அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, February 6, 2008

நான் மீன் பறவைகள் - 3

மீன் வளர்த்து பெரிய மீன் யாவாரியாகி விடுவது என முடிவுபண்ணி, தீவிரமா தொழில்ல குதிக்கறதுக்கு முன்னால சோதனை முறையில வளர்க்கலாம்னு இடம் தேடினப்போ, எங்க பண்ணை வீட்ல ஆசை ஆசையா கட்ட ஆரம்பிச்சி,குடும்பத்துக்குள்ள நடந்த குத்து வெட்டு(சொத்து தகராறுங்கோவ்)காரணமாய் பாதியிலயே நின்னுபோன நீச்சல்குளம்தான் நினைவுக்கு வந்துச்சி.

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிரலாம், நீச்சல் குளத்தை யூஸ் பண்ணின மாதிரியும் ஆச்சு, வீட்ல இருக்கறவய்ங்கள வெறுப்பேத்தின மாதிரியும் ஆச்சுன்னு அந்த குளத்துல தண்ணீர் நிரப்பினேன்.மீண்டும் விதைபண்ணை, பெரியவரிடம் ஆலோசனை....கெளுத்தி மீன் வளக்கலாம்னு சொன்னார், ஆனா அப்ப அவங்ககிட்ட எனக்கு தர விதைகள்(!) இல்லை...அத்தனை டிமாண்ட். பக்கத்துல இருக்கிற இன்னொரு பார்ஃம்ல கேட்டா, அவங்க ஒரு வாரம் தள்ளி வரச்சொன்னாங்க....போனேன்.

கொல்கொத்தாவுல இருந்து வந்திருச்சி, கொஞ்சம் பொறுங்க இப்ப வந்துரும்னு சொன்னாங்க...கவுண்டர் மாதிரி அடங்கொக்கமக்கா வெஸ்ட்பெங்கால்ல இருந்து லாரில கொண்டு வர்றாய்ங்களா...வெளங்குன மாதிரித்தான்னு நினைச்சிட்டு உக்காந்திருந்தேன். லாரியும் வந்துச்சு, பெரிய பெரிய அட்டைபெட்டி நீட்டா பேக் பண்ணி ஜெட் ஏர்வேஸ் ஸ்டிக்கரோட....மக்களே நம்புங்க எல்லாம் ப்ஃளைட் வந்திருக்கு....அப்படீன்னா எந்த அளவுக்கு டிமாண்ட்னு யோசிங்க....

ஒரு மணி நேரத்துல அங்க ஒரு மீன் குஞ்சு கூட இல்லை, அத்தனையும் வித்து போச்சு, நான் 2000 கெளுத்தி மீன் குஞ்சு, ஒவ்வொன்னும் 2 ரூபாய்க்கு வாங்கீட்டு வந்தேன்.இனையத்துல மேய்ஞ்சு, அமெரிக்காவுல எப்ப்டி வளக்குறாக, ஐரோப்பாவுல எப்படி வளக்குறக, ஆஸ்த்ரேலியாவுல எப்படி வளக்குறாகன்னு அதிமுக்கியமான தகவல் எல்லாந் திரட்டினேன். என்னுடைய ஜூனியர்ஸ் தவிர வீட்டில் யாரும் இந்த முயற்சியை ரசிக்கவில்லை. நாம இதையெல்லாம் கண்டுக்கற நிலமையில இல்லை....என் இனிய மீன் குஞ்சுகளுக்காய் டயட்சார்ட் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருந்தேன்.....

இப்ப சில தொழில் ரகசியங்கள்.......


இந்த வகை மீன்கள் மூன்றடி அழமுள்ள நீர் நிலைகளில் நன்கு வளரும்.
எத்தனைக்கு எத்தனை பெரிய இடத்தில் வளர்க்கிறோமோ அத்தனை பெரியமீன்களாய் வளரும்.
முதல் மூன்று மாதங்களுக்கு கோதுமை தவிடும், அதன் பின்னர் தேங்காய் புண்ணாக்கும்தான் இவர்களின் டயட்.

ஆறு மாதத்திற்கு பின்னால் கோழிக்குடல் மாதிரியான அசைவ ஐட்டங்களை கொடுக்கலாம்.

மாதத்திற்கு ஒரு முறை புதிய நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூளை கரைத்து குளத்தில் பரவலாய் தெளிக்க வேண்டும்.

ஆறு மாதம் கழித்து மாதம் ஒரு தென்னைஓலையை மட்டையுடன் தண்ணீரில் போட வேண்டும்.மீன்கள் அதில் தேய்த்துதான் தங்கள் தோலை சுத்தப்படுத்திக் கொள்ளுமாம்.


ஒரு வழியாக அமர்களமாய் மீன் வளர்க்க ஆரம்பித்துவிட்டேன், புது பொண்டாட்டிய சுத்தி வர்றவன் மாதிரி நீச்சல் குளத்தையே சுத்தி சுத்தி வந்தேன்...ஹி..ஹி..காலை மாலை இரண்டு வேளையும் நானே தவிடு போட்டேன்...கும்ப்லாய் வந்து கபகபவென சாப்பிடும் அழகே அழகு....எத்தனை டென்சன் இருந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருந்தால் மனம் லேசாகிவிடும்.

இந்த நேரத்தில்தான் இந்த பதிவின் தலைப்பில் உள்ள மூன்றாவது ஆசாமி உள்ளே நுழைகிறார்...ஆமாங்க பறவைகள்....அங்கே நிறைய மாமரங்கள் இருப்பதால் நிறைய அணில்களும், சிறிய குருவிகளையும் பார்த்திருக்கிறேன்....நான் மீன் வளக்க ஆரம்பிச்சது எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல...கூட்டம் கூட்டமா கிங்பிஃஷர் என்ன, கொக்கு என்னன்னு...களை கட்ட ஆரம்பிச்சிருச்சி....

குளத்தை சுத்தி தனியா சிக்கின ஹீரோயினை கண்ணில் காமம் கொப்பளிக்க நெருங்கும் வில்லன்களாட்டம் மேற்படி பறவைகள்....என் கண்ணு முன்னாடியே ஏதோ சர்க்கஸ்ல வித்தை காட்ற மாதிரி சொய்ங்னு தண்ணிக்குள்ள டைவ் அடிக்கிறதென்ன...அலேக்கா மீனை வாயில கவ்வீட்டு போறதென்ன....

ஆஹா, இந்த ரேஞ்சுல போனா மொத்த மீனும் ஒரு வாரம் கூட தாங்காது போலயேன்னு டென்சனாய்டுச்சி....பின்ன நம்ம முதலீட்டை தூக்கீட்டு போறாய்ங்களே....ஹி..ஹி...என்னை விட நம்ம பெரிய ஜீனியர்தான் டென்சனாய்ட்டார்.டோர் போட்டு மூடிடலாம்ப்பா,பெரிய ஷீட் வாங்கி கவர் பண்ணீரலாம்னு ஐடியா கொடுக்க, நான் கவலையோடு அதன் சாத்தியங்களை(!) ஆராய ஆரம்பித்தேன்.நம்ம ஹைகமாண்ட் வேற, இத்தனை பறவைங்களுக்கு சாப்பாடு போடுறீங்க எல்லாம் உங்களுக்கு புண்ணியம்தானேன்னு சிரிக்காமல் சீரியஸா பேசி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

கொசுவலை வாங்கி மூடிடலாம்னு யோசிச்சேன், ஆனா கிங்ஃபிஷர் பாயுற வேகத்துக்கு அதெல்லாம் ஜுஜ்ஜிபி, என்ன செய்யலாம்னு குறுக்கு நெடுக்கா கயிறு கட்டி வச்சேன், பயபுள்ளைக அந்த கேப்ல கச்சிதமா போய் மீன அள்ளீட்டு வந்தாய்ங்க....அப்பத்தான் ஒருத்தன் Green House Farming க்கு யூஸ்பண்ற நெட் வாங்கி கட்டீரலாம்னு சொன்னான்.உணக்கு புண்ணியமா போகும்டான்னு நினைச்சிட்டு பாரிஸ்ல நெட் வாங்க அலைஞ்சேன்...

இந்த கேப்ல இன்னொன்னு நடந்து போச்சு, நம்ம ஜூனியர் நம்மள விட டென்சனாகி தாத்தாவிடம் புலம்ப, பேத்தி இம்புட்டு கவலைபடறாளேன்னு டென்சனாகி அடுத்த நாள் ரெண்டு பேரும் காலங்காத்தால போய்ட்டாங்க, ச்சும்மா போகலை அவரோட பிஸ்ட்டலை எடுத்துட்டு...சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளீருக்காங்க, ரஷ்யன் பிஸ்டல் வச்சி கொக்கு சுட்ட பேஃமிலின்னு சரித்திரதுல இடம்பிடிச்சி பேத்தி முன்னால அவர் ஹீரோவாகிட்டார். அஞ்சாறு கொக்கு காலி, நல்லவேளை கிங்ஃஃபிஷர் ஒன்னும் சிக்கலை...

இதெல்லாம் எனக்கு தெரியாது.... வாட்ச்மேன் சொல்லித்தான் தெரியும்,எல்லா கொக்குகளும் வாட்ச்மேனுக்கு பரிசளிக்கப்பட்டதால் மனுசம் ர்ரொம்ப ச்ந்தோஷமா இருந்தார்....ச்ச்சே இப்படி ஆய்டுச்சேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்...ஒரு வழியா மொத்த குளத்தையும் கவர் பண்ணி வலை விரிச்சாச்சு...என்ன கொஞ்சம் செலவு அதிகம்....சோதனை முறையில பண்ணும் போது இதெல்லாம் சகஜமப்பான்னு சமாதானமானேன்...இழந்த மீன்களை ஈடுசெய்ய மேலும் ஐநூறு மீன்களை வாங்கிவிட்டேன்.

தினமும் இரண்டு மூனு கிங்ஃபிஷராவது வலையில் மூக்கு மாட்டிகிட்டு கிடக்கும், எடுத்து விடுவாங்க....அதுக்கப்புறமும் பறவைகள் மொய்க்கிறது குறையல...அப்பத்தான் குஜராத்ல ஒருத்தர் பறவைகளுக்காகவே ஒரு பெரிய பழத்தோட்டம் வச்சிருக்கார்னு ஒரு நியூஸ் படிச்சேன்....எல்லா பழ மரங்களையும் வள்ர்த்து அத்தனையும் பறவைகள் மட்டுமே சாப்பிட விட்டிருக்கார்.

அந்த அளவுக்கு இல்லைன்னாலும், நம்ம லெவலுக்கு செய்வோம்னு அந்த குளத்துக்கு பக்கதுலயே ஒரு கால் ஏக்கர் அளவுக்கு உழுது துவரை விதைச்சேன்...துவரை சீக்கிரமா வளர்ந்துரும்...ரெண்டு மூனு மாசம் கழிச்சி சொன்னா நம்ப மாட்டீங்க...அவ்ளோவ் பறவைகள்...ஓரே சமயத்துல இருநூறு முன்னூறு கிளியெல்லாம் நான் அப்பத்தான் பார்த்தேன்....

ரொம்ப பெரிசா போய்டுச்சோ...அடுத்த பதிவோட முடிச்சிர்றேன்.....

12 comments:

said...

//
என்னை விட நம்ம பெரிய ஜீனியர்தான் டென்சனாய்ட்டார்.டோர் போட்டு மூடிடலாம்ப்பா,பெரிய ஷீட் வாங்கி கவர் பண்ணீரலாம்னு ஐடியா கொடுக்க
//
ஆஹா

சரியான ஜூனியர்தான்.

said...

//வீட்ல இருக்கறவய்ங்கள வெறுப்பேத்தின மாதிரியும் ஆச்சுன்னு//

அட அட அட..இப்படி இல்ல இருக்கனும்..

//குளத்தை சுத்தி தனியா சிக்கின ஹீரோயினை கண்ணில் காமம் கொப்பளிக்க நெருங்கும் வில்லன்களாட்டம் மேற்படி பறவைகள்....//


பேசாம கதை எழுத ஆரம்பிக்கலாம்...

அருமையா இருக்கு... படிக்கறவுங்களுக்கு முயற்சி செய்து பார்க்கலாமேன்னு தோன்ற அளவுக்கு ரசிப்பு தன்மையோட இருக்கு.... அதிக மன அழுத்தம் தராத தொழில் போல..ஹ்ம்ம்

பறைவகளுக்காக தனியா பயிரட்டது சூப்பர்...

இதுல இன்னும் கொஞ்சம் தகவல்களை சேர்த்து வர்த்தகப் பதிவுல போடுங்க....

said...

மிக சுவாரசியமாக எழுதியிருக்கீங்க...
தொடர்ந்து எழுதுங்க ஆர்வமா இருக்கேன் அடுத்த பகுதி படிக்க


தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.

http://www.desipundit.com/2008/02/06/meenvalai/

said...

மூனு பாகமும் இப்பத்தான் படிச்சுட்டு வரேன்..ரொம்ப சுவாரசியமா சொல்லிட்டு வர்றீங்க தல..அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் :)

said...

சொக்கர்,

நீங்க என்ன வேடந்தாங்கல் பக்கமாவா இருக்கிங்க, இத்தனை பறவைகள் உங்கள் மீன் குளத்தை மொய்த்து இருக்கே?

என் கிட்டே வேற லைசென்ஸ் பிஸ்டல் எதுவும் இல்லை, எதிர்க்காலத்தில் மீன் வளர்க்கலாம்னு பார்த்தேன், அதுக்கு முதலில் ஒரு கன் வாங்கணும் போல இருக்கே :-))

எங்க ஊர்ல எல்லாம் திறந்தவெளி குளங்களில் மீன் வளர்க்கிறாங்களே அது எப்படி, நீங்க சொல்றதப்பார்த்தா மீன் வளர்த்து அதை காப்பாத்துறது கஷ்டம் போல தெரியுதே, என்னைப்போல மீன் , வாத்து , எதுனா வளர்த்து பணக்காரன் ஆகலாம்னா முடியாதா? உங்களைப்போல அதிகப்படியா முதலீடு செய்தால் தான் கைய சுட்டுக்காம போட்டக்காச எடுக்க முடியுமா? (என் கிட்டே ஒருத்தர் எறால் பண்ணை(குட்டை) விலைக்கு இருக்கு வாங்கிக்கோ சொல்றார், எறாலுக்கும் பறவைகள் வருமா?)

எனக்கு கூட ரொம்ப நாளா மீன், வாத்து வளர்க்கனும்னு திட்டம்லாம் உண்டு, அதை வைத்தே பணக்காரன் ஆகும் மாஸ்டர் பிளான் எல்லாம் போட்டேன், உங்க கதைய கேட்டப்பிறகு பயமா இருக்கு :-))

said...

சிவா...

இன்னும் நிறைய ஐடியாவெல்லாம் குடுத்தாய்ங்க...சொன்னா விழுந்து விழுந்து சிரிப்பீங்க....

said...

மங்கை...

கதை எழுதிடலாம்னு சொல்றீங்களா...பாவம் படிக்கிறவங்க...விட்ருவோம்..

இது அதிகம் வெளியில் தெரியாத அதே நேரத்தில் மிகவும் லாபகரமான தொழில்...விவரங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

said...

டுபுக்கு...

மொதவாட்டி நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க...சந்தோஷம்...

தேசி பண்டிட்ல இனைப்பு கொடுத்ததுக்கு நன்றி...

said...

கப்பி...

தம்பி ஊரு பக்கம் வந்துட்டீங்களா...இல்லை இன்னும் வெளியூர் வாசம்தானா...

said...

வவ்வால்...

பறவைகளை தவிர்க்க முடியாது....பெரிய அளவுல வளக்கறவங்க இதை பத்தி பெரிசா கவலைபடலை...மேலும் வெட்ட வெளியான இடத்துல வளக்கும்போது அவ்வளவா பறவைகள் வர வாய்ப்பில்லை...என்னுடைய இடத்தில் குளத்தை சுற்றி அடர்த்தியாக மரங்கள் அதான் பிரச்சினை....எல்லாரும் குடும்பமா வந்து தங்கு கும்மியடிச்சதாலதான் நான் ரொம்ப டென்சனாய்ட்டேன்....

said...

ரசனையா எழுதியிருக்கீங்க. ரசிச்சி வளர்த்ததாலா?

பாரிஸ் பக்கம் போனதுக்கு பதிலா.. மீன்பாடில கேட்டிங்கன்னா நைலான் வலை சைஸ் வாரியா கிடைக்கும். எங்கூட்டுல அப்படி தான் வளர்க்கும் மீன்களை காப்பாத்தினாங்கன்னு சொன்னாங்க.

//என்னை விட நம்ம பெரிய ஜீனியர்தான் டென்சனாய்ட்டார்.// அது என்ன பெரிய ஜூனியர். ஜூனியர்ன்னாலே சின்னவங்க தானே. சின்னவங்கள்ல பெரியவங்கன்னு சொல்ல வந்தீங்களாக்கும்? ஹா ஹா ஹா

//அந்த குளத்துக்கு பக்கதுலயே ஒரு கால் ஏக்கர் அளவுக்கு உழுது துவரை விதைச்சேன்...துவரை சீக்கிரமா வளர்ந்துரும்...ரெண்டு மூனு மாசம் கழிச்சி சொன்னா நம்ப மாட்டீங்க...அவ்ளோவ் பறவைகள்...ஓரே சமயத்துல இருநூறு முன்னூறு கிளியெல்லாம் நான் அப்பத்தான் பார்த்தேன்....
//
குருவே சரணம்! இந்தியா திரும்பியதும் எனக்கும் ஒரு வகுப்பு எடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். நமக்கு இதிலெல்லாம் இண்ட்ரெஸ்ட் ஜாஸ்தி. தட்சணை தரமாட்டேன். இப்பவே சொல்லிட்டேன்.. ஆமா.

said...

அடுத்த பதிவிற்காக காத்திருக்கோமில்ல... என்னாச்சி.. இன்னம் பதிவைக் காணோம்?