அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, May 28, 2008

தூவல் கொட்டாரத்திலிருந்து பாண்டி அன்னை வரை...

சனிக்கிழமை மதியம் சேனல் மேய்ந்து கொண்டிருந்த போது ஏசியா நெட்டில் தூவல்கொட்டாரம் ஆரம்பித்தது. கல்லூரி நாட்களில் இருந்து மளையாள படங்கள் என்றாலே ஒரு கிக்தான். என்ன ஒரு வித்தியாசம் அப்போது படத்திற்கு இடையே வரும் பிட்டுக்காக படம் பார்த்தேன், இப்போது படங்களை பார்க்கிறேன்....அவ்வளவே. மளையாள படங்களில் வரும் கிராமமும் அது சார்ந்த சூழலும் அதன் மக்களும் என்னை கவர்ந்ததுண்டு. அடுத்த பிறவி என ஒன்றிருக்குமானால் கேரளாவில் ஏதாவது ஒரு கிராமத்தின் வசதியான ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டுமென நினைத்திருக்கிறேன். இந்திய அளவில் மிகச்சிறந்த நூறு நடிகர்கள் என பட்டியலிட்டால் அதில் நிறைய மலையாளா நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.

தூவல் கொட்டாரமும் கிராமிய பிண்ணனி சார்ந்த ஒரு கதைதான்...கதையெல்லாம் சொல்லி உங்களை கொடுமைப்படுத்தப் போவதில்லை.வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். மிகச்சிறந்த படமென்று சொல்லமுடியாது, ஆனால் கீராமீயமும் அதன் மக்களும்,உறவுகளும் முடிந்தவரையில் பாசாங்கில்லாமல் நகைச்சுவையாக பதியப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி. எல்லாம் சரிதான் இதுவரையில் தூவல்கொட்டாரத்திற்கு அர்த்தம் தெரியாது...அழகிய மளையாள சேச்சிகள் யாராவது என் சந்தேகத்தை தீர்த்துவைக்க முன்வந்தால் சந்தோஷப்படுவேன்.

படம் பார்த்து முடித்த கையோடு பாண்டிச்சேரி கிளம்பினேன்...திட்டமிட்ட பயணம் இல்லை...திடீரென தோன்றியது. பாண்டிச்சேரி பக்கம் அடிக்கடி போயிருந்தாலும் அரவிந்தர் ஆசிரமத்திறகு போனதில்லை. இந்த முறை அரவிந்தாஸ்ரமம் சென்றுவிட்டு ஆரோவில் போய்வருவது என தீர்மானம். ஐந்தரை மணிவாக்கில் கிளம்பி திண்டிவனம் போய் அப்டிக்கா லெஃப்ட்ல கட் பண்ணி பாண்டிச்சேரியை முத்தமிட்டபோது ஏழரை. வழக்கமாய் டேராப் போடும் 'மாஸ்'ஸில் முகம் கழுவி கடற்கரை போய் குடும்பமாய் பத்து மணி வரை அரட்டையடித்துவிட்டு, அஞ்சப்பரில் ஒரு கட்டு கட்டிவிட்டு அறை திரும்பியபோது சந்தோஷமாய் உணர்ந்தேன்.


(எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது கேட்டுப்பாருங்கள்)

காலையில் அரவிந்தாஸ்ரமம், பெரிய வளாகமாயிருக்குமென நினைத்திருந்தேன், ஏமாற்றமாய் போய்விட்டது. ஒரு வீடும் அதன் பக்கத்தில் தோட்டம் மாதிரியான இடத்தில் அரவிந்தர் மற்றும் மதர் என்றழைக்கப்படும் அன்னையும் ஒரே சமாதியில்.....எல்லோரும் மண்டியிட்டு சமாதியில் தலைவைத்து கண்மூடி தியாணித்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள் எல்லாரையும் விரட்டிக் கொண்டிருந்தார். சமாதியை சுற்றி நிறைய பேர் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். எனக்கும் தியானம் செய்யவேண்டுமென ஆசைதான், ஆனால் மனது அலைகிறது. மவனே எத்தனை நாள் அலைவே...என்னிக்காவது ஒரு நாள் அடங்குவேல்ல அன்னிக்கு தியானம் பண்ணிக்கிறேனென தியானத்தை தியாகம் செய்தவன் நான். சமாதியில் நானும் மண்டியிட்டு தலைவைத்து கண்னை மூடினேன், வித்தியாசமாய் ஏதும் தோன்றவில்லை.... பின்னால் விரட்டிய ஆசாமியின் முகம்தான் நியாபகத்துக்கு வந்து தொலைத்தது.

அந்த வீட்டில் அரவிந்தர் தொடர்பான நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.எனக்கு அரவிந்தரைப்பற்றி எதுவும் தெரியாது, அதன் பொருட்டு நாலைந்து தமிழ்புத்தகங்களை வாங்கினேன். அரவிந்தரின்,'எனது சிறை அனுபவம்' என்ற புத்தகத்தை முதலில் வாசிக்க நினைத்திருக்கிறேன். இந்த வருடத்திற்குள் வாசித்தாகவேண்டும்.

ஆரோவில் போய் ஏமாந்தது தனிக்கதை, எழுதுகிற எனக்கே இந்த இடத்தில் சலிப்பு தட்டுகிறது...பாவம் பிழைத்துப் போங்கள். இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


இரண்டாம் சொக்கன் என்கிற பெயருக்கான காரணத்தைக் கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களும்,தொலை பேசி அழைப்புகள் வந்து தொல்லை செய்வதாக நினைப்பதால் எதிர்வரும் பதிவொன்றில் அதை பகிர்ந்து கொள்கிறேன்....ஹி...ஹ்ஹி...ஹி

6 comments:

said...
This comment has been removed by the author.
said...

//இந்திய அளவில் மிகச்சிறந்த நூறு நடிகர்கள் என பட்டியலிட்டால் அதில் நிறைய மலையாளா நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.
//
எனக்கும் இந்த கருத்தில் உடன்பாடு உண்டு.
மோகன்லால்,மம்முட்டி,நெடுமுடி வேணு,திலகன்,இன்னோசன்ட்,
சீனிவாசன்,முரளி,முகேஷ்,K.P.S.லலிதாஇப்படி இந்த பட்டியல் நீளும்.

//மளையாள படங்களில் வரும் கிராமமும் அது சார்ந்த சூழலும் அதன் மக்களும் என்னை கவர்ந்ததுண்டு//

இதற்காகவே மலையாள படங்கள் பார்ப்பதுண்டு.இப்போ கூட "நரன்" படம் போன வாரம் பார்த்தேன்.அசத்தலான லோகேசன் படம் முழுவதும் பசுமையான காட்சிகளாக இருக்கும்.

இப்போது வரும் மலையாளப் படங்கள் அவ்வளவாக நன்றாக இருப்பதில்லை.நம்ம பேரரசு படங்களே பரவாயில்லை என்கிற அளவிற்கு அங்கே இப்போது படங்கள் வருகின்றன.தவிரவும் தமிழ் படங்களைத் தான் மலையாளிகளே இப்போது விரும்பி பார்க்கிறார்கள்.
எதார்தமான படங்கள் இப்போது அங்கே வருவதில்லை.

said...

எங்க அம்மா இந்த பாட்டை காலையில் தினமும் போட்டுவிடுவாங்க டிவியில் முன்னாடி எல்லாம் அதைகேட்டப்படியே அப்படியே புரண்டு பாத்துட்டு எழுந்திருப்பது வழக்கம்..

said...

கொட்டாரம் என்றால் அரண்மனை.

said...

"மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" பாடல் மிக அருமையாக இருக்கு.

இப்போதுதான் முதல்முறை கேட்கிறேன்.

said...

/
கல்லூரி நாட்களில் இருந்து மளையாள படங்கள் என்றாலே ஒரு கிக்தான்
/

சேம் ப்ளட்
:)))))