அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, February 11, 2008

வட்டவட்டமா யோசிச்சப்ப்ப.....

ஏதோ ஆர்வகோளாறுல நானும் கலந்துக்கறேன்னு ரெண்டு மூணு படத்தோட போட்டிக்கு வந்தேன், திருவிளையாடல் நக்கீரர் கணக்கா சபையில எல்லாரும் உன் போட்டாவுல குத்தம்னு சொல்லீட்டீங்க...மனசே கேக்கலை...

ஆஹா மொதவாட்டியே இப்டி குப்றிக்கா வுளுந்துட்டோமேன்னு ரொம்ப ஃபீல் ஆகி, என்ன படம் போடலாம்னு யோசிச்சப்ப....எங்க ஏரியா வட்டச்செயலாளர் படத்த எடுத்து போடலாம்னு பொறி தட்டுச்சி, அப்புறம் நீங்கள்லாம் இந்த புள்ளைக்கு இம்பூட்டு அறிவான்னு மூக்கு மேல வெரலவச்சி கண்ணு போட்டுட்டா என்ன பண்றது...ஹி..ஹி...

அதான் எல்லார் மாதிரி நாமளும் வட்டமா தெரியற நாலஞ்சு ஐட்டத்த புடிச்சிபோடுவோமேன்னு போட்ருக்க்கேன்.....

இந்த படமெல்லாம் ஒரு தயாரிப்பும் பண்ணல....நம்ம அலைபேசி கருணையால சுட்டது...இதை எப்படி போட்டீல இனைக்கறதுன்னு தெரியல....ஆராச்சும் சொல்லி குடுங்க...
















9 comments:

said...

ச்சே...என் கண்ணே பட்ரும் போலருக்கு...

(வெளம்பரம்...ஹி..ஹி..)

said...

கீழே கிடக்கற மரம்ரொம்ப நல்லாருக்கு.. வித்தியாசமான முயற்சி.. கடைசி படமும் அருமை.. நல்ல கற்பனை வளம் இருக்கு... இந்த முறை பாஸ் ஆகிட்டீங்க.. உங்க பதிவோட லிங்கை போட்டோ போட்டிபிப்ரவரின்னு பதிவு வந்தது இல்லையாஅதுல பின்னூட்டமா போடுங்க..

said...

முதல் & கடைசிப் படம் சூப்பர்...

said...
This comment has been removed by the author.
said...

வாங்க கயல்விழி முத்துலட்சுமி...

என்னா இவ்ளோவ் பெரிய பேரு...எதுனா நியூமராலஜி மேட்டரா....

போட்டா புடிக்கறதுல்ல நீங்கள்லாம் நமக்கு குருஜி...உங்க வாயால நல்லா இருக்குன்னு சொல்லீட்டீங்கோ...

சந்தோசமா இருக்கு தாயீ...

டேங்ஸ்....

said...

பாசமலர்...

மெய்யாலுமே நல்லாருக்கா...

அவ்வவ்வ்வ்வவவ்வ்...
(ஆணந்த கண்ணீர்...ஹி..ஹி.)

said...

மற்ற படங்களை விட கீழே கிடக்கற மரம் படம் ரொம்ப நல்லாருக்கு.. சாதாரண விஷயங்களை அழகாக, சட்டத்துக்குள் பார்க்கும் திறமை இருக்கிறது !!! வாழ்த்துகள் !!!

said...

சந்திரசேகர்...

பெரிய மேட்டர் எல்லாம் சொல்றீங்க...சந்தோஷமா இருக்கு...

said...

ஆஹா....நீங்களுமா...

கல்லிலே கலைவண்ணம் கண்டான் மாதிரி ஏதாவதொரு பட்டம் குடுத்துறுவோம்..

மர கட்டையும், கடைசி படமும் சூப்பர்
அதை கிராப் பண்ணி போட்டிருந்தா இன்னும் அருமையா இருந்து இருக்கும்