அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, September 26, 2007

Hydrogen கார்கள் ஒரு அறிமுகம்சல்லிசா கார் ஓட்டலாம் வாங்க...

பெட்ரோல்,டீசல் விலை கட்டுபடியாகாத நிலையில் இனி எதிர் காலத்தில் ஓடும் Hydrogen கார்கள்தான் மாற்றாக இருக்கும்.இந்த குறும்படம் அது குறித்த ஒரு அறிமுகமாய் இருக்கும். விவரமறிந்தவர்கள் மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளலாமே...

Monday, September 17, 2007

தர்பூஸ்தான்...நம்புங்க

இது இங்கில்லை....ஜப்பானில். மேலும் விவரங்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.நிறவெறியும் விமான பயணமும்...

லண்டன் ஜோகனஸ்பர்க் இடையேயான பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் நடந்த சம்பவமொன்று....

ஐம்பது வயது மதிக்கத்தக்க பிரித்தானிய பெண்ணொருவர் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.அவருக்கு பக்கத்து இருக்கையில் ஒரு கருப்பின இளைஞர். நிறவெறி கொண்ட இந்த அம்மையாரால் இதை ஜீரணிக்க இயலவில்லை.

விமான பணிப்பெண்ணை அழைத்து எப்படி என்னை ஒரு கருப்பினத்தவரின் பக்கத்து இருக்கையில் அமர்த்தலாம். தன்னால் ஒரு நொடி கூட இந்த இருக்கையில் இருக்கமுடியாது. உடனடியாக தனக்கு வேறு இருக்கை மாற்றித்தர வேண்டுமென கூச்சலிட்டிருக்கிறார். பணிப்பெண்ணோ தான் வேறு இடம் பார்ப்பதாகவும் அதுவரை பொறுமை காக்கவும் என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து திரும்பிய விமான பணிப்பெண் எக்கானமி வகுப்பில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருப்பதாக கூறவும் அவசரப்பட்ட வெள்ளையின பெண்மணி விமான காப்டனிடம் சொல்லி தனக்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு மிரட்ட....பணிப்பெண்ணோ, தான் காப்டனிடம் பேசிவிட்டதாகவும், பிஸினஸ் கிளாஸும் முழுமையாக இருக்கிறது ஆனால் முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகவும் ஆனால் அப்படி அமரச்செய்யும் வழக்கமில்லையென்றும்....

நிலமையை கருத்தில் கொண்டு கேப்டன் அந்த இருக்கையை வழங்க சம்மதித்திருக்கிறார் என சொல்லி முடிக்கவும் அந்த வெள்ளையின பெண்மனி பெருமிதமாக கிளம்ப எத்தனிக்க...பணிப்பெண்ணோ அந்த கருப்பின இளைஞனிடம் கேப்டன் உங்களை தனது விருந்தினராக முதல் வகுப்பிற்கு அழைப்பதாக கூற விமானத்தில் இருந்த அனைவரும் எழூந்து நின்று கரவொலி எழுப்பினார்களம்.....

காப்டன் செய்தது சரியா....?

ராமர் பாலமும் வானரங்களும்...


இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளின் கையில் இப்போது சேதுசமுத்திர திட்ட பூமாலை.ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ராமருக்காகவும் அவரின் பாலத்திற்காகவும் தங்கள் உடல்பொருள் ஆவி அனைத்தையும் துறக்க சபதமேற்று செயல்படுகிறா தியாக திருவிளையாடலை நூறு கோடி சனங்களும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பதால் ஊடகங்களுக்கு அடுத்த சில வாரங்களுக்கு பிழைப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆண்டுகள் பலவாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்தினை கடந்த பாரதீயஜனதா தலைமையிலான கூட்டனி அரசு தூசிதட்டி அதை ஆராய ஒரு குழுவமைத்து பின் திட்ட அறிக்கை தயார்செய்து நிதியெல்லாம் ஒதுக்கி...வைக்கோவும்,கலைஞரும் தங்கள் அப்பன் வீட்டு சொத்திலிருந்து இந்த திட்டத்திற்கு பணம் தருவதைப் போல இதற்கு உரிமை கொண்டாடிய கூத்துக்களை நிறைய பேர் மறந்திருப்பீர்கள்....

புதிதாய் வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆர்பாட்டமாய் ஒரு விழா நடத்தி இத்திட்டத்தை துவக்க பிடித்தது சனி....நமது முன்னாள் முதல்வர் அம்மையார் அவர்கள் சுற்று சூழல் ஆர்வலராய் மாறி இது கூடாது என எழுப்பிய கூச்சல் காற்றில் கரைந்து போனதை நினைவில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இது குறித்த கட்டுரை ஒன்றினை எழுதுவதை விட இதுகாறும் வலையில் இது தொடர்பாய் எழுதப்பட்ட கட்டுரைகளை இங்கே தொகுக்கும் முயற்சியே இந்த பதிவு....


இராமர் பாலம் என்பது கட்டுக் கதை - மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்)

உணர்வுகளின் கருத்துக்கள விவாதம்

நேர்மையின் வலைப்பதிவு

தமிழக பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசனின் அறிக்கை என கூறிடும் பதிவு

கீற்று தளத்தில் வெளியான பெரியார்முழக்கம் பதிவு

ஆயிரத்தில் ஒருவன்...


கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை...
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை...
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை...
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை...