அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, May 20, 2008

அடுத்த நிதியமைச்சரும், பிரியாணிக்கடையும்

கொள்ளிக்கட்டையால் தலை சொறிந்தால் எப்படியிருக்கும்....அப்படித்தானிருக்கிறது சென்னை வெய்யில். என்னை சுற்றி அத்தனை பேரும் விடுமுறையை கொண்டாடிவிட்டு வந்து என் வயிற்றெறிச்சலை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கமிட்மெண்ட்களை நினைத்தால் தூக்கமே வருவதில்லை. இதில் விடுமுறையாவது வெங்காயமாவது......

எனக்கென்னவோ கலைஞர் சாதுர்யமாய் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டாரோ என நினைக்கிறேன். என்னவெல்லாம் நடக்கும் என இப்போதே சொல்கிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மத்திய அரசில் இருந்து கலைஞர் விலகமாட்டார். ஆனால் காங்கிரஸிடம் இருந்து விலகுவார்.

தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன்,முஸ்லீம் லீக் இவர்களோடு வாசன் கோஷ்டி சேர்ந்து கொள்ளும்.

பாரதீய ஜனதா கட்சியுடன் அம்மா வேண்டா வெறுப்பாய் கூட்டனி வைத்துக் கொள்வார். வைக்கோ வழக்கம் போல தமாஷ் பண்ணுவார்.

கேப்டன் நாற்பது தொகுதியிலும் அம்மாவின் ஓட்டை பிரித்து தி.மு.க கூட்டனி வெற்றிக்காக பாடுபடுவார்.

சிதம்பரத்தின் புண்ணியத்தால் பாரதீய ஜனதாகட்சி நாடெங்கும் நிறைய இடத்தில் ஜெயித்துத் தொலைக்கும்.

மூன்றாம் அணி கோமாளிகள் லல்லு, முலாயம், மாயாவதி, கம்யூனிஸ்ட் எல்லாருமாய் சேர்ந்து சந்திரபாபு நாயுடுவை அடுத்த பிரதமராக்குவார்கள்.

வழக்கம் போல டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராய் தொடர்வார்.

இதுதான் நடக்கப் போவுது.......

கொஞ்சம் முயற்சி செய்தால் எங்க குடும்பத்து மூத்த உறுப்பினர் ஒருவர் கஜினி முகமது கணக்காய் போரடிக்கொண்டிருக்கிற அல்லது கிடைக்க வாய்ப்பிருக்கிற அம்மா கட்சி சீட் அவரின் வயதின் காரணமாய் இளைஞனான எனக்குத் தரப்பட்டால்.....ட்ட்டொட்டடாய்ங்.....ஹி..ஹி... அம்மா அடுத்த பிரதமரானால் .நான் நிதியமைச்சராகிட வாய்ப்பிருக்கிறதா என இனிமேல்தான் பிரசன்னம் பார்க்க வேண்டும். மனசாட்சி, மானம் வெக்கம் எல்லாத்தையும் கழட்டி எதாவது ஒரு வங்கியில் ஐந்து வருசத்துக்கு பிஃக்ஸட் டெப்பாசிட்டில் போட்டு விட்டு கட்சி உறுப்பினர் அட்டை வாங்க வேண்டியிருக்கும். என்ன கொடுமையிது. ஏன் இப்படி விபரீதமாய் யோசிக்கிறேன். ஜீரணிக்கவே முடியலை....இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனை வரத்தான் வேண்டுமா....

நானும் தமிழ்நாடெங்கும் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கடைசியாய் செட்டிலாகியிருப்பது அண்ணாநகர் தபால் தந்தி அலுவகத்திற்கு பக்கதிலிருக்கும் அலஹாபாத் வங்கிக்கு அடுத்திருக்கும் 'சோனாபெல்' தான். சின்ன கடைதான்...உட்கார்ந்தெல்லாம் சாப்பிட முடியாது. வீட்டுக்கு வாங்கிப்போய்தான் சாப்பிடவேண்டும். அண்ணா நகர் பக்கம் வந்தால் ட்ரை பண்ணி பாருங்கள். கடந்த பத்து வருசமாய் அதே ருசி...எப்படித்தான் மெய்ண்டெய்ன் பண்ணுகிறார்களோ தெரியவில்லை. இந்த கடைக்கு நிறைய பிரபலங்கள் வாடிக்கையாளர்கள் எனக்கு தெரிந்த இரண்டுபேரில் ஒருவர் நம்ம ட்ரம்ஸ் சிவமணி, இன்னொரு பிரபலம்...ஹி...ஹி...நாந்தேன்...

வடபழனி சிக்னலில் இருந்து கோயம்பேடு சிக்னல் வரைக்கும் இம்புட்டுத்தான் எளுத முடிஞ்சது......

இன்றைக்கு இத்துடன் முடித்துக் கொல்கிறேன்....ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்

6 comments:

said...

//வடபழனி சிக்னலில் இருந்து கோயம்பேடு சிக்னல் வரைக்கும் இம்புட்டுத்தான் எளுத முடிஞ்சது......//

அப்ப வண்டி ஓட்டிக்கிட்டுப்போனது சூர்யாவா? ;-))))

said...

டீச்சர்...

நான் பாட்டுக்கு தேமேன்னு ட்ரைவ் பண்ணீட்டூ சந்தோசமாத்தான் இருந்தேன். நம்ம ஹைகமாண்ட் பண்ணின சதியால இப்ப இப்படி பதிவு போட்டு எல்லாத்தையும் கொண்னுட்டு இருக்கேன்...ஹி...ஹி...

said...

பிரியாணி டிப்ஸ் அடுத்த முறை ட்ரை ப்ண்ணிருவோம்..ஆமா அரசியல் ஜோசியம் எல்லாம் பலிச்சுருமோ..

said...

/
ஏன் இப்படி விபரீதமாய் யோசிக்கிறேன். ஜீரணிக்கவே முடியலை....
/

எங்களாலயும்தான் !!!!!!
:))))))

said...

/
இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனை வரத்தான் வேண்டுமா....
/

என்ன கொடுமை சரவணன் இது!
:)))

said...

மத்தபடி பிரியாணினா தோசை மாவுல ரவுண்டு ரவுண்டா சுடுவாங்களே அதுதானே!?!?!?

:)