அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, September 17, 2007

நிறவெறியும் விமான பயணமும்...

லண்டன் ஜோகனஸ்பர்க் இடையேயான பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் நடந்த சம்பவமொன்று....

ஐம்பது வயது மதிக்கத்தக்க பிரித்தானிய பெண்ணொருவர் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.அவருக்கு பக்கத்து இருக்கையில் ஒரு கருப்பின இளைஞர். நிறவெறி கொண்ட இந்த அம்மையாரால் இதை ஜீரணிக்க இயலவில்லை.

விமான பணிப்பெண்ணை அழைத்து எப்படி என்னை ஒரு கருப்பினத்தவரின் பக்கத்து இருக்கையில் அமர்த்தலாம். தன்னால் ஒரு நொடி கூட இந்த இருக்கையில் இருக்கமுடியாது. உடனடியாக தனக்கு வேறு இருக்கை மாற்றித்தர வேண்டுமென கூச்சலிட்டிருக்கிறார். பணிப்பெண்ணோ தான் வேறு இடம் பார்ப்பதாகவும் அதுவரை பொறுமை காக்கவும் என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து திரும்பிய விமான பணிப்பெண் எக்கானமி வகுப்பில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருப்பதாக கூறவும் அவசரப்பட்ட வெள்ளையின பெண்மணி விமான காப்டனிடம் சொல்லி தனக்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு மிரட்ட....பணிப்பெண்ணோ, தான் காப்டனிடம் பேசிவிட்டதாகவும், பிஸினஸ் கிளாஸும் முழுமையாக இருக்கிறது ஆனால் முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகவும் ஆனால் அப்படி அமரச்செய்யும் வழக்கமில்லையென்றும்....

நிலமையை கருத்தில் கொண்டு கேப்டன் அந்த இருக்கையை வழங்க சம்மதித்திருக்கிறார் என சொல்லி முடிக்கவும் அந்த வெள்ளையின பெண்மனி பெருமிதமாக கிளம்ப எத்தனிக்க...பணிப்பெண்ணோ அந்த கருப்பின இளைஞனிடம் கேப்டன் உங்களை தனது விருந்தினராக முதல் வகுப்பிற்கு அழைப்பதாக கூற விமானத்தில் இருந்த அனைவரும் எழூந்து நின்று கரவொலி எழுப்பினார்களம்.....

காப்டன் செய்தது சரியா....?

5 comments:

said...

காப்டன் செய்தது சரியா....?//

முழுவதாகச் சரியில்லை. பேசாமல் வேறு இடம் இல்லை. நீ கீழே தரையில் உக்காந்துக்கோ அல்லது பாத்ரூமில் ஆள் இல்லாதப்போ போய் உக்காந்துக்கோன்னு அனுப்பியிருக்கணும்.

said...

எத்தனை இடத்திலே ஒரே பதிவை எழுதுவீங்க? என்ன நடக்குது இங்கே?

said...

தருமி ஐயா,

நீங்க சொல்றது சரிதான்...இருந்தாலும் கேப்டன் செஞ்சது அந்த அம்மா வாழ்நாளைக்கும் மறக்கமுடியாத அவமானமா அவங்கா மனசுக்குள்ள இருக்கும்ல...என்ன சொல்றீங்க?

said...

காட்டாறு...

எழுதுனது உண்மைதான்...ஆனா இப்பன் அது இல்லை

ஹி..ஹி.

said...

காப்டன் செய்தது சரிதான் - இதை விட வேறு வழியில் அவளது தலைக் கனத்தை இறக்க முடியாது