அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, December 12, 2007

செருப்பால் அடித்துக் கொல்(ள்ள)ல வேண்டும் போலிருக்கிறது...

நேற்று மகாகவி பாரதியின் 125ம் பிறந்த நாள்....பத்திரிக்கைகளில் அரசு விழா நடப்பதற்கான ஒரு விளம்பரம் மட்டுமே காணக்கிடைத்தது.வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ மூச்ச்ச்ச்...ஒரு சத்தமும் கானோம்.

இன்றைக்கு உச்ச நட்சத்திரத்தின் பிறந்தா நாளாம், தெருவெங்கு வினைல் பேனர்கள் என்ன, கொண்டாட்டங்கள் என்ன... அ.தி.மு.க வினரே வெட்கப்படுமளவிற்கு FM வானொலியெங்கும் மகாத்மா ரேஞ்சிற்கு பில்ட்டப்புகள் என்ன, புகழ்ச்சிகள் என்ன...தொடர்ந்து ஒரு வாரமாய் விஜய் டிவியில் இரவு சிறப்பு நிகழ்ச்சிகள் என்ன...

இத்தனைக்கும் அந்த மனிதர் தன் பிறந்த நாளுக்கு இங்கே இருப்பதில்லை,இத்தனை பயல்களுக்கும் பெப்பே காட்டிவிட்டு தன்பாட்டிற்கு எங்கேயோ கொண்டாடி மகிழ்கிறார். கேட்டால் இமயமலையில் இருக்கிறாராம்.....

உண்மையில் திரு.சிவாஜிராவ் கெயிக்வாட் ஒரு தேர்ந்த வியாபாரி அவ்வளவே....ஆனால் நம்முடைய விசிலடிச்சான் குஞ்சுகளும், ஊடகங்களும்....அவர் தமிழகத்தையே ரட்சிக்கவந்த காவல்தெய்வமாய் பயாஸ்கோப் காட்டுகின்றனர்.

தமிழன் எங்கே போகிறான்....

மீண்டும் த‌லைப்பை ப‌டியுங்க‌ள்.....

7 comments:

said...

why tension??
நம்ம நாட்டுல இதெல்லாம் சகஜமப்பா..

இன்று உச்ச நட்சத்திரத்தின் பிறந்த நாள் என்ற அரிய தகவலுக்கு நன்றி!!

said...

இவர்களை அடித்துச் செருப்பைக் கேவலப்படுத்த நினைக்கிறீர்கள்.
சும்மாவா சொன்னார் "நெங்சு பொறுக்குதில்லையே'

said...

Bharatikku arase kooda marra kavikalukku kodukkum mariyadhai koduppathillaiye.Indha vishayaththil idharkku mel vivaramaha solla vendiyadhillai ena ninaikkirane

said...

பாரதியின் கோட்டைக் கழட்டி..அடையாளம் காட்டுகியிருக்கிறார்களே..அந்த அரிய தினத்திலே...அதி அசுரன் பதிவு என்ற நினைவு...எதுக்கும் ஒரு முறை அதைப் படியுங்கள்..

http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

said...

என் செய்வது? பாரதி பார்ப்பனகுலத்தில் பிறந்து விட்டானே!
பச்சைகுத்திக்கொள்ளாவிட்டாலும் பச்சை குத்திவிட்டார்களே!
காலம் மாறும். கோபுரத்தில் ஏற்றிவிடப்பட்ட குப்பையும் கூளமும் பறந்துபோகும். வைரம் ஜொலிக்கும்.

said...

உலகத் தலைவனின் பிறந்த நாளுக்கு 2 நாள் முன்னாடிதான் சட்டமேத்ஹி அம்பேத்காரின் பிறந்த நாள்.செய்தியில் தலைவர்கள் மாலை போட்டதோடு சரி.
ஆனா உ.த.பி.நாளுக்கு ஒரு சேனல் பாக்கியில்லை போட்டி போட்டிக் கொண்டு ஒளி பரப்பின.
விஜய் டி.வி மூனுநாள் விழாபோல் ஆரம்பித்து உலகை ஆளும் ரஜீனியாம்.கோவையிலிருந்து புறப்பட்ட ரஜினி ரசிகன் ரதம் ஒளி பரப்பு.
கலைஞ்ர் டிவியில் ரஜினி மகள்கள் பேட்டி
கே.எஸ்.ரவிக்குமாருடன் தீபா வெங்கட் நேயர் விருப்பம்
சன்னும் ராஜும் கே டிவியும் பழைய ரஜினி படங்களை மட்டுமே போட்டன.
இதுக்கு முக்கிய திரைப் பிரபலங்கள்,அரசியல் பிரபலங்கள் போட்டி.
என்ன நடக்குதுன்னே தெரியலை.
காரியவாதியான ரஜீனி அரசியல் சரிவருமான்னு கணக்குப் பண்ணி இன்னும் குழப்பத்தில் இருக்க உல்கையே ஆளும் தலைவனாக்கி முட்டாள் தமிழன் கொண்டாடுகிறான்.
ம்ம்ம்

said...

When Baba movie was under way media even tried to project him as having super naural powers.

All these suddenly faded when he almost fell in 'Amma's feet - Ashtalaksmi sthotram padi..'

Now the success of Chandramukhi and Sivaji again is bringing him up.

mmmm...

Newy York la kooda pala abhishegam seiyum nilaiiku nam so called S/w engg kooda thayaraga irukkum podu thalaivarukku entha kavalaiyum vendiyathilla

Thevuda Thevuda ezhumalai Thevuda ....