அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Saturday, February 2, 2008

நான் - மீன் - பறவைகள் - 2

ஒரு மாதத்திற்கு இந்த மீன் மேட்டரை மறந்தேவிட்டேன்....அப்புறம் ஒரு நாள் ஏதோ ஒரு வேலையாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் போயிருந்தேன்,வேலை மதியம்தான் முடியும் போலிருந்தது....என்ன கொடுமையிதுன்னு யோசிச்சப்பதான் பூண்டி மீன்விதை பண்ணை நியாபகத்துக்கு வந்தது, சரி ஒரு எட்டு போய் அங்க என்னதான் இருக்குன்னு பார்த்துட்டு வருவோம்னு போனேன்.

திருவள்ளூரில் இருந்து பிரிந்து செல்லும் கிளைச்சாலையில் பூண்டி நீர்தேக்கத்தின் கரையோரமாய் ஒரு இரண்டு கிலோமீட்டரில் அந்த விதைபண்னை இருந்தது. சின்னதாய் ஒரு கட்டிடம் அதன் முன்னால் கயிற்று கட்டிலில் ஐம்பதுகளில் ஒரு மனிதர்.என்னடா இது அரசு மீன் விதைபண்ணைன்னு விசிட்டிங் கார்ட் குடுத்தாங்க...இங்க ஒரு பெரிசு உக்காந்திருக்காரேன்னு போய் விசாரிச்சேன். கொஞ்ச நேர பேச்சு வார்த்தையில் சிநேகமாகிப் போனார் பெரியவர்.

விவரம் கேட்க ஆரம்பித்த என்னை,மொதல்ல உள்ள போய் ஒரு ரவுண்டு பார்த்துட்டு வாங்கன்ன்னு சொல்லி வேலையாள் ஒருவரை அனுப்பினார்.கட்டிடத்தை தாண்டி அந்த பக்கம் போனால் திகைத்த்துப் போய் விட்டேன்...ஏறத்தாழ நாற்பது ஏக்கரில், குறைந்தது நூறு குளங்களாவது இருக்கும், ஒவ்வொன்றும் கால் ஏக்கர் அளவில்...ஒவ்வொன்றுக்கும் நம்பர் போட்டு, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி வாயை பிளந்து கொண்டு சுற்றி வந்தேன்.


இந்த நேரத்தில் நன்னீர் மீன்கள் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும்....

நன்னீர் மீன் வளர்ப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் நாம் இருக்கிறோம், முதல் இடத்தில் சீனா...அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையேயானது.

கெண்டை, கெளுத்தி, விரால், மடவை, கொடுவா போன்ற இனங்களே பெருவாரியாய் வளர்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், ஊரில் உள்ள குளங்கள், ஏரிகள், அனைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

தற்போது நிறைய கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் ஏரி/குளங்களை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியாமல், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து குஞ்சுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன


அவர்கள் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா பக்கமும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். உள்ளே தொழிற்சாலை மாதிரி பரபரப்பாய் வேலை நடக்கிறது.நம்ப முடியாமல் பெரியவரிடம் திரும்பினேன். வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பதாயும், மாதத்திற்கு குறைந்தது பத்து லட்சம் ரூபாய்க்காவது உறுதியான வியாபாரம் இருப்பதாய் வெளிப்படையாக பேசினார். ஏனோ பெரியவருக்கு என்னை மிகவும் பிடித்துப் போயிருந்தது. சுடச்சுட மீன் குழம்போடு சாப்பாடு...புளிப்பு தூக்கலான அந்த மீன் குழம்பு இப்போது இதை எழுதும்போது கூட வாயில் நீர் ஊறுகிறது.

முதல் முறை பார்த்துவிட்டு திரும்பும் போது என்னை வெறுங்கையோடு அனுப்பக்கூடாது என பத்து வளர்ந்த கெளுத்தி மீனை கொடுத்தார்....ஒவ்வொன்னும் இரண்டு கிலோவாவது இருக்கும், மார்க்கெட்டில் கிலோ 80-120 வரை விலைபோகும்.திரும்பி வரும் வழியெல்லாம் ஒரே மீன் வளர்ப்பு பத்தின யோசனைதான்...ஒரு படத்தில் எஸ்.வி.சேகரும், பாண்டிய ராஜனும்....மாடு வளர்த்து கோடீஸ்வரனாவதாய் கற்பனை செய்வார்களே...அந்த ரேஞ்சில் யோசித்துக் கொண்டே திரும்பினேன். நிச்சயமாய் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து விலகி நிம்மதியான் சூழலில் செய்வதற்கு நல்ல தொழில் அது.

பெரியவர் ஏனக்கு நிறைய ஆலோசனைகளும், தொழில் ரகசியங்களையும் சொல்லியிருந்தார்.முதல் சந்திப்பிலேயே இத்தனை மனம் விட்டு பேசுகிறார் என்றால் நிச்சயமாய் அவர் தனிமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பார் என நினைத்தேன்.அடுத்தடுத்த சந்திப்புகளில் அதை அவர் உறுதி செய்தார்...மனைவி ,குழந்தைகள் தன்னை சரியான முறையில் அங்கீகரிக்கவில்லை, பேசக்கூட காசு கேக்கறாங்கப்பா என ஆதங்கத்தை வெளிப்படையாகவே சொன்னார்.கஷ்டமாய் இருந்தது...

அவர் கொடுத்த மீன்களை யாருக்கும் கொடுக்கவோ சமைக்கவோ மனசு வராததால் என் தொழிற்சாலையில், Curing க்கு பெரிய பெரிய தொட்டிகள் வைத்திருந்தோம், அதில் ஒரு தொட்டியில் புதிதாய் நீர் நிரப்பி அதில் வீட்டேன்...அந்த முரட்டு மீன்கள் நீந்துவதை ச்சின்ன புள்ளையாட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆடுத்த நாள், அந்த மீனுக்கு போட ஒரு பாக்கெட் ப்ரெட் வாங்கிக்கொண்டு போனால்....ரெண்டே ரெண்டு மீன் மட்டுந்தான் இருந்துச்சி...ஹி..ஹி...என் தொழிலாளர்கள் நெம்ப நல்லவய்ங்க....பத்திரமா இருக்கட்டுமேன்னு ஆளுக்க்கொன்னா வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாய்ங்க போல....என்னத்தச் சொல்றது...ஆஹா இங்க வேலைக்காவாது போல இருக்கே, வேற இடம் பார்த்துற வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன்.

பதிவு நீளமாய்ட்டு போவுது....அதுனால....தொடரும்....

8 comments:

said...

//
ஆடுத்த நாள், அந்த மீனுக்கு போட ஒரு பாக்கெட் ப்ரெட் வாங்கிக்கொண்டு போனால்....ரெண்டே ரெண்டு மீன் மட்டுந்தான் இருந்துச்சி...ஹி..ஹி...என் தொழிலாளர்கள் நெம்ப நல்லவய்ங்க....பத்திரமா இருக்கட்டுமேன்னு ஆளுக்க்கொன்னா வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாய்ங்க போல....என்னத்தச் சொல்றது...
//
:-))))))))))))

said...

அய்யோ.. ஏகத்துக்கு சின்சியர் சிகாமணியா இருக்கீங்களே! இதிலே டிடெக்டிவ் வேலை வேற. அதாங்க..
//முதல் சந்திப்பிலேயே இத்தனை மனம் விட்டு பேசுகிறார் என்றால் நிச்சயமாய் அவர் தனிமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பார் என நினைத்தேன்.அடுத்தடுத்த சந்திப்புகளில் அதை அவர் உறுதி செய்தார்...மனைவி ,குழந்தைகள் தன்னை சரியான முறையில் அங்கீகரிக்கவில்லை, பேசக்கூட காசு கேக்கறாங்கப்பா என ஆதங்கத்தை வெளிப்படையாகவே சொன்னார்//

ஹா ஹா ஹா.. பெரிய ஆளுதான் நீங்க.

மீன் ப்ரெட் சாப்பிடும் அரிய தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம். தொடர்ந்து சேவை செய்யவும். ;-)

இன்னும் பறவை வரல... எனக்கு சில சமயம் மறதி வேலை செய்யாது.

said...

அடடா.....மீன் போயிருச்சா?

(-:

said...

நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் மீன் அனுபவத்தை, தலைப்பை பார்த்ததும், மீன், பறவை எல்லாம் வறுத்து சாப்பிட்டேன்னு சாப்பாட்டு கதை சொல்விங்கனு நினைத்தேன் :-))

பல இடங்களிலும் அரசு பண்ணைகள் இப்படித்தான் இருக்கு, ஆனால் நல்ல வேலை இங்கே உருப்படியாக வேலை செய்கிறார்கள் போல.

நான் ஒரு முறை உயிர் உரம் , நுண்ணுயிர் உரம்லாம் சொல்றாங்களே நாமளும் முயற்சி செய்வோம்னு தமிழக அரசின் வேளாண்துறை மாவட்ட அலுவலகம் போய் நொந்து விட்டேன். அங்கே போர்ட் மட்டும் தான் வைத்திருக்காங்க, டீ சாப்பிட்டுக்கிட்டு சாவகாசம கதைப்பேசிட்டு தான் இருக்காங்க. அதுலாம் இங்கே விற்பது இல்லை, உங்களுக்கு வேண்டும்னா இங்கே போய் பாருங்கனு ஒரு தனியார் விற்பனையாளர் முகவரி கொடுத்தாங்க :-))

இதில் காமெடி , தனியாரிடம் விலை அதிகம் இருக்கும் மாவட்ட அலுவகம் போங்க மலிவாக வாங்கிக்கலாம் மான்யம் எல்லாம் கூட தருவாங்க என்று எங்க ஊர் வேளாண் அதிகாரி சொல்லி அனுப்பினார் :-))

said...

வாங்க சிவா...

இங்க இருந்த மீனெல்லாம் எங்கய்யான்னு யாரை கேட்டாலும் ஒருத்தர் விடாம எல்லாரும் கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி அந்த மீன் இதான்னு சொல்லி என்னை டென்சனாக்குனத இங்க டீசண்டா சொல்லீருக்கேன்...ஹி..ஹி...

said...

காட்டாறு...

மீனுக்கு ப்ரெட் மட்டுமா போட்டேன்...ஹி..ஹி...அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கு...சொல்றேன் சொல்றேன்...

பறவை மேட்டர் அடுத்த பகுதில வருது....

said...

வாங்க துளசிம்மா...

ஹேப்பி பர்த்டே மேடம்...காலையில போஸ்ட் பார்த்தேன் ஏதோ எங்க வூட்டுல ஒருத்தருக்கு பிறந்தநாள் மாதிரி ஒரு சந்தோசம்...

நல்லா இருங்க தாயீ....

said...

வவ்வால்...

வண்டிய எங்க நிறுத்தலாம்னு யோசிச்சப்ப...அந்தா ஏரியாவுல அந்த வளாகம்தான் நினைவுக்கு வந்திச்சி...இப்ப பக்கதுல இன்னொரு இடமும் கண்டு பிடிச்சி வச்சிருக்கேன்.பக்கத்துல் ஆடிட்டர் ஜெனரல் ஆஃபீஸ்ல உள்ள நுழைஞ்சி சர்ர்ர்ர்ர்னு நேர பின்னால போனா நம்ம இஷ்டம்தான் எங்க வேண்ணா நிறுத்தலாம்...அவ்ளோவ் பெரிய இடம்...யூஸ் பண்ணிக்குங்க..

அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் நீங்க சொல்லும் நிலமைதான் இருக்கு...எதுக்குடா வந்து இம்சை பண்றீங்கன்ற மாதிரியான எரிச்சல் வரவழைக்கும் அணுகு முறையைத்தான் பார்க்க முடியுது...

அதே நேரத்துல உங்க கை தாராளம்னு தெரிஞ்சிட்டா....ஹி..ஹி..அவங்கள மாதிரியான சுறுசுறுப்பான, விசுவாசமான(?), நல்லவய்ங்கள பார்க்கவே முடியாது....