அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, November 6, 2007

இப்படியும் ஒரு மருத்துவம்....!

கொஞ்ச நாளைக்கு முன்னால இதயம் நல்லெண்ணை நிறுவனம் "ஆயில் புல்லிங்"(Oil Pulling) பத்தி விளம்பரம் செய்ததனை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பீர்கள் என தெரியவில்லை. பண்டை தமிழர்கள் இதை செய்து நோய் நொடியின்றி வாழ்ந்ததாகவெல்லாம் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு தங்கள் நல்லெண்ணையை வாங்கி உயயோகிக்கும் படி கூறினர். அப்போது ஏதோ விளம்பர உத்தி என நினைத்தாலும் சமீபத்தில் அது குறித்த ஒரு தமிழ் புத்தகத்தை படிக்க நேர்ந்தது....புத்தகம் கிடைக்கும் முகவரி பதிவின் இறுதியில்....

காலையில் வெறும் வயிற்றில் இந்த எண்ணையை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்புவதுதான் ஆயில் புல்லிங்....இதனால் பல உடற்கோளாறுகள் தீர்வதாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். சாதாரண இருமல் சளி முதல் புற்றுநோய் வரை குணமாவதாக இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார்.இந்த நூலின் ஆசிரியல் ஒரு மருத்துவர் எனவும் தனது பல நோயாளிளுக்கு இந்த சிகிச்சையின் மூலம் குணமளித்துள்ளதாக விரிவாக விளக்குகிறார்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த டாக்டர்.மெத்கராஷ் என்பார் தனது நோயாளிகளுக்கு சூரிய காந்தி எண்ணணயை கொப்பளிக்க கொடுத்து பல நோய்களை குணமாக்கியதாக இந்த நூலாசிரியர் கூறுகிறார்.குறிப்பாக ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இது அருமருந்து என குறிப்பிடுகிறார்.

இந்த ஆயில் புல்லிங்கை எப்படி செய்யவேண்டுமென ஆசிரியரின் வரிகளையே தருகிறேன்....

....தூய்மை செய்யப்பட்ட்ட(ரிஃபைண்ட்) சூரியகாந்தி எண்ணையாவது, வேர்கடலை எண்ணையோ, நல்லெண்னையோ(எள் எண்ணை) இரண்டு தேக்கரண்டி அதாவது பத்து மில்லி லிட்டர் அளவிற்கு வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.ஆனால் விழுங்கி விடாதீர்கள்.பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக ஓய்வாக அதனை வாயில் சப்பியவாறு வாய் முழுவதும் கலந்து திரியும்படியாக கொப்பளியுங்கள்.தாடை சற்று உயர்த்தி இருக்கட்டும்.இடையில் பற்களின் இடைவெளிகளுக்கூடு செல்லுமாறும் கொப்பளியுங்கள்.தொண்டைக்குள் கொண்டு செல்ல வேண்டாம்.இப்படியே பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள்.முதலில் வாய் முழுவதும் வழவழவென்று உள்ளதைப்போல் காணப்படும்.சில நிமிடங்கள் கழித்துப் பின்னர் அது நீர்த்துப் போய் வாயினுள் எளிதாக நகர்கிறது. 15 நிமிட நேரத்தில் எண்ணை நுரைத்து வெண்மையாகி நீர்த்துப் போகிறது.அப்போது அதை உமிழ்ந்து விடுங்கள்.வெள்ளையாக இல்லாமல் எண்ணண மஞ்சளாக இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும்.உமிழ்ந்து விட்ட பின்னர் வாய் கொஞ்சம் நுரைத்த வழவழப்புடன் உள்ளதைப் போல காணப்படும்.ஒன்றிரண்டு நிமிடங்கள் நுரையினை உமிழ்ந்து போக செய்து இரண்டாம் முறை உமிழுங்கள்.அப்படி உமிழ்ந்த பிறகு வாயை நான்கைந்து முறை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.பற்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.இதனால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கிருமிகள், கேடு விளைவிக்கும் பொருள்கள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன......

இதை விடியற்காலையில் வெறும் வயிற்றில் பல் தேய்த்த பிறகு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்குமாம். அதிக பட்சம் தினமும் மூன்று தடவை செய்யலாமென்கிறார் இந்த நூலாசிரியர்.ஆனால் வயிறு காலியாக இருக்க வேண்டுமென வ்லியுறுத்துகிறார்.

நல்ல பலன் இருக்குமென அடித்துக் கூறுகிறார் நூலாசிரியர்....எளிய வைத்தியம் செய்து பார்க்கலாமே....

இனி நூலின் விவரங்கள்...

வியத்தகு எண்ணெய் மருத்துவம்
ஆசிரியர் - தூம்மல் கோட்டேசுவரராவ்
கிடைக்குமிடம்
செல்வி பதிப்பகம்
25,இரண்டாம் தெரு
லூர்து சாமி குடியிருப்பு
காசாமலை, திருச்சி-620023
தொலைபேசி:0431 - 2420568

7 comments:

said...

எந்த நாட்டோட சதின்னு தெரியல...இந்த பதிவை தமிழ்மணத்துல இனைக்க முடியல...

ம்ம்ம்ம்ம்...

said...

ஹை..தமிழ்மணத்துல வந்துருச்சி...

என்ன கொடுமையிது...என் பதிவுக்கு நானே பின்னூட்டம் போட்டுக்க வேண்டியிருக்கு....

ஹி..ஹி...

said...

நிறைய தஞ்சாவூர்காரங்க இதுமாதிரி பண்ணுவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். in fact there was such a great demand for that இதயம் 4 ரூபாய் பாக்கெட்...
ஆனா சொக்கரே
அத குடிச்சா.. அப்புறம் wash room -ல் தான் குடித்தனம் பண்ண வேண்டியிருக்கும்..

said...

டாக்டர்...

இதை நீங்க ட்ரை பண்ணீருக்கீங்களா...

said...

சதயத்துகிட்ட இருந்து திருடி போட்டு இருக்கீங்க இந்த லேஅவுட்.. அதான் இனைக்க முடியலை..:-)))

ஐயா ஒரு விஷயம்
மருத்துவ தந்தை ஆகனும்னு கங்கனம் கட்டீட்டு இருகீங்க போல... ஆகறது தான் ஆகறீங்க, தமிழ்மணம் அன்பர்களுக்கு சிகிச்சை இலவசம் தானே...

said...

இந்த லேஅவுட் வேற இடத்துல இருந்து சுட்டது....

said...

No. I haven't tried,
But I know so many people in Tanjore district who uses them regularly....