அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, March 5, 2008

*வயதுக்கு வராதவர்கள் இதை படிக்கவேண்டாம்....

பதிவெழுதி நாளாகிவிட்டது....ஆனால் தினமும் பதிவெழுதும் ஒரே பதிவரும் நானாகத்தான் இருப்பேன்.

என்ன கொடுமையிது சரவணா....

புரியாதவர்கள் மெனக்கெடாமல் தொடர்ந்து படியுங்கள். சுஜாதா போய்விட்டார், போனால் என்ன?, நானிருக்கிறேன் கவலைபடாதீர்கள் என யாராவது சொல்வார்கள் என பார்த்தேன்....ஒப்பாரி வைத்தவர்களையும், சவ ஊர்வலத்தில் டான்சாடியவர்களையும்தான் பார்க்க முடிந்தது.

நான் இருக்கிறேன் கவலைபடாதீர்கள்....

கடந்த சில நாட்களாய் பலான வார்த்தைகளை வைத்து தலைப்புகள் செய்வதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மதுரைபக்கம் புழங்கும் அத்தனை கெட்டவார்த்தைகளும் அத்துபடியாகையால் அதை வைத்து சில தலைப்புகளை யோசித்தேன். அதையெல்லாம் இங்கே சொன்னால் ஆபாசமே உன் பெயர்தான் இரண்டாம் சொக்கனாவென கொதித்தெழுவதைப் போல நடிப்பீர்கள்.தேவையா அதெல்லாம்....

தமிழச்சியின் பெயர் *****...வாம், வித்தியாசமான பெயர், விடாது கருப்பின் பதிவில்தான் இதை தெரிந்து கொண்டேன்.விடாது கருப்பாக காட்டபடும் சதிஷ் என்பவர் அப்பாவியாம், பின்னனியில் போலி டோண்டுதான் எழுதுகிறாராம்....இப்போது அவரின் பெயரை சுருக்கி செல்லமாய் 'போடோ' என்று எழுதுகிறார்கள்.இதன் மூலம் பெரியவர் டோண்டுவின் கோபத்திற்கு ஆளாகவேண்டாம் என சம்பந்தபட்டவர்களை எச்சரிக்கிறேன்.

ஒருவரின் எழுத்து நடையை திருடிக் கொள்ள முடியுமானால் இரண்டு பெண் பதிவர்களின் நடையை தைரியமாய் திருட ஆசையாய் இருக்கிறது, ஒருவர் இப்போது தமிழில் பதிவே எழுதுவதில்லை, மற்றவர் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார். யார் என தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம். சரியாய் சொல்பவர் கனவில் நமீதாவை வர வைக்கவேண்டியது என் பொறுப்பு. சரியாய் சொல்லும் பெண் பதிவர்களின் கனவில் யாரை வரவைக்கலாம்....இதை முடிவு செய்யும் பொறுப்பை சர்வேசன் கையில் கொடுத்துவிடலாம். போட்டிகளுக்கு தலைப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் மனிதர்.

எனக்கென்னவோ அடுத்த இந்திய பிரதமராக சந்திரபாபு நாயுடுதான் வருவார் என தோன்றுகிறது. காங்கிரஸும், அ.தி.மு.க வும் வேண்டா வெறுப்பாய் வெளியில் இருந்து ஆதரவு தரும். வழக்கம் போல கலைஞரின் ஆட்கள் மத்திய மந்திரியாய் தொடருவார்கள்....ஈழச் சகோதரகளுக்காக கலைஞர் தொடர்ந்து கவிதை எழுதுவார். நெடுமாறனும், வைக்கோவும் தங்கள் உடல் நலத்தினை பேணும் பொருட்டு நடைபயணம், உண்ணாவிரதமென உதார் விட்டுக் கொண்டிருப்பர்கள் என்றே தோன்றுகிறது.

இந்தியாவின் தயவில்லாமல் இலங்கை பிரச்சினையை தீர்த்துவிட முடியாது என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொண்ட அளவிற்கு புலிகள் உணரவில்லையோவென அவ்வப்போது தோன்றுகிறது. மகிந்த ராஜபக்ஷே இந்திய நடுவன் அரசிற்கு நன்றாக குல்லா போட்டு ராணுவ அனுகூலங்களை அள்ளிக் கொண்டு போகிறார். புலிகள் இன்னமும் வைக்கோ, நெடுமாறன்...இப்போது புதிதாய் முளைத்திருக்கும் திருமா,போன்ற மண் குதிரைகளை வைத்துக் கொண்டு என்ன செய்துவிடப் போகிறார்கள் என தெரியவில்லை.

சிதம்பரம் கோவில் பூசாரிகளை இந்திய மல்யுத்த அணியில் சேர்த்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பலாம், நன்றாய் குஸ்தி போடுவார்கள்,தில்லையம்பலத்தான் அருளால் மெடல் வாங்கினால் எல்லாருக்கும் பெருமைதானே,

ஜோதா அக்பர் படத்தினை கையில் வைத்துக்கொண்டு பார்க்க நேரம் கிடைக்காமல் நாலைந்து நாளாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன். என்ன வாழ்க்கையிது....

இனி இந்த மாதிரி இலக்கில்லாமல் எழுத நினைத்திருக்கிறேன்....ஆதரவு குடுக்காதீங்க!

*இந்த மாதிரி தலைப்பு வச்சாத்தான் இங்க குப்பை கொட்ட முடியும்னு தோணினதால...

7 comments:

said...

/// இந்த மாதிரி தலைப்பு வச்சாத்தான் இங்க குப்பை கொட்ட முடியும்னு தோணினதால... ///

இத தான் நானும் சொல்றேன்.

said...

தமிழச்சி...

இந்த விசயத்துல நீங்கதான் நம்ம குருஜி...

ஹி..ஹி...இனி போட்டு தாக்கீர வேண்டியதுதான்...

said...

///தமிழச்சி...

இந்த விசயத்துல நீங்கதான் நம்ம குருஜி...

ஹி..ஹி...இனி போட்டு தாக்கீர வேண்டியதுதான்...///

நக்கலு!

தாக்க தாக்க
தமிழ்மணத்தை தாக்கவா?
நோக்கம் நோக்கம்
சமூகத்தை திருத்தவா?

said...

சீரியஸாத்தான் சொல்றேன்...இது நல்ல உத்தி...

said...

//விடாது கருப்பாக காட்டபடும் சதிஷ் என்பவர் அப்பாவியாம், பின்னனியில் போலி டோண்டுதான் எழுதுகிறாராம்....//


ஹாஹாஹாஹாஹா


மேல சொல்லுங்க.

said...

//ஹாஹாஹாஹாஹா//

ஏனுங்க, இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்....

அப்பால நம்ம ஏரியாவுக்கு மொதவாட்டி வந்திருக்கீங்க....நல்வரவாகட்டும் கருப்பரே!

said...

//இனி இந்த மாதிரி இலக்கில்லாமல் எழுத நினைத்திருக்கிறேன்....ஆதரவு குடுக்காதீங்க!
//

ஹா ஹா ஹா... அப்புறம்?