அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, November 4, 2007

சிங்கத்தின் அறிக்கை...!

எங்கியாச்சும் சிங்கம் அறிக்கை விடுமான்னெல்லாம் அசட்டுத்தனமா கேக்கப்டாது. ஆனா இந்த அறிக்கையை சிங்கந்தான் விடுது...சரியா...யார் சிங்கம்னு இன்னேரம் புரிஞ்சிருக்கணுமே.....ஹி..ஹி..

என்னிய நானே சிங்கம்னு சொல்லிக்காட்டி வேற யாரு சொல்லுவா?....அதுனால மறுபடியும் நானே சொல்லிக்கறேன்...நான் சிங்கந்தான்...ஹி..ஹி...சரி, எதுக்கு இம்புட்டு பில்டப்னு தோணுமே.....தோணீருச்சா....வெளக்கமா அறிக்கைய படிங்க...

அதாகப்பட்டது கடந்த சில வருடங்களாய் தினமும் பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் உழைப்பதைப்(?) போல நடித்ததால்(!)...சிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு வந்திருச்சி...கொஞ்ச நஞ்சமில்லை 110 - 150,... இம்புட்டு ச்சின்ன வய்சுல(?) இது ஆவாதாமே...நெம்பவே பயமுறுத்தீட்டாய்ங்க சிங்கத்த....

இனி சென்னை செந்தமிழ்....

பத்து நாளைக்கு முன்னால..அப்டிக்கா வள்ளுவர் கோட்டத்தாண்ட ட்ரைவ் பண்ணிகினு இருந்தப்ப...திடீர்னு பின் மண்டைல ஜிவ்வுனு சூடாகி உடம்பெல்லாம் ஒரு மாதிரி இறுக்கம் பரவி படபடப்பா..கண்ணெல்லாம் மங்கி...என்னாடா இது புது ஃபீலிங்கா இருக்கேன்னு நெனக்கச்சொல்ல...குப்புனு வேர்வை...ஆஹா ஹார்ட் அட்டாக்தான் வந்திருச்சோன்னு டவுட் ஆகி...சரி தங்கமணிய கூப்ட்டு மரண வாக்குமூலம் கொடுத்துரலாம்னு டிசைட் பண்ணி வண்டிய ஓரங்கட்டச்சொல்ல...ஸ்லோவா ரெக்கவர் ஆயிடுச்சி....

இருந்தாலும் ஹைகமாண்டு கைல ரிப்போர்ட் பண்ணீரலாம்னு கூப்டா அடுத்த பிஃப்டீன் மினிட்ஸ்ல பஸ்ல பிக்பாக்கட் அடிச்சவனை அள்ற மாதிரி தம்பியும், தங்கமணியும் நம்மள கொத்தா அள்ளீடாங்க....அந்த ஸ்பாட்லயே பிபி பார்த்துட்டு தங்கமணி டென்சனாயிருச்சி, மவனே சொன்னா கேக்கறியான்னு புலம்பீட்டே நாலஞ்சு மாத்திரைய கொடுத்து முழுங்கச்சொல்ல முழுங்கித் தொலைசேன்...அடுத்த ஒன் அவர்ல...ஈ.சி.ஜி...எக்கோன்னு என்னன்னவோ டெஸ்ட்...எல்லாம் நார்மலாத்தான் இருக்கு...பிபி மட்டுந்தான்னு தெரிஞ்ச்ப்புறந்தான் தங்கமணியோட பிபி நார்மலாச்சு.

அப்புறமென்ன..தங்கமணி நம்மள பேஷண்ட்னு டிக்ளெர் பண்ணி வூட்டுக்கு இட்டுகினு போய்டானுங்க....ரெண்டு மூணு நாளா மாத்திரைய முழுங்கறதும்...தூங்கறதும்...தங்கமணி பிபி பார்த்துட்டு கண்ணை உருட்டி மிரட்றதுமா பொழுது போச்சி.....லாப்டாப், செல்போன் எல்லாம் ச்சீஸ் பண்ணீடாய்ங்க...கம்ப்யூட்டர் பக்கம் போனா கம்ப்யூட்டர தூக்கி வெளிய எறிஞ்சிடுவேன்னு அன்பான அறுதல்கள்.....அதச் செய்யாதா...இதை செய்யாதேன்னு...ஜெயில் வார்டன் ரேஞ்சுக்கு இம்சை....நம்மோட மோசமான எதிரிக்கு கூட டாக்டர் பொண்டாட்டி கிடைக்கக் கூடாதுன்னு அப்ப சின்சியரா வேண்டிக்கிட்டேன்...ஹி..ஹி...

இருந்தாலும் சைக்கிள் கேப்ல நம்ம வர்த்தகப் பதிவுகளை மட்டும் தங்கமணிக்கு தெரியாம அப்டேட் பண்ணீட்டு இருந்தேன்....பிபி ஒரு வழியா நார்மலாக, ஒரு சுப வேளையில் கார்டியாலஜிஸ்ட் கிட்ட போனேன்(இழுத்துக் கொண்டு போனார்கள் என்பதுதான் உண்மை.). தங்கமணி அவருக்கு நிறைய கேஸ் ரெஃபர் பண்ணுவதால் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்(எரிச்சலாக்கினார்) என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.(ஹி..ஹி..அறிக்கை)

தண்ணி அடிப்பியா?....தம் அடிப்பியா?...வாக்கிங் போறியா?..எக்ஸர்ஸைஸ் பண்ணுவியா?..ன்னு கேக்க கேக்க சமத்தா இல்லைன்னு தங்கமணி பதில் சொல்ல நான் மாடு மாதிரி தலையை ஆட்டி அமோதித்துக் கொண்டிருந்தேன்.ஒரு கட்டத்தில் கெட்ட பழக்கம் ஒன்னுமேயில்லையா?...நீங்க ர்ர்ரொம்ம்ப லக்கின்னு தங்கமணிக்கு ஐஸ் வைக்க தங்கமணிக்கு ஒரே பெருமை...அப்புறமா நம்ம வேலை விவகாரங்களை விசாரிக்க ஆரம்பிக்க..நாம நாலஞ்சி தொழிலை கட்டி மாரடிக்கறதை சொல்ல டாக்டர் பிரகாசமானார்.

ஸ்ட்ரெஸ்...ஸ்ட்ரெய்ன்...னு...ஆரம்பிச்சு ஒரு மினி லெக்சர்...ரொம்ப அக்கறையா இந்த காதுல வாங்கி அடுத்த காதுல விட்டுட்டிருந்தேன்.நீங்க ட்ரைவர் வச்சிருக்கீங்கள்ல...னு கேட்க,நான் ரொம்ம்ப பெருமையா செல்ப் ட்ரைவிங்கதான்னு...சொல்ல, தங்கமணியை டாக்டர் பார்க்க என் செல்ஃ ட்ரைவிங்க்கு அந்த இடத்தில் ஆப்பு வைக்க முடிவு செய்யப்பட்டது. அட்டோகார்-இ...கார்டேஸ்...டெல்சார்ட்டான்-ஹச் என வரிசையாக மாத்திரைகளை எழுதி ஒரு மாதம் கழித்து வந்து பார்க்கச்சொன்னார்.எல்லாம் இரவில் போட வேண்டும்.

ஒரு வழியாக எல்லாம் நார்மலாகி தங்கமணி வைத்த மிக கடுமையான ஃபிட்னஸ் டெஸ்ட்டில் பாஸாகி பொது வாழ்க்கைக்கு திரும்பிய இரண்டாவது நாளில் தவறுதலாய் இரண்டு டெல்சார்ட்டான் -ஹெச் மாத்திரைகளை முழுங்கித் தொலைக்க பங்குச்சந்தையைப் போல பிபி சரிந்தது...ஹி..ஹி..அதாவது 60-80...மறுபடியும் வீட்டுச்சிறையில்....இப்பத்தான் ரெண்டு நாளைக்கு முன்னால மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கப் பட்டேன் என்பதை கோடனகோடி(?) அன்பர்கள் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரிவித்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

வரும் நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட உத்தேசித்திருக்கிறேன் என்கிற எச்சரிக்கையை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிக்கையை இன்னும் நல்லா எளுதீருக்கலாம்...ம்ம்ம்....அப்புறம் மொதல்ல சொன்ன சிங்கம் மேட்டர சீரியஸா எடுத்துக்காதீங்க....அரசியல்ல இதல்லாம் சஹஜமப்பா....கண்டுக்காதீங்க....

அல்லாரும் உடம்ப பாத்துக்கங்க...ப்ளீஸ்

4 comments:

said...

பங்க்ஸ்,

ஒடம்பை பார்த்துக்கோங்க..... Take care...

said...

ஓ இத்தனை நடந்திருக்கா... நல்லா காமெடியா எழுதினாலும்... இதெல்லாம் விளையாட்டு விசயம் இல்லையே.. கண்டிப்பா கவனமா இருக்கனும்.. டேக் கேர்..

said...

//திடீர்னு பின் மண்டைல ஜிவ்வுனு சூடாகி உடம்பெல்லாம் ஒரு மாதிரி இறுக்கம் பரவி படபடப்பா..கண்ணெல்லாம் மங்கி...என்னாடா இது புது ஃபீலிங்கா இருக்கேன்னு நெனக்கச்சொல்ல...குப்புனு வேர்வை...ஆஹா ஹார்ட் அட்டாக்தான் வந்திருச்சோன்னு டவுட்///

விளையாட்டா இருக்கு உங்களுக்கு... ஹ்ம்ம் உடம்ப பார்த்துகோங்க சாமி

//அல்லாரும் உடம்ப பாத்துக்கங்க... ப்ளீஸ்//

அத தான் சொல்றாங்க உங்களுக்கு.. ம்ம்

said...

சிங்கத்திற்கு BP?

3 மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யுங்கள். அது போதும்...
சிங்கத்தின் இரத்தம் rare group ஆக இருந்தால் நல்லது////