அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, May 4, 2008

ஃபைவ் ஸ்டார் சாமியும், மொபல் பதிவுகளும்

புதிதாய் எழுத ஏதுமில்லைதான், அதற்காக எழுதாமல் இருந்து விட முடியுமா என்ன? குறுதி அழுத்தம் எகிறிக்கொண்டிருப்பதால் இனி காருக்கு ட்ரைவர் கட்டாயம் என்கிற ஹைகமாண்ட்டின் அதிரடி சட்டத்தை எதிர்த்து பொங்கியெழுந்து போராடி பலனில்லாமல் போகவே இப்பொழுதெல்லாம் பின் சீட்டில் பெரிய வெங்காயம் போல உட்கார்ந்து தீவிரமாய் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நேற்று கிழக்கு பதிப்பகத்தின் சிரிப்பு டாக்டர் படித்தேன். இன்றைக்கு கிரிவலம் பற்றிய புத்தகம் எடுத்து வந்து படிக்காமல் உங்களுக்காக இதை லாப்டாப்பிக் கொண்டிருக்கிறேன்.

நேற்று இரவு ஏதோவொரு ஹிந்தி ச்சானலில் 'கேம்ளர்' என்கிற படத்தை பார்த்தேன். தேவ் ஆனந்த் மாதிரியான சவடாலான ஸ்டைல் ஹீரோ இடத்தை நிரப்ப இதுவரை இன்னொரு ஆள் வரவில்லையென்றுதான் நினைக்கிறேன், ராஜேஷ் கண்ணா இந்த இடத்தை ஓரளவிற்கு பிடித்தார் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். நமது நடிகர் திலகம் கூட நிறைய படங்களில் தேவ் ஆனந்தின் ஸ்டைலை காப்பியடித்திருக்கிறார். எனக்கும் தேவ் ஆனந்த், ஷம்மி கபூர் போன்ற கோமாளித்தனமான ஹீரோக்களைத்தான் பிடிக்கிறது. இந்த வகையில் நமது ஜெமினியும் சேர்த்தி.

வேலூர் தங்க கோவிலுக்கு பிரியங்கா போனார் என்கிற செய்தியை படித்தவுடன், தில்லியிலிருந்து வந்து பார்க்கும் அளவிற்கு என்ன இருக்கிறது என்கிற ஆவலில் நேற்று காலையில் காரை விரட்டிப்போனேன். வேலூருக்கு போய் பத்து பன்னிரெண்டு வருசம் ஆகியிருந்ததால் வேலூரின் வளர்ச்சியை பார்த்து பிரம்மித்தென். மானாமதுரை ரேஞ்சிற்கு இருந்த வேலூர் இன்றைக்கு போஷாக்காய் இருக்கிறது. கோட்டையை சுற்றிய அகழியில் படகுச்சவாரி செய்பவர்களை பார்க்க பரிதாபமாய் இருந்தது. (எத்தனை நாளைக்குத்தான் பொறாமைப்படுவது...ஹி..ஹி..).

வேலூரை தாண்டி ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீபுரம் என்கிற இடத்தில் அநியாயத்துக்கு பிரம்மாண்டமாய் கட்டியிருக்கிறார்கள். அநேகமாய் இந்தியாவின் முதல் 5ஸ்டார் கோவில் என்கிற பெருமையை இந்தை கோவில் தட்டிக் கொண்டு போகும். எங்கு திரும்பினாலும் இறைக்கப்பட்ட பணம்தான் தெரிகிறது. தர்மதரிசனம், கட்டண தரிசனம் இங்கேயும் உண்டு, ஞாயிற்றுகிழமைகளில் 100 ரூபாய், வார நாட்களில் 250 ரூபாய். எல்லாமே பெரிது பெரிதாய் இருப்பதால் ஏதோ எக்ஸிபிஷனுக்குள் நுழைந்த உணர்வுதான் வருகிறது.

கருவறையில் எனது குருவினை மனதில் தியானித்து வணங்கினேன். இப்பொழுதெல்லாம் குருவழிபாட்டில்தான் மனம் லயிக்கிறது. குருவை மிகையாக ஆராதிக்க வேண்டிய அவசியமில்லை. குருவின் அனுசரனையையும், வழிகாட்டுதலையும் நினைத்து வணங்கினாலே அது குருவழிபாடு என நினைத்திருக்கிறேன். இது குறித்து சித்தர்கள் பித்தர்கள் பதிவின் தொடர்ச்சியில் பார்ப்போம். கோவிலில் மிக நேர்த்தியாக உங்களிடம் இருந்து பணம் வசூலிக்க நிறைய ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் செலவழித்து விட்டு வரலாம்.

கோவிலின் எதிரில் இதை நிர்மாணித்த நாராயணி பீடத்தின் சாமியார் இருக்கிறார். அவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன். அவரை எல்லோரும் நாராயணி அம்மா என்கிறார்கள். அவரை பார்த்த்தவுடன் அதிர்ச்சியாய் போய்விட்டது. வயதான ஆசாமியாய் இருப்பார் என நினைத்தால் 32 வயது இளைஞர். எனது நண்பன் ஒருவன் மெலிவாய் இருந்தால் எப்படி இருப்பானோ அத்தகைய தோற்றம். இத்தனை சின்ன வயதில் இவரால் இத்தனை பெரிய நிர்மாணம் செய்ய முடியுமானால் அவரின் நிர்வாக ஆளுமை குறித்த வியப்பில் எனக்கு மரியாதையே தோன்றியது. அவரின் ஆசிரமத்திற்குள்ளேயே ஒரு கோவில் இருக்கிறது. அதற்கு அவர் பூசை செய்து கொண்டே போக செம்மறியாடுகளாய் பக்தர்கள் பின் தொடர நானும் தொடர்ந்தேன். கடைசியாய் நன்கு கொழுத்த பசுவொன்றிற்கு கோபூஜை செய்தார், உட்கார்ந்து முழுதாய் பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் முயற்சித்திருந்தால் அவரை தனியாக சந்தித்திருக்கலாம். கொடுத்து வைக்கவில்லை...யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ நாராயணி அம்மாவாகிய இவர் துர்க்கை, சரஸ்வதி, லக்ஷ்மியின் சொரூபம் என ஆசிரம நிர்வாகி ஒருவர் பயபக்தியுடன் சொன்னார். அவர் நம்பிக்கை அவருக்கு, நாமென்ன சொல்ல முடியும்.மொத்தத்தில் சென்னைக்கு அருகாமையில் போய் வர ஒரு பிக்னிக் ஸ்தலமாக இதை கொள்ள குடும்பத்துடன் முடிவு செய்தோம். மாலை நேரத்து விளக்கொளியில் கோவில் இன்னமும் சூப்பராய் இருக்குமாம்...போய்த்தான் பாருங்களேன்.

இதை நெல்சன் மாணிக்கம் ரோட்டின் ட்ராபிக் நெரிசலில் சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த முயற்சி ஒர்க்கவுட் ஆகுமானால் இனி இதுமாதிரி நிறைய பதிவுகளை போட்டுக் கொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

5 comments:

said...

புத்தகம் படிக்காம பதிவெழுதறீங்களே..உங்களுக்கு பதிவுலகில் ரொம்ப கடமையுணர்ச்சி அதிகாமாயிடுச்சு போல..
இப்படி புதிசா எங்காவது போயிட்டு போட்டோ போட்டு எழுதறது சுற்றுலா பதிவு.. நான் ரொம்ப நாளா எழுதல..நீங்க வேலூர் பதிவு எழுதி இருக்கீங்க.. இப்படி நாலு இடம் குடும்பத்தோட போய் அமைதியா இருந்துட்டுவந்தா குறுதி அழுத்தம் எல்லாம் போயிடுமோ?..

said...

//குறுதி அழுத்தம்//

இதுக்கு அழகா தமிழ் வேற...ம்ம்ம்

தில்லியில இருக்குற அக்ஷர்தாம் கோயிலைப் போலவா நீங்க சொல்ற கோயில்? குஜராத்திகளால் கட்டப்பட்டது..நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா அப்படித்தான் தெரியுது..இங்க இருக்குறதும் நாராயணி பீடம் தான்..

said...

ரொம்ப நாளா போணும்னு ஒரு நினைப்பு இருந்துகிட்டேதான் இருக்கு இன்னும் சமயம் வரல. பார்ப்போம் இந்த வார இறுதி எப்படி போகுதுன்னு. ஆனா இப்படி அதிகம் செலவு பண்ண வாய்ப்புள்ள இடத்துக்குப்போனா இரத்த அழுத்தம் ஏறத்தானே செய்யும். சென்னையில் நெல்சன் மாணிக்கம் ரோட்டுக்கு மாற்று வழி இருக்குங்க ...

said...

அண்ணாத்த ரெண்டு படம் பிடிச்சி போட்டிருக்கலாம்ல !?!?

said...

neengaLum vellore kOvillup pOneengaLaa? nanum poippaarththu en anupavaththai pathivu seythirukkEn:
http://vettivambu.blogspot.com/2008/06/blog-post.html