அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, February 12, 2008

காதலிக்க நேரமில்லை...ம்ம்ம்ம்


காற்றில் ஆடும் முடிகளுக்கு
கருணையற்ற மனது
கவிதை பேசும் இதழ்களுக்கு இரக்கமற்ற இயல்பு
தழும்பவைக்கும் தேவதைக்கு
தவமிருக்கும் கண்கள்
குலுஙக வைக்கும் குறும்புகளோ
கிறங்க வைக்கும் தென்றல்
அகன்ற நெற்றி அலைபாயும் விரல்கள்
அகலாமல் நிற்கும் புருவங்கள்
இவையனைத்தும் நிறைந்தவள் என்னவளே.


தரையில் படாமலிருக்க
பாவாடையை
தூக்கிப் பிடித்து நடக்கிறாய்
உன் பாதங்களே
தரையில் நடக்கும் போது
பாவாடையை காப்பாற்றி
என்ன செய்து விடப் போகிறாய் !!!!



ஒன்றாய் கரைகிறோம்
உன் பெயரை
எழுதும் போது நானும்
எழுதி முடித்தபின்பு
படிக்கும் போது நீயும்



இன்னும் நிறைய எழுத ஆசைதான்....நேரமில்லை...ம்ம்ம்ம்ம்ம்....

(இங்கு குறிப்பிடபட்டிருக்கும் கவிதைகள் என்னுடையவை அல்ல....)

15 comments:

said...

காதலர் தினத்திற்கான நம்ம மொய் இது....நிதானமா படிச்சிட்டு, பாட்டை அனுபவிச்சி கேட்டுட்டு கருத்துச் சொன்னா சந்தோஷப்படுவேன்...

வர்ட்டா.....

said...

//தரையில் படாமலிருக்க
பாவாடையை
தூக்கிப் பிடித்து நடக்கிறாய்
உன் பாதங்களே
தரையில் நடக்கும் போது
பாவாடையை காப்பாற்றி
என்ன செய்து விடப் போகிறாய் !!!!//

எப்படிங்க இப்படில்லாம்???

மொத்தத்தில் கவிதை நல்லாருந்துச்சு..

ஆசைகள் நிறைவேற...நேரம் கிடைக்க ஆசிகள்..

said...

//ஒன்றாய் கரைகிறோம்
உன் பெயரை
எழுதும் போது நானும்
எழுதி முடித்தபின்பு
படிக்கும் போது நீயும்///

ஆஹா அழகு அழகு..

said...

//
தரையில் படாமலிருக்க
பாவாடையை
தூக்கிப் பிடித்து நடக்கிறாய்
உன் பாதங்களே
தரையில் நடக்கும் போது
பாவாடையை காப்பாற்றி
என்ன செய்து விடப் போகிறாய் !!!!
//
இது 2005 குமுதத்துல எதோ ஒரு சினிமா டைரக்டர் எழுதினது!!

நல்லா இருக்கு!

said...

வாங்க பாசமலர்...

கவிதைய சொன்னீங்க...பாட்டை பத்தி ஒன்னுமே சொல்லலையே...

said...

பாட்டு நல்லா இருக்கு... கவிதை ரொம்ப நல்லா இருக்கு... நன்றி...:-)

said...

பாசமலர்...மங்கை...சிவா...ச்சின்னபையன்...

எல்லாருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...

கவிதைய பத்தி எல்லாரும் சொன்னீங்க...பாட்டை பத்தி யாரும் ஒன்னுமே சொல்லலை...ம்ம்ம்ம்

said...

test..

said...

வெவரமா அப்புறமா வந்து எழுதுறேன்.

said...

காதலுக்கு மொழி இல்லைன்னு சொன்ன மாதிரியான உங்க பாட்டு கலெக்ஷன். :-)

முதல் பாட்டு -- 'no longer available'ன்னு சொல்லிருச்சி. :-(
இரண்டாம் பாட்டு -- இந்த பாட்டை எப்போ கேட்டாலும் லவ்ஸ் பீறிட்டு வரும் தான். இல்லையா? இதில் வரும் காட்சிகள் அமர்க்களாமா இருக்கும்.
மூன்றாம் பாட்டு - எனக்கும் புரிஞ்சிருச்சி. ;-) வார்த்தைகளில் இருக்கும் உணர்வு காட்சியமைப்பில் இல்லை, இல்லையா?

Happy Valentines day!

said...

இன்னிக்குதான் 2 நாளைக்கப்புற‌ம் உங்க வலைப்பூ வர முடிஞ்சுது..ஏனோ உங்க பூங்கதவு திறக்கவில்லை..இப்பச் சொல்லிர்றேன்..பாடல்கள் அருமை..அதுவும் 1942 love story ரொம்ப நாளாச்சு பாத்து..

said...

டாக்டர்...

பதிவு எப்படின்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை...சொன்னா சந்தோசப்படுவம்ல....

said...

காட்டாறு...

நெம்ப பிஸியா...?

அப்பால எல்லா பாட்டும் ப்ளே ஆவுதே...ம்ம்ம்ம்

said...

பாசமலர்...

என்னங்க...புதுசா ஒரு குண்டை போடறீங்க...நம்ம சைட்(ஹி..ஹி..பதிவு) சரியாத்தானே இருக்கு...

ஏதாவது சர்வதேச சதியா இருக்குமோ?....ம்ம்ம்ம்

said...

..இப்போது கூட மறுமொழி வேறு யாராவது இடும் போதுதான் access
பண்ண முடிகிறது..இல்லை தனி ஜன்னலில் blog open செய்ய வேண்டியுள்ளது..

என் blogல் இருந்தோ அல்லது வேறோர் blog லிருந்தோ access செய்ய முடிவதில்லை..கோளாறு இந்தப் பக்க serverல் இருக்குமோ..