அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, January 31, 2008

நான் - மீன் - பறவைகள்

இது ஒரு ஒன்னரை வருசத்துக்கு முந்தைய கதை, நம்ம மௌண்ட் ரோடுல அறிவாலயத்துக்கு அதாங்க சன்/கலைஞர் டீவிக்கு எதிர்த்த வரிசையில அலங்கார விளக்குகள் விக்கிற கடைகள பார்த்திருப்பீங்க...அன்னிக்கு எனக்கும் கொஞ்சம் விளக்கு வகையறா வாங்க வேண்டியிருந்ததால போனேன்...நம்ம கெட்ட நேரம் வண்டி நிறுத்த இடமில்லை...என்ன கொடுமையிதுன்னு யோசிச்சப்ப எதிர்த்தாப்புல ஒரு கவர்மெண்ட் ஆஃபீஸ் இருந்துச்சி, அந்த பக்கம் போகையில பார்த்திருக்கேன்...ஆனா அது என்ன ஆஃபீஸ்னு கவனிச்சதுல்ல, சரி போனா போவுது....அப்டீக்கா அந்த காம்பவுண்ட்ல கொண்டுபோய் வண்டிய சேஃப்பா விட்டுட்டு வருவம்னு உள்ள போனேன்.

வண்டிய நிறுத்தீட்டு இறங்கும்போது ஒரு செக்யூரிட்டி ஓடி வந்தார், எந்த ஆஃபீஸ் யாரை பார்க்க போகணும்னு கண்டிப்பா கேட்டார்...அடாடா,இங்கியும் நிறுத்த விடமாட்டாய்ங்க போலருக்கேன்னு யோசிச்சப்ப எதுத்தாப்ல,மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகம்னு இருந்துச்சி....ஹி..ஹி..மண்டைக்குள்ள வெளக்கெறிய...சீரியஸா அங்கதான் போவனும்னு சொன்னேன். திருப்தியான செக்யூரிட்டி அங்க ரிசப்சன்ல உங்க பேர எளுதீட்டு போய் பாருங்கன்னு சொன்னார்....

சரி...அப்டிக்கா போற மாதிரி போய்ட்டு நழுவீருவோம்னு போனா அந்த ரிசப்சன்ல இருக்கற ஆளு நம்மள பார்த்துட்டார், என்ன விசயம், யாரப்பாக்கனும்னு கேக்க இது என்னடா வம்பா போச்சுன்னு அவர் பின்னால இருந்த போர்ட்ட பார்த்தேன்...பார்த்தா நூர்ஜகான்ற பேர் மட்டுந்தான் பளீர்னு தெரிஞ்சது.சரி சொல்லி வைப்பமேன்னு நூர்ஜகான் மேடத்த பார்க்கணும்னு சொன்னேன்.அவர் சரி இதுல எழுதுங்கன்னு சொன்னார்....என்னடா இது வம்பா போச்சேன்னு எளுதீட்டே யோசிச்சேன்....சரி அப்டிக்கா உள்ள போய்ட்டு வெளிய வந்துருவோம்னு நினைச்சிட்டு இருக்கும் போதே அந்தபக்கம் வந்த ஒரு பியூன்கிட்ட சார் மேடத்த பார்க்க வந்திருக்கார் கூட்டிட்டு போன்னு அதிர்ச்சி கொடுத்தார்.

மேடமா...ன்னுட்டு போர்ட்ட திரும்ப பார்த்தா, அந்தம்மா மீன் வளத்துறையில இனை இயக்குனர்....ஆஹா புள்ளையார் புடிக்க குரங்கா போச்சேன்னு நினைச்சிட்டு, சரி சமாளிப்போம்னு போனேன், அடுத்த ஐந்தாவது நிமிசத்துல அந்த அம்மா முன்னால உக்கார வச்சிட்டாங்க...ரொம்ப எளிமையா இருந்தாங்க, ....என்ன விசயம், நான் உங்களுக்கு என்ன பண்ணனும்னு கேட்டாங்க, அதுக்குள்ள நமக்குள்ள இருந்த டுபாக்கூர் வெளிய வந்து...மேடம் இந்த கலர்பிஃஷ் ப்ராஜெக்ட் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன்.அது விசயமா விவரம் கேக்கத்தான் வந்தேன்னு அள்ளி விட்டான்.

இப்ப என்ன பண்ணீட்டு இருக்கீங்கன்னு கேட்டாங்க...சொன்னேன், ஏன் இதுல உங்களுக்கு ஆர்வம்னு கேட்டாங்க...எவனுக்கு இதுல ஆர்வம்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு என்னவோ வளத்தா மீன்தான் வளக்கனும்னு வைராக்கியமா இருக்கற மாதிரி அள்ளிவிட்டேன். அடுத்த அரைமணி நேரம் நன்னீர் மீன்கள்(Freshwater fish) பத்தி பாடமே நடத்தீட்டாங்க...பின்ன இருவது ஏக்கர்ல கலர்மீன் வளக்க ஆசைப்படுறேன்னு சொன்னா என்னை எம்புட்டு பெரிய யாவாரியா நெனச்சிருப்பாங்க....

நீங்க சொல்றதும் சரிதான் மேடம்...அப்ப கலர்மீன் ப்ராஜெக்ட்ட நன்னீர் மீன் வளர்க்கிற ப்ராஜெக்ட்டா மாத்தீரலாம்னு பெரிய மனசு பண்ண அந்தம்மாவுக்கு அநியாயத்துக்கு சந்தோஷம். அப்ப தீவுத்திடல்ல பொருட்காட்சி நடந்துட்டு இருந்துச்சா, அவங்க Field officers எல்லாம் அங்க போய்ட்டாங்க, அந்த அம்மா அநியாயத்துக்கு சாரி கேட்டாங்க...அடுத்த பத்து நாளைக்கு அவங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதுன்னு ரொம்ப ஃபீல் பண்ணினாங்க, ஹி..ஹி..எனக்கே கஷ்டமா போச்சு.பரவாயில்ல மேடம் எதாவது ஃபார்ம் இருந்தா சொல்லுங்க நான் முதல்ல போய் பார்க்கிறேன். பத்து நாள் கழிச்சி வந்து உங்கள பார்க்கிறேன்னு சொல்ல அவங்களுக்கு திருப்தி.

கீழே தரைத்தளத்தில் நூலகம் ஒன்னு வச்சிருக்காங்க, அங்க போங்க உங்களுக்கு அட்ரஸ் தரச்சொல்றேன்னு சொன்னாங்க....ர்ரொம்ப ஃபீல் ஆகி அவங்களுக்கு தேங்ஸ் சொல்லீட்டு கீழ வந்தேன். அவங்க பூண்டி ஏரிகிட்ட இருக்கிற இரண்டு Seed farm அட்ரஸ் கொடுத்து போய் பாக்க சொன்னாங்க...தேமேன்னு வாங்கீட்டு வந்தேன்....இப்படியும் கவர்மெண்ட் ஆஃபீஸ் இருக்குமான்னு ஒரே ஆச்சரியமாபோச்சு....

பதிவு கொஞ்சம் நீளமாயிருச்சோ.....சரி இதப்படிச்சிட்டு சொல்லுங்க...அடுத்து என்னா நடந்துச்சின்னு எளுதறேன்....

7 comments:

said...

நீங்க தான் எங்க போனாலும் யாராவத புடிச்சுடுவீங்களே...

20 ஏக்கர்ல கலர் மீன்!!!..அடேங்கப்பா

நிஜமா சொல்லுங்க...உண்மையாவே அங்க இடம் இல்லாம், உண்மையாவே கார் நிறுத்த மட்டும் போய்
''இப்படிக்கா.. அப்படிக்கா '' மாட்டுனீங்களா..

said...

அடடே அடடே... என்ன கத. என்ன கத. அதெப்படி உங்களுக்குன்னு லேடி அதிகாரியா மாட்டுறாங்க? உண்மை வெளியே இப்போ வரணும். ஆமா.. சொல்லிட்டேன். ;-)

இதுல பறவைன்றது????? இன்னும் வரலையா?? ;-) இல்ல அப்பாலிக்கா தொடருதே அதுல வருமா?

20 ஏக்கர்ல கலர் மீனூ...ம்ம்ம்....சரி தான். உங்கள நம்புறதுக்குன்னே ஆளுங்க பொறந்து வருவாங்க போலப்பா. ஹா ஹா ஹா

said...

மங்கை...

மெய்யாலுமே கார் நிறுத்தத்தான் போனேன்...அது பெரிய காம்பவுண்டு....

நான் யாரயும் புடிக்கல தாயீ...அவங்கதான் என்ன புடிச்சிட்டாங்க...ஹி..ஹி...

said...

காட்டாறு...

என்னை இந்த பதிவெழுத தூண்டிவிட்டதே நீங்கதான்.....

//அதெப்படி உங்களுக்குன்னு லேடி அதிகாரியா மாட்டுறாங்க? //

வயித்தெறிச்சல கெளப்பாதீங்க...நூர்ஜஹானுக்கு எங்க அம்மா வயசிருக்கும்..ம்ம்ம்ம்ம்

//20 ஏக்கர்ல கலர் மீனூ...ம்ம்ம்....சரி தான். உங்கள நம்புறதுக்குன்னே ஆளுங்க பொறந்து வருவாங்க போலப்பா//

பொய்சொல்றதுன்னு முடிவாய்டுச்சி...அப்புறம் அதுல என்ன ஓரவஞ்சனை...அந்த அம்மா எவ்வளவு இடத்துல செய்ய போறீங்கன்னு கேட்டாங்க...நானும் ஒரு இருபது ஏக்கர் போதுமான்னு கேக்க அவங்க அசந்துட்டாங்க...ஹி..ஹி..

said...

டாக்டர்...

உண்மையாவே அது சூப்பர் பிஸினஸ் டாக்டர்...

இப்ப கூட நம்ம கையில 3 டன் மீனிருக்கு....ஹி..ஹி...

said...

wow

cool experience!!

said...

//இப்ப கூட நம்ம கையில 3 டன் மீனிருக்கு....ஹி..ஹி...//

உங்க கை அவ்வளவு பெரிசா :-))

ஏங்க லைட் எல்லாம் அண்ணா அறிவாலயம் எதிர்ப்பக்கத்துல , காமராஜர் அரங்கம் பக்கமல்ல விக்குறாங்க, நீங்க அதுக்கு எதிர்ப்பக்கமா போய் கார் நிறுத்த போனது தற்செயலா எப்படி எடுத்துக்கிறது ?

அந்த மீன்வளத்துறை காம்பவுண்டு ஓரமாக கடை வைத்து மீன் வறுவல் கூட விப்பாங்க , அரசு துறை என்பதால் மலிவா இருக்கும், இப்போ விக்குறாங்களா தெரியலை. நம்ம அரசு இன்னும் சரியா மீன் வளர்ப்பை முன் எடுத்து செல்லவில்லை. மக்கள் சுய ஆர்வத்தில செய்வது தான்.

பட்டிணப்பாக்கத்தில ஒரு மீன் வளர்ப்பு பயிற்சி அலுவலகம்னு இருக்கும் அது முன்னாடி நிறைய காலியிடம் இருக்கும் அதில் எப்போதும் சேரும் சகதியுமா குளம் போல தண்ணி நின்னுகிட்டே இருக்கும் , ஒரு வேளை எல்லாம் போட்ல தினமும் போவாங்களோனு நினைப்பேன்.:-))