சமயத்தில் விலாவாரியாய் இந்த மனிதரை பிரித்து மேய்வோம்.....

இதே மாதிரி இன்னொரு மனிதரையும் சந்தித்திருக்கிறேன்...நான் பொதுவில் கவனித்த விசயம், இவர்கள் யாருடனும் இணங்கியிருப்பதில்லை, பரிசோதனைகளில் நாட்டமிருப்பவர்களாய் இருக்கிறார்கள். எளிதில் யாரையும் தங்கள் அன்மையில் நெருங்கவிடுவதில்லை....ஒரு விதமான தாழ்வு மனபான்மையுடையவர்களாய் இருக்கிறார்கள். குரு வழிபாட்டினை மிகத்தீவிரமாய் அனுசரிக்கின்றனர்.

(இதை படிக்கிற கணத்தில் உங்களுக்கு பிடித்த மணம் உங்களை சூழும் பட்சத்தில் நீங்கள் என்னையும் ஒரு சித்தராக நினைத்துக் கொள்ளலாம். இரண்டாம் சொக்கன்ற பேர் உங்களுக்கு பிடிக்கலை, வேற எதுனா பேர் வைக்கனும்னு தோணினா போலி சித்தர்...னு வச்சுக்கோங்க....ஹி..ஹி...)

Wednesday, March 5, 2008

*வயதுக்கு வராதவர்கள் இதை படிக்கவேண்டாம்....

பதிவெழுதி நாளாகிவிட்டது....ஆனால் தினமும் பதிவெழுதும் ஒரே பதிவரும் நானாகத்தான் இருப்பேன்.

என்ன கொடுமையிது சரவணா....

புரியாதவர்கள் மெனக்கெடாமல் தொடர்ந்து படியுங்கள். சுஜாதா போய்விட்டார், போனால் என்ன?, நானிருக்கிறேன் கவலைபடாதீர்கள் என யாராவது சொல்வார்கள் என பார்த்தேன்....ஒப்பாரி வைத்தவர்களையும், சவ ஊர்வலத்தில் டான்சாடியவர்களையும்தான் பார்க்க முடிந்தது.

நான் இருக்கிறேன் கவலைபடாதீர்கள்....

கடந்த சில நாட்களாய் பலான வார்த்தைகளை வைத்து தலைப்புகள் செய்வதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மதுரைபக்கம் புழங்கும் அத்தனை கெட்டவார்த்தைகளும் அத்துபடியாகையால் அதை வைத்து சில தலைப்புகளை யோசித்தேன். அதையெல்லாம் இங்கே சொன்னால் ஆபாசமே உன் பெயர்தான் இரண்டாம் சொக்கனாவென கொதித்தெழுவதைப் போல நடிப்பீர்கள்.தேவையா அதெல்லாம்....

தமிழச்சியின் பெயர் *****...வாம், வித்தியாசமான பெயர், விடாது கருப்பின் பதிவில்தான் இதை தெரிந்து கொண்டேன்.விடாது கருப்பாக காட்டபடும் சதிஷ் என்பவர் அப்பாவியாம், பின்னனியில் போலி டோண்டுதான் எழுதுகிறாராம்....இப்போது அவரின் பெயரை சுருக்கி செல்லமாய் 'போடோ' என்று எழுதுகிறார்கள்.இதன் மூலம் பெரியவர் டோண்டுவின் கோபத்திற்கு ஆளாகவேண்டாம் என சம்பந்தபட்டவர்களை எச்சரிக்கிறேன்.

ஒருவரின் எழுத்து நடையை திருடிக் கொள்ள முடியுமானால் இரண்டு பெண் பதிவர்களின் நடையை தைரியமாய் திருட ஆசையாய் இருக்கிறது, ஒருவர் இப்போது தமிழில் பதிவே எழுதுவதில்லை, மற்றவர் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார். யார் என தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம். சரியாய் சொல்பவர் கனவில் நமீதாவை வர வைக்கவேண்டியது என் பொறுப்பு. சரியாய் சொல்லும் பெண் பதிவர்களின் கனவில் யாரை வரவைக்கலாம்....இதை முடிவு செய்யும் பொறுப்பை சர்வேசன் கையில் கொடுத்துவிடலாம். போட்டிகளுக்கு தலைப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் மனிதர்.

எனக்கென்னவோ அடுத்த இந்திய பிரதமராக சந்திரபாபு நாயுடுதான் வருவார் என தோன்றுகிறது. காங்கிரஸும், அ.தி.மு.க வும் வேண்டா வெறுப்பாய் வெளியில் இருந்து ஆதரவு தரும். வழக்கம் போல கலைஞரின் ஆட்கள் மத்திய மந்திரியாய் தொடருவார்கள்....ஈழச் சகோதரகளுக்காக கலைஞர் தொடர்ந்து கவிதை எழுதுவார். நெடுமாறனும், வைக்கோவும் தங்கள் உடல் நலத்தினை பேணும் பொருட்டு நடைபயணம், உண்ணாவிரதமென உதார் விட்டுக் கொண்டிருப்பர்கள் என்றே தோன்றுகிறது.

இந்தியாவின் தயவில்லாமல் இலங்கை பிரச்சினையை தீர்த்துவிட முடியாது என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொண்ட அளவிற்கு புலிகள் உணரவில்லையோவென அவ்வப்போது தோன்றுகிறது. மகிந்த ராஜபக்ஷே இந்திய நடுவன் அரசிற்கு நன்றாக குல்லா போட்டு ராணுவ அனுகூலங்களை அள்ளிக் கொண்டு போகிறார். புலிகள் இன்னமும் வைக்கோ, நெடுமாறன்...இப்போது புதிதாய் முளைத்திருக்கும் திருமா,போன்ற மண் குதிரைகளை வைத்துக் கொண்டு என்ன செய்துவிடப் போகிறார்கள் என தெரியவில்லை.

சிதம்பரம் கோவில் பூசாரிகளை இந்திய மல்யுத்த அணியில் சேர்த்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பலாம், நன்றாய் குஸ்தி போடுவார்கள்,தில்லையம்பலத்தான் அருளால் மெடல் வாங்கினால் எல்லாருக்கும் பெருமைதானே,

ஜோதா அக்பர் படத்தினை கையில் வைத்துக்கொண்டு பார்க்க நேரம் கிடைக்காமல் நாலைந்து நாளாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன். என்ன வாழ்க்கையிது....

இனி இந்த மாதிரி இலக்கில்லாமல் எழுத நினைத்திருக்கிறேன்....ஆதரவு குடுக்காதீங்க!

*இந்த மாதிரி தலைப்பு வச்சாத்தான் இங்க குப்பை கொட்ட முடியும்னு தோணினதால...

வாசக்கதவ டாலர்லட்சுமி தட்டுகிற நேரமிது...!

தமிழ் பதிவுகள்ல கூகில் அட்சென்ஸ் விளம்பரங்களுக்கு வாய்ப்பில்லைன்னு தெரிஞ்ச உடனே Bidvertiser விளம்பரங்களை பதிவுல இனைச்சேன்....விளையாட்டா செஞ்சது இப்ப 49 டாலருக்கு வருமானம் வந்திருக்கு. அதுலயும் 37 டாலர் என்னோட பேபால் அக்கவுண்ட்க்கு வந்திருச்சு.

ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னுன்னு பதிவெழுதுற எனக்கே இத்தனை வருதுன்னா, டெய்லி பதிவு, எதிர்பதிவு, சூடான பதிவுன்னு போட்டு தாக்குற மக்களுக்கு எம்புட்டு வருமானம் வரும்....யோசிங்கப்பேய்...

சல்லிசா காசு வருது...வேணாம்னு ஏன் சொல்றீங்க....ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

அப்புறம் முக்கியமா ஒரு எச்சரிக்கை, நம்ம பதிவுதானேன்னு நாமளே வெளம்பரத்த சொடுக்கினோம்னா மொதவாட்டி எச்சரிக்கை அப்பால நம்ம கணக்க தீர்த்துருவாய்ங்க...அதுனால நம்ம ஏரியாவுக்குள்ள வர்றவுக தட்டினாத்தான் நமக்கு காசு...சரியா

சேரணும்னு விருப்பபட்டா கீழ இருக்கிற தொடுப்ப தட்டி போய் சேருங்கப்பா...ஏதோ ரெஃபரல் ப்ரொகிராம்னு சொல்றாய்ங்க...அதுல எம்புட்டு தேறுதுன்னு பார்க்கிறேன்.





Tuesday, February 26, 2008

வானில் பறந்த சித்தர்....

திருவண்ணாமலையில் சித்தர் ஒருவர் வானில் பறந்ததை ஒரு மின்வாரிய ஊழியர் தனது அலைபேசியில் படம் பிடித்திருப்பதாக ஜெயா டிவி செய்தியினை இன்றுதான் பார்த்தேன்....



கொஞ்சம் சுவாரஸ்யமான படத்துணுக்கு இது....இது குறித்து விரிவாக எழுத என்னிடம் தகவல்கள் நிறையவே இருக்கிறது...நேரம்தான் இல்லை...

எனவே படத்துணுக்கினை பார்த்து ரசிக்குமாறு(!) வேண்டுகிறேன்.

மேலேயுள்ள படத்துணுக்கு தெரியாதவர்களுக்காய் இந்த யுட்யூப் தொடுப்பு...இது அத்தனை தெளிவாக இல்லை...

Tuesday, February 19, 2008

இதக் கேட்டீங்களா....

மொதல்ல இந்த பாட்ட கேளுங்க....நம்ம ஆளுங்க நெறய பேர் மறந்து போன பாட்டு இது....என்னால மறக்கவே முடியாத பாட்டு...ம்ம்ம்...

இந்த படத்த எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது...அந்த வயசுல அப்படி ஒரு கிறுக்குத்தனமா பார்த்த படம்....அதுக்கு நெறைய காரணமிருக்கு...ஹி..ஹி..

என் வரையில் ஹிந்தியில வந்த அருமையான காதல் பாடல்கள்ள இதுவும் ஒன்னு...நம்ப எஸ்.பி.பி யும் லதா மங்கேஷரும் குழைந்து,இழைந்து,கரைந்து போயிருக்காங்க...



இன்னொரு லிங்க்

சல்மான்ககன் சுரத்தே இல்லாம பாடி வெறுப்பேத்தினாலும், நம்ம மாதுரி பூவா மலர்ந்திருக்காங்க...பாருங்க பார்த்துட்டு சொல்லுங்க....

நம்ம டாக்டரம்மாவுக்காக இங்க ட்ரான்ஸ்லேஷனும் கொடுத்திருக்கேன்....எப்டி இருக்குன்னு கேட்டுட்டு சொல்லுங்க.....
ham aapke hai.n kaun...Who am I to you?...
bechain hai merii nazarMy gaze is restless
hai pyaar ka kaisa asarWhat an effect love has on me!
na chup raho itna kahoDon't stay quiet; tell me at least this much:
ham aapke...aapke hai.n kaunWho am I... who am I to you
khud ko sanam roka baDaSo many times I stopped myself, beloved
aakhir mujhe kahana paDabut at last, I had to speak
khwaabo.n me.n tum aate ho kyo.nWhy do you enter my dreams?
ham aapke...aapke hai.n kaunWho am I... who am I to you
bechain hai merii nazarMy gaze is restless
hai pyaar ka kaisa asarWhat an effect love has on me!
hai hosh gam puuchho na tumIt is a constant worry; don't ask me
ham aapke...aapke hai.n kaunwho I am... who I am to you
kaise kahuu.n dil kii lagiiHow shall I tell you of my heart's desire?
chehara mera paDH lo kabhiiRead my face sometime
yeh sharm kii surkhii kaheThe blush on my face may tell you
ham aapke...aapke hai.n kaun...who I am...who I am to you

Sunday, February 17, 2008

யாரு யாரை காப்பி அடிச்சிருக்காங்க?



Tuesday, February 12, 2008

காதலிக்க நேரமில்லை...ம்ம்ம்ம்


காற்றில் ஆடும் முடிகளுக்கு
கருணையற்ற மனது
கவிதை பேசும் இதழ்களுக்கு இரக்கமற்ற இயல்பு
தழும்பவைக்கும் தேவதைக்கு
தவமிருக்கும் கண்கள்
குலுஙக வைக்கும் குறும்புகளோ
கிறங்க வைக்கும் தென்றல்
அகன்ற நெற்றி அலைபாயும் விரல்கள்
அகலாமல் நிற்கும் புருவங்கள்
இவையனைத்தும் நிறைந்தவள் என்னவளே.


தரையில் படாமலிருக்க
பாவாடையை
தூக்கிப் பிடித்து நடக்கிறாய்
உன் பாதங்களே
தரையில் நடக்கும் போது
பாவாடையை காப்பாற்றி
என்ன செய்து விடப் போகிறாய் !!!!



ஒன்றாய் கரைகிறோம்
உன் பெயரை
எழுதும் போது நானும்
எழுதி முடித்தபின்பு
படிக்கும் போது நீயும்



இன்னும் நிறைய எழுத ஆசைதான்....நேரமில்லை...ம்ம்ம்ம்ம்ம்....

(இங்கு குறிப்பிடபட்டிருக்கும் கவிதைகள் என்னுடையவை அல்ல....)

Monday, February 11, 2008

வட்டவட்டமா யோசிச்சப்ப்ப.....

ஏதோ ஆர்வகோளாறுல நானும் கலந்துக்கறேன்னு ரெண்டு மூணு படத்தோட போட்டிக்கு வந்தேன், திருவிளையாடல் நக்கீரர் கணக்கா சபையில எல்லாரும் உன் போட்டாவுல குத்தம்னு சொல்லீட்டீங்க...மனசே கேக்கலை...

ஆஹா மொதவாட்டியே இப்டி குப்றிக்கா வுளுந்துட்டோமேன்னு ரொம்ப ஃபீல் ஆகி, என்ன படம் போடலாம்னு யோசிச்சப்ப....எங்க ஏரியா வட்டச்செயலாளர் படத்த எடுத்து போடலாம்னு பொறி தட்டுச்சி, அப்புறம் நீங்கள்லாம் இந்த புள்ளைக்கு இம்பூட்டு அறிவான்னு மூக்கு மேல வெரலவச்சி கண்ணு போட்டுட்டா என்ன பண்றது...ஹி..ஹி...

அதான் எல்லார் மாதிரி நாமளும் வட்டமா தெரியற நாலஞ்சு ஐட்டத்த புடிச்சிபோடுவோமேன்னு போட்ருக்க்கேன்.....

இந்த படமெல்லாம் ஒரு தயாரிப்பும் பண்ணல....நம்ம அலைபேசி கருணையால சுட்டது...இதை எப்படி போட்டீல இனைக்கறதுன்னு தெரியல....ஆராச்சும் சொல்லி குடுங்க...
















Thursday, February 7, 2008

பிப்ரவரி மாத புகைப்பட போட்டிக்கு நம்ம மொய்....






இங்க சபையில எல்லாரும் படங்காட்றாங்க...நாம மட்டும் தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கமேன்னு தோணிச்சி, எல்லாரும் நல்ல நல்ல காமெரா வச்சி சூப்ப்ரா எடுக்கறாங்க, நமக்கு அதுக்கெல்லாம் கொடுப்பினையில்லையா....அதான் நம்ம கைபேசி கேமராவுல எக்க்க்க்க்க்க்க்கச்சக்கமா சுட்டதுல இது ரெண்டுதான் தேறிச்சி...அதை சபை நடுவுல வைக்கிறேன்....எல்லாருமா சேந்து இந்த தடவ சிறந்த வளரும் கலைஞன்(?) அப்டீன்ற பட்டத்த எனக்கே கொடுக்கனும்னு பணிவா கேட்டுக்கறேன்....ஹி..ஹி....

Wednesday, February 6, 2008

நான் மீன் பறவைகள் - 3

மீன் வளர்த்து பெரிய மீன் யாவாரியாகி விடுவது என முடிவுபண்ணி, தீவிரமா தொழில்ல குதிக்கறதுக்கு முன்னால சோதனை முறையில வளர்க்கலாம்னு இடம் தேடினப்போ, எங்க பண்ணை வீட்ல ஆசை ஆசையா கட்ட ஆரம்பிச்சி,குடும்பத்துக்குள்ள நடந்த குத்து வெட்டு(சொத்து தகராறுங்கோவ்)காரணமாய் பாதியிலயே நின்னுபோன நீச்சல்குளம்தான் நினைவுக்கு வந்துச்சி.

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிரலாம், நீச்சல் குளத்தை யூஸ் பண்ணின மாதிரியும் ஆச்சு, வீட்ல இருக்கறவய்ங்கள வெறுப்பேத்தின மாதிரியும் ஆச்சுன்னு அந்த குளத்துல தண்ணீர் நிரப்பினேன்.மீண்டும் விதைபண்ணை, பெரியவரிடம் ஆலோசனை....கெளுத்தி மீன் வளக்கலாம்னு சொன்னார், ஆனா அப்ப அவங்ககிட்ட எனக்கு தர விதைகள்(!) இல்லை...அத்தனை டிமாண்ட். பக்கத்துல இருக்கிற இன்னொரு பார்ஃம்ல கேட்டா, அவங்க ஒரு வாரம் தள்ளி வரச்சொன்னாங்க....போனேன்.

கொல்கொத்தாவுல இருந்து வந்திருச்சி, கொஞ்சம் பொறுங்க இப்ப வந்துரும்னு சொன்னாங்க...கவுண்டர் மாதிரி அடங்கொக்கமக்கா வெஸ்ட்பெங்கால்ல இருந்து லாரில கொண்டு வர்றாய்ங்களா...வெளங்குன மாதிரித்தான்னு நினைச்சிட்டு உக்காந்திருந்தேன். லாரியும் வந்துச்சு, பெரிய பெரிய அட்டைபெட்டி நீட்டா பேக் பண்ணி ஜெட் ஏர்வேஸ் ஸ்டிக்கரோட....மக்களே நம்புங்க எல்லாம் ப்ஃளைட் வந்திருக்கு....அப்படீன்னா எந்த அளவுக்கு டிமாண்ட்னு யோசிங்க....

ஒரு மணி நேரத்துல அங்க ஒரு மீன் குஞ்சு கூட இல்லை, அத்தனையும் வித்து போச்சு, நான் 2000 கெளுத்தி மீன் குஞ்சு, ஒவ்வொன்னும் 2 ரூபாய்க்கு வாங்கீட்டு வந்தேன்.இனையத்துல மேய்ஞ்சு, அமெரிக்காவுல எப்ப்டி வளக்குறாக, ஐரோப்பாவுல எப்படி வளக்குறக, ஆஸ்த்ரேலியாவுல எப்படி வளக்குறாகன்னு அதிமுக்கியமான தகவல் எல்லாந் திரட்டினேன். என்னுடைய ஜூனியர்ஸ் தவிர வீட்டில் யாரும் இந்த முயற்சியை ரசிக்கவில்லை. நாம இதையெல்லாம் கண்டுக்கற நிலமையில இல்லை....என் இனிய மீன் குஞ்சுகளுக்காய் டயட்சார்ட் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருந்தேன்.....

இப்ப சில தொழில் ரகசியங்கள்.......


இந்த வகை மீன்கள் மூன்றடி அழமுள்ள நீர் நிலைகளில் நன்கு வளரும்.
எத்தனைக்கு எத்தனை பெரிய இடத்தில் வளர்க்கிறோமோ அத்தனை பெரியமீன்களாய் வளரும்.
முதல் மூன்று மாதங்களுக்கு கோதுமை தவிடும், அதன் பின்னர் தேங்காய் புண்ணாக்கும்தான் இவர்களின் டயட்.

ஆறு மாதத்திற்கு பின்னால் கோழிக்குடல் மாதிரியான அசைவ ஐட்டங்களை கொடுக்கலாம்.

மாதத்திற்கு ஒரு முறை புதிய நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூளை கரைத்து குளத்தில் பரவலாய் தெளிக்க வேண்டும்.

ஆறு மாதம் கழித்து மாதம் ஒரு தென்னைஓலையை மட்டையுடன் தண்ணீரில் போட வேண்டும்.மீன்கள் அதில் தேய்த்துதான் தங்கள் தோலை சுத்தப்படுத்திக் கொள்ளுமாம்.


ஒரு வழியாக அமர்களமாய் மீன் வளர்க்க ஆரம்பித்துவிட்டேன், புது பொண்டாட்டிய சுத்தி வர்றவன் மாதிரி நீச்சல் குளத்தையே சுத்தி சுத்தி வந்தேன்...ஹி..ஹி..காலை மாலை இரண்டு வேளையும் நானே தவிடு போட்டேன்...கும்ப்லாய் வந்து கபகபவென சாப்பிடும் அழகே அழகு....எத்தனை டென்சன் இருந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருந்தால் மனம் லேசாகிவிடும்.

இந்த நேரத்தில்தான் இந்த பதிவின் தலைப்பில் உள்ள மூன்றாவது ஆசாமி உள்ளே நுழைகிறார்...ஆமாங்க பறவைகள்....அங்கே நிறைய மாமரங்கள் இருப்பதால் நிறைய அணில்களும், சிறிய குருவிகளையும் பார்த்திருக்கிறேன்....நான் மீன் வளக்க ஆரம்பிச்சது எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல...கூட்டம் கூட்டமா கிங்பிஃஷர் என்ன, கொக்கு என்னன்னு...களை கட்ட ஆரம்பிச்சிருச்சி....

குளத்தை சுத்தி தனியா சிக்கின ஹீரோயினை கண்ணில் காமம் கொப்பளிக்க நெருங்கும் வில்லன்களாட்டம் மேற்படி பறவைகள்....என் கண்ணு முன்னாடியே ஏதோ சர்க்கஸ்ல வித்தை காட்ற மாதிரி சொய்ங்னு தண்ணிக்குள்ள டைவ் அடிக்கிறதென்ன...அலேக்கா மீனை வாயில கவ்வீட்டு போறதென்ன....

ஆஹா, இந்த ரேஞ்சுல போனா மொத்த மீனும் ஒரு வாரம் கூட தாங்காது போலயேன்னு டென்சனாய்டுச்சி....பின்ன நம்ம முதலீட்டை தூக்கீட்டு போறாய்ங்களே....ஹி..ஹி...என்னை விட நம்ம பெரிய ஜீனியர்தான் டென்சனாய்ட்டார்.டோர் போட்டு மூடிடலாம்ப்பா,பெரிய ஷீட் வாங்கி கவர் பண்ணீரலாம்னு ஐடியா கொடுக்க, நான் கவலையோடு அதன் சாத்தியங்களை(!) ஆராய ஆரம்பித்தேன்.நம்ம ஹைகமாண்ட் வேற, இத்தனை பறவைங்களுக்கு சாப்பாடு போடுறீங்க எல்லாம் உங்களுக்கு புண்ணியம்தானேன்னு சிரிக்காமல் சீரியஸா பேசி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

கொசுவலை வாங்கி மூடிடலாம்னு யோசிச்சேன், ஆனா கிங்ஃபிஷர் பாயுற வேகத்துக்கு அதெல்லாம் ஜுஜ்ஜிபி, என்ன செய்யலாம்னு குறுக்கு நெடுக்கா கயிறு கட்டி வச்சேன், பயபுள்ளைக அந்த கேப்ல கச்சிதமா போய் மீன அள்ளீட்டு வந்தாய்ங்க....அப்பத்தான் ஒருத்தன் Green House Farming க்கு யூஸ்பண்ற நெட் வாங்கி கட்டீரலாம்னு சொன்னான்.உணக்கு புண்ணியமா போகும்டான்னு நினைச்சிட்டு பாரிஸ்ல நெட் வாங்க அலைஞ்சேன்...

இந்த கேப்ல இன்னொன்னு நடந்து போச்சு, நம்ம ஜூனியர் நம்மள விட டென்சனாகி தாத்தாவிடம் புலம்ப, பேத்தி இம்புட்டு கவலைபடறாளேன்னு டென்சனாகி அடுத்த நாள் ரெண்டு பேரும் காலங்காத்தால போய்ட்டாங்க, ச்சும்மா போகலை அவரோட பிஸ்ட்டலை எடுத்துட்டு...சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளீருக்காங்க, ரஷ்யன் பிஸ்டல் வச்சி கொக்கு சுட்ட பேஃமிலின்னு சரித்திரதுல இடம்பிடிச்சி பேத்தி முன்னால அவர் ஹீரோவாகிட்டார். அஞ்சாறு கொக்கு காலி, நல்லவேளை கிங்ஃஃபிஷர் ஒன்னும் சிக்கலை...

இதெல்லாம் எனக்கு தெரியாது.... வாட்ச்மேன் சொல்லித்தான் தெரியும்,எல்லா கொக்குகளும் வாட்ச்மேனுக்கு பரிசளிக்கப்பட்டதால் மனுசம் ர்ரொம்ப ச்ந்தோஷமா இருந்தார்....ச்ச்சே இப்படி ஆய்டுச்சேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்...ஒரு வழியா மொத்த குளத்தையும் கவர் பண்ணி வலை விரிச்சாச்சு...என்ன கொஞ்சம் செலவு அதிகம்....சோதனை முறையில பண்ணும் போது இதெல்லாம் சகஜமப்பான்னு சமாதானமானேன்...இழந்த மீன்களை ஈடுசெய்ய மேலும் ஐநூறு மீன்களை வாங்கிவிட்டேன்.

தினமும் இரண்டு மூனு கிங்ஃபிஷராவது வலையில் மூக்கு மாட்டிகிட்டு கிடக்கும், எடுத்து விடுவாங்க....அதுக்கப்புறமும் பறவைகள் மொய்க்கிறது குறையல...அப்பத்தான் குஜராத்ல ஒருத்தர் பறவைகளுக்காகவே ஒரு பெரிய பழத்தோட்டம் வச்சிருக்கார்னு ஒரு நியூஸ் படிச்சேன்....எல்லா பழ மரங்களையும் வள்ர்த்து அத்தனையும் பறவைகள் மட்டுமே சாப்பிட விட்டிருக்கார்.

அந்த அளவுக்கு இல்லைன்னாலும், நம்ம லெவலுக்கு செய்வோம்னு அந்த குளத்துக்கு பக்கதுலயே ஒரு கால் ஏக்கர் அளவுக்கு உழுது துவரை விதைச்சேன்...துவரை சீக்கிரமா வளர்ந்துரும்...ரெண்டு மூனு மாசம் கழிச்சி சொன்னா நம்ப மாட்டீங்க...அவ்ளோவ் பறவைகள்...ஓரே சமயத்துல இருநூறு முன்னூறு கிளியெல்லாம் நான் அப்பத்தான் பார்த்தேன்....

ரொம்ப பெரிசா போய்டுச்சோ...அடுத்த பதிவோட முடிச்சிர்றேன்.....

Tuesday, February 5, 2008

Who is the BEST - Infosys, Wipro or TCS?

One day, three consultants, one from Wipro, one from Infosys and one from TCS, went out for a walk. "Why don't we prove who is the best among ourselves?"

Why not, said the other two. The Infosian said "Let's have a test. Whoever makes this monkey laugh, works for the best firm".

Being a pure logical strategist, the person from TCS tried to make the monkey Laugh by telling jokes. The monkey stayed still. As a morepractical consultant, the Wipro guy tried to make funny gestures... No good, the monkey stayed put. Now, comes the Infosian. Being the practical guy he was always trained to be, he whispered something into the monkey's ear, and it burst out laughing at him. The other two were astonished.

So the Wipro guy said "OK, let's take another test. Let's make this

monkey cry!!" So there they went again, applying the same methods as before. The TCS guy narrated sad stories, the Wipro guy made sad gestures, and they failed again. Then, the Infosian again whispered something into the monkey's ear and , oh! It started crying, patting the Infosian's shoulder! The other two justcould not believe their eyes! So the tcs guy said "OK, you've won twice. If you can win just this one, we will bow to you. Let's make this monkey run".

And he barked at the monkey and ordered him to run. Of course, it stayed where it was.. The Wipro guy, true to his type, pushed and prodded the monkey- still No go. So...here comes Infosian, again, and whispers into the monkey's ear. The Monkey just takes off! It runs and runs as fast as it can, as if it was scared to death! The other two surrendered.

They Said: "OK, we give up. You're the best among us, and you work for

the Best firm of the three. But please, please tell us your secret," they begged him.


"Well", said the Infosian , "The first time I made it laugh, I told I work for Infosys . The next time, I told the monkey how much I get paid...so it started crying. And then I told that I was here for recruitment !!!"

பொழுது போவலை...அதான்...

Sunday, February 3, 2008

தமிழச்சிகளுக்கு எச்சரிக்கை....

ஆம், தமிழச்சிகளுக்கு இது எச்சரிக்கைதான், இந்த மட்டிலாவது நிஜங்களை ஜீரணித்துக் கொண்டு தங்கள் நலனை காத்துக்கொள்ள வேண்டியே இந்த எச்சரிக்கை.தமிழச்சிகள்(நன்றாக கவனிக்கவும் தமிழச்சிகள்) இப்போதாவது சுதாரித்துக் கொண்டு தங்கள் உடல் நலனை பேணுமாறு வேண்டுகிறேன்.



வர வர ஸ்லிம்மான தமிழச்சிகளையே பார்க்க முடிவதில்லை என்கிற கவலையால் இந்த பதிவு....ஹி..ஹி...ஆமா நீங்க என்ன நினைச்சீங்க....

Saturday, February 2, 2008

நான் - மீன் - பறவைகள் - 2

ஒரு மாதத்திற்கு இந்த மீன் மேட்டரை மறந்தேவிட்டேன்....அப்புறம் ஒரு நாள் ஏதோ ஒரு வேலையாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் போயிருந்தேன்,வேலை மதியம்தான் முடியும் போலிருந்தது....என்ன கொடுமையிதுன்னு யோசிச்சப்பதான் பூண்டி மீன்விதை பண்ணை நியாபகத்துக்கு வந்தது, சரி ஒரு எட்டு போய் அங்க என்னதான் இருக்குன்னு பார்த்துட்டு வருவோம்னு போனேன்.

திருவள்ளூரில் இருந்து பிரிந்து செல்லும் கிளைச்சாலையில் பூண்டி நீர்தேக்கத்தின் கரையோரமாய் ஒரு இரண்டு கிலோமீட்டரில் அந்த விதைபண்னை இருந்தது. சின்னதாய் ஒரு கட்டிடம் அதன் முன்னால் கயிற்று கட்டிலில் ஐம்பதுகளில் ஒரு மனிதர்.என்னடா இது அரசு மீன் விதைபண்ணைன்னு விசிட்டிங் கார்ட் குடுத்தாங்க...இங்க ஒரு பெரிசு உக்காந்திருக்காரேன்னு போய் விசாரிச்சேன். கொஞ்ச நேர பேச்சு வார்த்தையில் சிநேகமாகிப் போனார் பெரியவர்.

விவரம் கேட்க ஆரம்பித்த என்னை,மொதல்ல உள்ள போய் ஒரு ரவுண்டு பார்த்துட்டு வாங்கன்ன்னு சொல்லி வேலையாள் ஒருவரை அனுப்பினார்.கட்டிடத்தை தாண்டி அந்த பக்கம் போனால் திகைத்த்துப் போய் விட்டேன்...ஏறத்தாழ நாற்பது ஏக்கரில், குறைந்தது நூறு குளங்களாவது இருக்கும், ஒவ்வொன்றும் கால் ஏக்கர் அளவில்...ஒவ்வொன்றுக்கும் நம்பர் போட்டு, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி வாயை பிளந்து கொண்டு சுற்றி வந்தேன்.


இந்த நேரத்தில் நன்னீர் மீன்கள் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும்....

நன்னீர் மீன் வளர்ப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் நாம் இருக்கிறோம், முதல் இடத்தில் சீனா...அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையேயானது.

கெண்டை, கெளுத்தி, விரால், மடவை, கொடுவா போன்ற இனங்களே பெருவாரியாய் வளர்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், ஊரில் உள்ள குளங்கள், ஏரிகள், அனைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

தற்போது நிறைய கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் ஏரி/குளங்களை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியாமல், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து குஞ்சுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன


அவர்கள் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா பக்கமும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். உள்ளே தொழிற்சாலை மாதிரி பரபரப்பாய் வேலை நடக்கிறது.நம்ப முடியாமல் பெரியவரிடம் திரும்பினேன். வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பதாயும், மாதத்திற்கு குறைந்தது பத்து லட்சம் ரூபாய்க்காவது உறுதியான வியாபாரம் இருப்பதாய் வெளிப்படையாக பேசினார். ஏனோ பெரியவருக்கு என்னை மிகவும் பிடித்துப் போயிருந்தது. சுடச்சுட மீன் குழம்போடு சாப்பாடு...புளிப்பு தூக்கலான அந்த மீன் குழம்பு இப்போது இதை எழுதும்போது கூட வாயில் நீர் ஊறுகிறது.

முதல் முறை பார்த்துவிட்டு திரும்பும் போது என்னை வெறுங்கையோடு அனுப்பக்கூடாது என பத்து வளர்ந்த கெளுத்தி மீனை கொடுத்தார்....ஒவ்வொன்னும் இரண்டு கிலோவாவது இருக்கும், மார்க்கெட்டில் கிலோ 80-120 வரை விலைபோகும்.திரும்பி வரும் வழியெல்லாம் ஒரே மீன் வளர்ப்பு பத்தின யோசனைதான்...ஒரு படத்தில் எஸ்.வி.சேகரும், பாண்டிய ராஜனும்....மாடு வளர்த்து கோடீஸ்வரனாவதாய் கற்பனை செய்வார்களே...அந்த ரேஞ்சில் யோசித்துக் கொண்டே திரும்பினேன். நிச்சயமாய் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து விலகி நிம்மதியான் சூழலில் செய்வதற்கு நல்ல தொழில் அது.

பெரியவர் ஏனக்கு நிறைய ஆலோசனைகளும், தொழில் ரகசியங்களையும் சொல்லியிருந்தார்.முதல் சந்திப்பிலேயே இத்தனை மனம் விட்டு பேசுகிறார் என்றால் நிச்சயமாய் அவர் தனிமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பார் என நினைத்தேன்.அடுத்தடுத்த சந்திப்புகளில் அதை அவர் உறுதி செய்தார்...மனைவி ,குழந்தைகள் தன்னை சரியான முறையில் அங்கீகரிக்கவில்லை, பேசக்கூட காசு கேக்கறாங்கப்பா என ஆதங்கத்தை வெளிப்படையாகவே சொன்னார்.கஷ்டமாய் இருந்தது...

அவர் கொடுத்த மீன்களை யாருக்கும் கொடுக்கவோ சமைக்கவோ மனசு வராததால் என் தொழிற்சாலையில், Curing க்கு பெரிய பெரிய தொட்டிகள் வைத்திருந்தோம், அதில் ஒரு தொட்டியில் புதிதாய் நீர் நிரப்பி அதில் வீட்டேன்...அந்த முரட்டு மீன்கள் நீந்துவதை ச்சின்ன புள்ளையாட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆடுத்த நாள், அந்த மீனுக்கு போட ஒரு பாக்கெட் ப்ரெட் வாங்கிக்கொண்டு போனால்....ரெண்டே ரெண்டு மீன் மட்டுந்தான் இருந்துச்சி...ஹி..ஹி...என் தொழிலாளர்கள் நெம்ப நல்லவய்ங்க....பத்திரமா இருக்கட்டுமேன்னு ஆளுக்க்கொன்னா வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாய்ங்க போல....என்னத்தச் சொல்றது...ஆஹா இங்க வேலைக்காவாது போல இருக்கே, வேற இடம் பார்த்துற வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன்.

பதிவு நீளமாய்ட்டு போவுது....அதுனால....தொடரும்....

Thursday, January 31, 2008

நான் - மீன் - பறவைகள்

இது ஒரு ஒன்னரை வருசத்துக்கு முந்தைய கதை, நம்ம மௌண்ட் ரோடுல அறிவாலயத்துக்கு அதாங்க சன்/கலைஞர் டீவிக்கு எதிர்த்த வரிசையில அலங்கார விளக்குகள் விக்கிற கடைகள பார்த்திருப்பீங்க...அன்னிக்கு எனக்கும் கொஞ்சம் விளக்கு வகையறா வாங்க வேண்டியிருந்ததால போனேன்...நம்ம கெட்ட நேரம் வண்டி நிறுத்த இடமில்லை...என்ன கொடுமையிதுன்னு யோசிச்சப்ப எதிர்த்தாப்புல ஒரு கவர்மெண்ட் ஆஃபீஸ் இருந்துச்சி, அந்த பக்கம் போகையில பார்த்திருக்கேன்...ஆனா அது என்ன ஆஃபீஸ்னு கவனிச்சதுல்ல, சரி போனா போவுது....அப்டீக்கா அந்த காம்பவுண்ட்ல கொண்டுபோய் வண்டிய சேஃப்பா விட்டுட்டு வருவம்னு உள்ள போனேன்.

வண்டிய நிறுத்தீட்டு இறங்கும்போது ஒரு செக்யூரிட்டி ஓடி வந்தார், எந்த ஆஃபீஸ் யாரை பார்க்க போகணும்னு கண்டிப்பா கேட்டார்...அடாடா,இங்கியும் நிறுத்த விடமாட்டாய்ங்க போலருக்கேன்னு யோசிச்சப்ப எதுத்தாப்ல,மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகம்னு இருந்துச்சி....ஹி..ஹி..மண்டைக்குள்ள வெளக்கெறிய...சீரியஸா அங்கதான் போவனும்னு சொன்னேன். திருப்தியான செக்யூரிட்டி அங்க ரிசப்சன்ல உங்க பேர எளுதீட்டு போய் பாருங்கன்னு சொன்னார்....

சரி...அப்டிக்கா போற மாதிரி போய்ட்டு நழுவீருவோம்னு போனா அந்த ரிசப்சன்ல இருக்கற ஆளு நம்மள பார்த்துட்டார், என்ன விசயம், யாரப்பாக்கனும்னு கேக்க இது என்னடா வம்பா போச்சுன்னு அவர் பின்னால இருந்த போர்ட்ட பார்த்தேன்...பார்த்தா நூர்ஜகான்ற பேர் மட்டுந்தான் பளீர்னு தெரிஞ்சது.சரி சொல்லி வைப்பமேன்னு நூர்ஜகான் மேடத்த பார்க்கணும்னு சொன்னேன்.அவர் சரி இதுல எழுதுங்கன்னு சொன்னார்....என்னடா இது வம்பா போச்சேன்னு எளுதீட்டே யோசிச்சேன்....சரி அப்டிக்கா உள்ள போய்ட்டு வெளிய வந்துருவோம்னு நினைச்சிட்டு இருக்கும் போதே அந்தபக்கம் வந்த ஒரு பியூன்கிட்ட சார் மேடத்த பார்க்க வந்திருக்கார் கூட்டிட்டு போன்னு அதிர்ச்சி கொடுத்தார்.

மேடமா...ன்னுட்டு போர்ட்ட திரும்ப பார்த்தா, அந்தம்மா மீன் வளத்துறையில இனை இயக்குனர்....ஆஹா புள்ளையார் புடிக்க குரங்கா போச்சேன்னு நினைச்சிட்டு, சரி சமாளிப்போம்னு போனேன், அடுத்த ஐந்தாவது நிமிசத்துல அந்த அம்மா முன்னால உக்கார வச்சிட்டாங்க...ரொம்ப எளிமையா இருந்தாங்க, ....என்ன விசயம், நான் உங்களுக்கு என்ன பண்ணனும்னு கேட்டாங்க, அதுக்குள்ள நமக்குள்ள இருந்த டுபாக்கூர் வெளிய வந்து...மேடம் இந்த கலர்பிஃஷ் ப்ராஜெக்ட் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன்.அது விசயமா விவரம் கேக்கத்தான் வந்தேன்னு அள்ளி விட்டான்.

இப்ப என்ன பண்ணீட்டு இருக்கீங்கன்னு கேட்டாங்க...சொன்னேன், ஏன் இதுல உங்களுக்கு ஆர்வம்னு கேட்டாங்க...எவனுக்கு இதுல ஆர்வம்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு என்னவோ வளத்தா மீன்தான் வளக்கனும்னு வைராக்கியமா இருக்கற மாதிரி அள்ளிவிட்டேன். அடுத்த அரைமணி நேரம் நன்னீர் மீன்கள்(Freshwater fish) பத்தி பாடமே நடத்தீட்டாங்க...பின்ன இருவது ஏக்கர்ல கலர்மீன் வளக்க ஆசைப்படுறேன்னு சொன்னா என்னை எம்புட்டு பெரிய யாவாரியா நெனச்சிருப்பாங்க....

நீங்க சொல்றதும் சரிதான் மேடம்...அப்ப கலர்மீன் ப்ராஜெக்ட்ட நன்னீர் மீன் வளர்க்கிற ப்ராஜெக்ட்டா மாத்தீரலாம்னு பெரிய மனசு பண்ண அந்தம்மாவுக்கு அநியாயத்துக்கு சந்தோஷம். அப்ப தீவுத்திடல்ல பொருட்காட்சி நடந்துட்டு இருந்துச்சா, அவங்க Field officers எல்லாம் அங்க போய்ட்டாங்க, அந்த அம்மா அநியாயத்துக்கு சாரி கேட்டாங்க...அடுத்த பத்து நாளைக்கு அவங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதுன்னு ரொம்ப ஃபீல் பண்ணினாங்க, ஹி..ஹி..எனக்கே கஷ்டமா போச்சு.பரவாயில்ல மேடம் எதாவது ஃபார்ம் இருந்தா சொல்லுங்க நான் முதல்ல போய் பார்க்கிறேன். பத்து நாள் கழிச்சி வந்து உங்கள பார்க்கிறேன்னு சொல்ல அவங்களுக்கு திருப்தி.

கீழே தரைத்தளத்தில் நூலகம் ஒன்னு வச்சிருக்காங்க, அங்க போங்க உங்களுக்கு அட்ரஸ் தரச்சொல்றேன்னு சொன்னாங்க....ர்ரொம்ப ஃபீல் ஆகி அவங்களுக்கு தேங்ஸ் சொல்லீட்டு கீழ வந்தேன். அவங்க பூண்டி ஏரிகிட்ட இருக்கிற இரண்டு Seed farm அட்ரஸ் கொடுத்து போய் பாக்க சொன்னாங்க...தேமேன்னு வாங்கீட்டு வந்தேன்....இப்படியும் கவர்மெண்ட் ஆஃபீஸ் இருக்குமான்னு ஒரே ஆச்சரியமாபோச்சு....

பதிவு கொஞ்சம் நீளமாயிருச்சோ.....சரி இதப்படிச்சிட்டு சொல்லுங்க...அடுத்து என்னா நடந்துச்சின்னு எளுதறேன்....

Thursday, January 17, 2008

காட்டாறு....இம்புட்டு போதுமா!

ர்ர்ரொம்ப நாளா பதிவெழுதாம சுத்திட்டு இருக்கேனா...அதான் இன்னிக்கு எழுதியே தீரணும்னு ஒத்தக்கால்ல நின்னு(ச்ச்சும்மா ஒரு பேச்சுக்கு!) எழுதிட்டு இருக்கேன்...அப்படி என்ன விசேசம்னு கேப்பீங்களே....இருக்கே, அது என்னான்னு பதிவோட கடைசில சொல்றேன்....

நம்ம காட்டாறு மொக்கை பதிவு போடச்சொன்னாங்க....அல்வா குடுத்தாச்சி....ஹி..ஹி..ஆத்தா கோவமாய்ட்டாங்க, அடுத்து சான்ஸ் பிடிச்ச பதிவு எழுதனும்னு சொன்னாங்க....ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சிரலாம்னு இந்த பதிவுலயே அதையும் கலந்து கட்டி அடிச்சிர்றேன்....

மொதல்ல புத்தகசந்தை பத்திச்சொல்லனும், கடந்த ரெண்டு வருசமா தனிப்பதிவு போட்டேன், இந்த தடவை சில பத்திகள்தான்...தனிப்பதிவு எழுதற அளவுக்கு அங்க ஒண்ணுமில்லை....போன தடவைய விட இந்த தடவை நெறய ஸ்டால், என்ன பிரயோசனம் பாதி சுத்துறதுக்குள்ள பெரிசுங்க எல்லாம் டயர்டாய் உக்கார இடம் கிடைக்காதன்னு தேடிட்டு இருக்கறத பார்த்தேன். ஒவ்வொரு வரிசைக்கும் இடையில உக்கார்ரதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கலாம்.

போன தடவை வந்ததுல பாதிக்கும் குறைவாத்தான் கூட்டம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்.சரியான விளம்பரம் இல்லை,நிறைய கடைகளில் புத்தகங்கள் ஓழுங்காய் காட்சிப்படுத்தப் படவில்லை. ஏதோ காய்கறிகடையில் குவித்து வைத்திருப்பது போல குவித்து வைத்திருந்தனர். இதற்கு மான்புமிகு மஹாஜனமும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

இந்ததடவையும் நான் வருவது தெரியாததால் அழகிய தமிழ் மகள்களின் கூட்டம் மிகக்குறைவே, வர வர அழகிய பெண்களிடையே புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறதோ...என்னவோ..ஹி..ஹி..அந்த வகையில் இந்த வருடமும் Mission Failure என்றுதான் சொல்லவேண்டும்... ஹைகமாண்ட் வழக்கம் போல நிறைய புத்தகம் வாங்க நானும் வழக்கம் போல ரயில்வேஸ்டேஷன் போர்ட்டராய் கூட நடந்தேன்.ஆச்சர்யமாய் நான் இந்த வருடம் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.ஹி..ஹி...போன வருசம் வாங்கினதுலயே பாதிக்குமேல பிரிக்கலை...இந்த லட்சணத்துல புதுசா என்னத்த வாங்கறது.

இரண்டாம் சொக்கன் என்கிற பெயர் நிறைய பேருக்கு பிடித்திருக்கிறதாம்....உங்களுக்கு எப்படி?....கருத்துக்களை சொல்லலாம்.(ஹி..ஹி..இது வெளம்பரம்....)


சரி, இனி அடுத்த மேட்டருக்கு வருவோம்.....

நான் ஒன்னு சொன்னா யாரும் கோவிக்கப்டாது, அதென்ன எழுதினதுல பிடிச்சது, என் வரையில் பிடிச்சால் மட்டுமே எழுதினேன்..எழுதுறேன்...எழுதுவேன்.....அதுனால பிடிச்ச பதிவுன்னு பட்டியலிடாம சிலபதிவுகளை தொட்டுக்காட்டிச் செல்ல விரும்புகிறேன்.இதுல இன்னொரு சங்கடம் என்னன்னா, இதை எழுதுறதுக்காக நாம இது வரை நடந்துவந்த பாதையிலேயே திரும்பிசெல்ல வேண்டியிருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடில்லைதான், இருந்தாலும் நம்ம காட்டாறுக்காய்.....ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்

வலைபதிய வந்து இது மூன்றாம் ஆண்டு....என்னுடன் சமகாலத்தில் எழுதத்துவங்கிய பலரை இன்று காணவில்லை, எனக்கும் அடையாள்ங்களில் ஈர்ப்பு இல்லாததால் அவ்வப்போது என் அடையாளங்களை துறந்தே வந்திருக்கிறேன்....எனது முந்தைய வலைப்பூக்களின் கடவுச்சொல்லை கூட மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

என்வரையில் இந்த தளம் எனக்கே எனக்கான சுதந்திரவெளி....தெரிந்தது தெரியாதது, விரும்பியது விரும்பாதது என என்னுடைய தேடல், பலம், பலவீனம், விகாரம் என அத்தனையும் குவித்துவைக்கும் ஒரு இடம் அவ்வளவே....

கொஞ்சம் ஓவரா பில்ட்டப் கொடுக்கிறேனோ.....

நான் வலைபதிய வந்த சமயத்தில்தான் அனானிகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தனர்.நான் அனானிகளை ரசித்தேன், ரசிக்கிறேன்...ஆனால் இன்றுவரை அனானியாய் பின்னூட்டம் போட்டதில்லை,அதற்கான தேவையும் வந்ததில்லை.ஒரு கட்டத்தில் பெரியவர் டோண்டு மற்றும் அவரை சார்ந்த சில பதிவர்களுக்கு பிரச்சினை வந்தபோது தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கொணர்ந்தது. அதை மிகத்தீவிரமாய் எதிர்த்த வெகுசிலரில் நானும் ஒருவன்,இன்று வரை பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாத ஒரே பதிவரும் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்.

உண்மையில் நான் ஆத்திகனா?,இல்லை நாத்திகனா? என்பதில் எனக்கு இன்றளவும் குழப்பம் உண்டு, ஆனால் என்னுடைய கடந்தகாலத்தில் ஒரு தீவிரமான நாத்திகனாய் இருந்து பின் நீர்த்துப் போனவன் என்பதுதான் உண்மை.... அதே நேரத்தில் நான் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறேன், நீங்களும் கடவுளாக முடியுமெனவும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இங்கே வலைப்பதிவில் இரண்டு பேருடன் சண்டைபிடித்திருக்கிறேன்....ஹி..ஹி...ச்ச்சும்மா, சண்டையெல்லாம் இல்லை,அவர்களின் பதிவின் மீதான எனது எரிச்சலை பதிந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்,மற்றபடி இருவருமே நான் மிகவும் மதிக்கும் சகபதிவர்கள். ஒருவர் சகோதரி லிவ்விங் ஸ்மைல், இன்னொருவர் உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன்.இன்னிக்கு ரெண்டுபேருமே பெரிய ஆளுங்க, நிமிர்ந்து பார்க்க சந்தோஷமாயிருக்கிறது.

கண்ணகி தமிழ்பெண்ணே அல்ல என்றும், மஹாத்மா ஆறு கொலை முயற்சிகளுக்கு பின்னரே கொல்லப்பட் தகவல்,உலக மொழிகளில் கெட்டவார்த்தையில் திட்டுவது எப்படி என்றும், ஔரங்கசீப்பின் உயிலை வலைப்பதிவுக்கு தந்தவன் என ஏகப்பட்ட பெருமைகளை உடையவன் நான்...ஹி...ஹி...ம்ம்ம்ம்ம்!

குறிப்புகளை வைத்து ஒப்பேற்றிய பதிவுகள் என பார்த்தால் காலம் ,ராமாயணம் உண்மையா?,பொய்யா?......., சபரிமலை ஒரு பௌத்த/சமண மடம்?, இந்து,இஸ்லாமிய மதங்களின் ஆச்சர்ய்மான ஒற்றுமைகள் ,மறைந்து போன தமிழ் நூல்கள் போன்றவைகளும் உண்டு.

தொடர்கள் எழுத ஆரம்பிப்பதும், அப்புறம் பாதியிலேயே அதை மறந்துவிடுவதும்...உண்டு

தொடர்கள் என பார்த்தால்....ப்ளூபிலிம் , நானும் சாய்பாபாவும், ஸென் என இன்னும் சிலது இருக்கிறது....பாதியில் விட்ட தொடர்கள் திருமலையான் யார்?, மந்திரம் தந்திரம் யந்திரம்இது போக இன்னும் சிலதும் உண்டு.

நான் யார் என்கிற தேடல்களும் அதன் மீதான விவாதங்களும் அவ்வப்போது வரும், சமயங்களில் நானே கடவுள் என்கிற நினைப்புகளை கூட பதிந்திருக்கிறேன்.

விட்டால் பதிவு நீளமாகிவிடும்....காட்டாறு லைட்டா படங்காட்ட சொன்னாக...நான் கொஞ்சம் நீட்டி முழக்கீட்டேன்னு ஹி...ஹி....

சரி ஒரே மூச்சில் இவ்வளவு நீளமாய் பதிவெழுத அப்படி என்ன காரணம்னு சொல்றேன்னு சொன்னேன்ல....அது வந்து....இன்னிக்கு ஒரே நாள் பங்குசந்தை சரிவில் நான் இழந்தது 2,16,672 ரூபாயாக்கும். அதை கொண்டாடவே இந்த பதிவு....ஹி..ஹி...

அசரமாட்டம்ல......

Wednesday, January 16, 2008

பொன்மனசெம்மல் @ 92


மருதூர் கோபாலமேனன் ராமசந்திரனுக்கு இன்று 92ம் பிறந்தநாள்.நமக்கு முந்தைய தலைமுறையில் இந்த மனிதனின் தாக்கமில்லாத தமிழர்களை தேடி கண்டுபிடிக்கத்தான் வேண்டும்.

மறைந்து இருபது ஆண்டுகள் கழிந்திருந்தாலும், தமிழக அரசியலில் இந்த பெயருக்கு இருக்கும் மகத்தான சக்தியை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை....

இந்த நல்ல நாளில் ஏழைகளின் தெய்வம்,எங்கள் தங்கம், மக்கள் திலகம்,வாத்தியார்,சின்னவர், பொன்மனசெம்மல்,புரட்சித்தலைவர், பாரதரத்னா...டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களை நினைவு கூர்வோம்.

Wednesday, January 9, 2008

காட்டாறு கேட்டாக.....அதேன்..!

Sunday, January 6, 2008

சீட் பெல்ட் போடுங்கோ....இல்லாங்காட்டி...





Wednesday, January 2, 2008

அடிங்ஙொய்யால.....



மொக்கை...மொக்கை...மொக்கையை தவிர வேறில்லை