அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, February 7, 2008

பிப்ரவரி மாத புகைப்பட போட்டிக்கு நம்ம மொய்....


இங்க சபையில எல்லாரும் படங்காட்றாங்க...நாம மட்டும் தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கமேன்னு தோணிச்சி, எல்லாரும் நல்ல நல்ல காமெரா வச்சி சூப்ப்ரா எடுக்கறாங்க, நமக்கு அதுக்கெல்லாம் கொடுப்பினையில்லையா....அதான் நம்ம கைபேசி கேமராவுல எக்க்க்க்க்க்க்க்கச்சக்கமா சுட்டதுல இது ரெண்டுதான் தேறிச்சி...அதை சபை நடுவுல வைக்கிறேன்....எல்லாருமா சேந்து இந்த தடவ சிறந்த வளரும் கலைஞன்(?) அப்டீன்ற பட்டத்த எனக்கே கொடுக்கனும்னு பணிவா கேட்டுக்கறேன்....ஹி..ஹி....

12 comments:

said...

ச்சே, என் கண்ணே பட்ரும் போல இருக்கு...என்னா மாதிரி எடுத்திருக்கான் பாரு....

(ஹி..ஹி..வெளம்பரம்...வெளம்பரம்)

said...

...என்னா மாதிரி எடுத்திருக்கார் பாரு....சொக்கர்...அண்ணா நகர் தானே!

said...

வாங்க மேடம்...ர்ர்ரொம்ப பிஸியா...

அன்னா நகர் டவர்தான்...MV Diabetic centre மொட்டை மாடியில இருந்து எடுத்தது....

said...

பிப்ரவரி போட்டித் தலைப்பு
வட்டம் இல்லையா?
நானும் இதுமாதிரி நிறைய வைத்திருக்கிறேன்.

சகாதேவன்

said...

வட்டமா....

இதெல்லாம் எனக்கு தெரியாதே....ஹி..ஹி..

பரவாயில்லை..நாம என்ன மெயின் கேட்டகிரிக்கா போட்டிபோடறோம்..."சிறந்த கத்துக்குட்டி"...அப்படீன்னு ஒரு பட்டா குடுக்க மாட்டாங்களா என்ன?

said...

என்னை பாடம்னே தெரியாம பரீட்சைக்கு போறவங்கள என்ன பண்ண

நல்லா இருக்கு...நம்ம கிட்ட தான் கப் இருக்கே...நமக்கு எதுக்கு பரிசு சொக்கரே..

வைய்ங்க அடுத்து தென்னந்தோப்ப போட்டி தலைப்பா அறிவிக்க சொல்லுவோம்..

said...

ஆமா முதல் படம் வேணா வட்டத்துக்கு கொஞ்சம் பக்கத்துல வருது.. உங்களுக்காக கட்டம்ன்னு தலைப்பு வைக்கும்போது பட்டமெல்லாம் கிடைச்சாலும் கிடைக்கும்..

said...

தப்பான எக்ஸாமுக்கு வந்த பையன் மாதிரி முழிச்சிட்டு நிக்கிறேனே....

பார்டர்ல பாஸாவோம்னு நினைச்சேன்....ஹி..ஹி...என்ன கொடுமையிது...

said...

ஆமா சொக்கரே

ரெண்டாவது படம்..நான் - மீன் - பறவைளோட லொகேஷனோ..:-))

said...

முதல் படத்தை பார்த்ததும் நினைவலைகள் எங்கேயோ இழுத்துட்டு போயிருச்சி. ம்ம்ம்.. கதை பேசி திரிந்த அந்த நாட்கள்... நாம் நெனச்சாலும் திரும்ப வராது, இல்லையா?

said...

முக்கியமானது சொல்ல மறந்துட்டேன்... ஒளியின் உட்புகுதல் நல்ல முயற்சி.

said...

Hi, They are good photos..
How to participate on PIT?

Thanks.