அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, December 31, 2007

இனியெல்லாம் சுகமே....


ஞானியரின் ஞானத்தை கேள்!
அவசர இரைச்சல் இடையே
அமைதியாக செல்
மௌனத்தின் நிம்மதியை நினைவில் கொள்
முடிந்தவரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்.

உன் உண்மையை
இதமாகத் தெளிவாகக் கூறு
பிறர் கூறுவதை கவனி.
மந்த மூடர்களாயிருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை உண்டு.

பிறருடன் ஒப்பிட்டால்
உனக்கு கசப்பும் சலிப்புமே மிஞ்சும்.
உன்னை விடவும்
உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு.
உன் சாதனைகளை மகிழ்வுடன் அனுபவி,
அதே போல் உன் திட்டங்களையும்
மகிழ்ச்சியுடன் அணுகு.

உன் வாழ்வின் பாதை
எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம் கொள்.
கால மாற்றங்களில்
இதுவே உனது நிரந்தர செல்வம்.

நீ
நீயாக இரு.
அன்பு காட்டுவதாய் நடிக்காதே.
அன்பை ஏளனப்படுத்தாதே.
எல்லா விரோதங்களுக்கும்.
ஏமாற்றங்களுக்கும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தர பசுமை
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
-இரண்டாம் சொக்கன்....

Sunday, December 23, 2007

பொன்மனசெம்மல்.....


மறைந்தும் மறையாத மக்கள் தலைவனின் 20 வது நினைவு நாள் இன்று....
We miss U...Thalaivaa....






Tuesday, December 18, 2007

தொப்பைய குறைக்கனுமா....?









இந்த வீடியோவை பார்த்தாவெல்லாம் தொப்பை குறையாது...இது மாதிரி தினமும் செஞ்சா ஒரு வேளை குறையலாம்....

வீட்ல இம்சை தாங்கலை...அதான் எப்டி பண்றாய்ங்கன்னு வலை மேய்ஞ்சப்ப சிக்கினது....சரி எல்லாருக்கும் யூஸ் ஆவட்டுமேன்னு போட்ருக்கேன்.....

(இப்டில்லாம் பதிவு போட்டா சிறந்த வலைப்பதிவர்னு பட்டம் குடுப்பாங்களா...?)

Monday, December 17, 2007

ரீமிக்ஸ்...







யாருங்க இது?...தெரிஞ்சா சொல்லுங்கப்பா !



மொதல்ல இந்த பாட்ட பாருங்க...ரஜினின்னு ஒருத்தர் தலைவி மணிஷாவோட ஆடியிருக்கறதா வெளியில சொல்லி தெரிஞ்சிகிட்டேன்.....ஏன்னா இன்னிக்கு வரை அந்த பாட்டுல மணிஷாவை மட்டுந்தான் பார்த்திருக்கேன்...ஹி..ஹி

ஆனா இந்த பதிவுக்கு அது மேட்டர் இல்லை....இந்த பாட்டை பாடியிருக்கிற பாடகி யார்?, அந்த காலத்து ராஜேஸ்வரியையும்,இடைக்காலத்து ஜென்சியையும் குழைத்து தந்தது போல குரல் வண்ணம்.தெளிந்த நீரோடை போல தடங்கலில்லாமல் பாடும் இவர் வேறு பாடல்கள் ஏதும் பாடியிருக்கிறாரா அல்லது One song wonder..ஆ...

வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க புண்ணியமா போகும்....

Saturday, December 15, 2007

பில்லா பாடல்கள்....பாருங்க...!

மை நேம் இஸ் பில்லா....



வெத்தலைய போட்டேண்டி...

Wednesday, December 12, 2007

செருப்பால் அடித்துக் கொல்(ள்ள)ல வேண்டும் போலிருக்கிறது...

நேற்று மகாகவி பாரதியின் 125ம் பிறந்த நாள்....பத்திரிக்கைகளில் அரசு விழா நடப்பதற்கான ஒரு விளம்பரம் மட்டுமே காணக்கிடைத்தது.வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ மூச்ச்ச்ச்...ஒரு சத்தமும் கானோம்.

இன்றைக்கு உச்ச நட்சத்திரத்தின் பிறந்தா நாளாம், தெருவெங்கு வினைல் பேனர்கள் என்ன, கொண்டாட்டங்கள் என்ன... அ.தி.மு.க வினரே வெட்கப்படுமளவிற்கு FM வானொலியெங்கும் மகாத்மா ரேஞ்சிற்கு பில்ட்டப்புகள் என்ன, புகழ்ச்சிகள் என்ன...தொடர்ந்து ஒரு வாரமாய் விஜய் டிவியில் இரவு சிறப்பு நிகழ்ச்சிகள் என்ன...

இத்தனைக்கும் அந்த மனிதர் தன் பிறந்த நாளுக்கு இங்கே இருப்பதில்லை,இத்தனை பயல்களுக்கும் பெப்பே காட்டிவிட்டு தன்பாட்டிற்கு எங்கேயோ கொண்டாடி மகிழ்கிறார். கேட்டால் இமயமலையில் இருக்கிறாராம்.....

உண்மையில் திரு.சிவாஜிராவ் கெயிக்வாட் ஒரு தேர்ந்த வியாபாரி அவ்வளவே....ஆனால் நம்முடைய விசிலடிச்சான் குஞ்சுகளும், ஊடகங்களும்....அவர் தமிழகத்தையே ரட்சிக்கவந்த காவல்தெய்வமாய் பயாஸ்கோப் காட்டுகின்றனர்.

தமிழன் எங்கே போகிறான்....

மீண்டும் த‌லைப்பை ப‌டியுங்க‌ள்.....

Monday, December 10, 2007

வாழ்க நீ எம்மான்...




எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல‌

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்...

கிஙபிஃஷரின் கிளுகிளுப்பு காலண்டர் 2008

கிளுகிளுப்பான கிங் ஃபிஷர் 2008 காலண்டர் இன்னிக்கு ரிலீஸ் பண்ணீட்டாங்கப்ப்போய்....Atul Kasbekar ங்ற கொடுத்து வச்ச போட்டோ க்ராபர்தான் இந்த அழகிகளை படம் பிடிச்சிருக்கார்....

எப்படி எடுத்தாய்ங்கன்னு வீடியோ வேற காட்டி டென்சனாக்குறாய்ங்க...நான் மட்டும் வயிறெறிஞ்சாப் போதுமா...ஹி..ஹி..எல்லாரும் பாருங்க மக்கா....















Wednesday, December 5, 2007

சுப்ரபாதம் ரீமிக்ஸ்.....



நம்ம எம்.எஸ் அம்மா பாடின சுப்ரபாதத்தையும் ரீமிக்ஸ் பண்ணீட்டாங்க....கேக்க நல்லாத்தான் இருக்கு...கேட்டுப்பாருங்க....

கறுப்பு நாள்......



திசம்பர் 6, 1992.....

பதினைந்து ஆண்டுகள் கழித்தும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.நமது அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பில்லை என்பதை தோலுறித்துக் காட்ட இந்த தேசம் கொடுத்த மிகப்பெரிய விலை பாபர் மசூதி....

இன்றைக்கு நகரெங்கும் காணக்கிடைத்த தட்டி விளம்பரத்தில், ஞாயிற்றுக் கிழமையென்றும் பாராமால் யாருக்காகவோ நீதிமன்றம் நடத்தி கண்டனக்கனை தொடுத்த நீதிதேவதைகள் இந்த விடயத்தில் தூங்கிக்கொண்டிருப்பதாக கூற்ப்பட்டிருப்பது நிதர்சனம்தானே.....

ம்ம்ம்ம்....

Saturday, December 1, 2007

நேற்றைய புலம்பல்கள்....

நம்ம தமிழ்நதி வலைச்சரத்தில் அவரை கவர்ந்த கவிதைகளையும், கவிதையாளர்களையும் வரிசை கட்டியிருந்தார்.....என்ன வழக்கம் போல நம்ம பேர் லிஸ்ட்ல இல்லை(ரொம்ப நெனப்புதான்...ஹி..ஹி..)

இருந்தாலும் நாம ஒரு முன்னாள் கவிதையாளன்(என்ன கொடுமையிது...) என்பதை நிரூபிக்க பல வருடங்களுக்கு முன்னால நாம கடைசியா எழுதின கவிதைய சபையில வைக்கிறேன்....

இது கற்பனையா எழுதுனதுனெல்லாம் கப்ஸா விடமாட்டேன்....அனுபவிச்சி ஃபீலிங்க்ஸோட எளுதினதாக்கும்....

"படிச்சிட்டு அவ அழுத கண்ணீர் இன்னமும் ஈரமாய் எனக்குள்....ம்ம்ம்ம்"

ஒரு காலத்தில் நாமளும் கவிதையெல்லாம் எழுதியிருக்கோம்னு நினைச்சா ஆச்சர்யமாத்தான் இருக்கு....

எப்படியிருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க.....






பூவே என்னை தள்ளாதிரு...


..........ம்ம்ம்ம்ம்ம்

சூழ்நிலையால விலகினோமா

இல்லை

வசதிக்காக விலகினோமா

காரணிகள்(factors) காரணமாயிரம் சொல்லலாம்

கொஞ்சம் தளர்ந்துதான் போய்விட்டோம்

இதுவரை இப்படி இருந்ததில்லையே

ஏன் விலகினோம் உயிரே....

மீண்டும் மிருகவேஷம் போட்டு

பரபரப்பாய் திரிகிறேன்

யாரை ஏமாற்றுகிறேன் தெரியவில்லை.....

உணர்வுகளை தள்ளி வைக்கலாம்

உயிரை தள்ளி வைக்கமுடியுமா

வைத்திருக்கிறேனே.....

எப்படி இதெல்லாம் எனக்கு மட்டும்
சாத்தியமாகிறது.....

நீ கேட்ட போதெல்லாம்

வராத கவிதை இப்போது
மட்டும் எப்படி சரளமாய்...

காதலில் தோற்றுவிட்டேனோ

ம்ம்ம்ம்ம்ம்........