அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, March 6, 2008

பறக்கும் சித்தரும், நான் பார்த்த சித்தரும்....

நேற்றைய பதிவுகள் இரண்டும் தமிழச்சியின் புண்ணியத்தால் களை கட்டியது, அத்தனை நெருக்கமில்லாதவங்க, அல்லது அறிமுகமில்லாதவங்கன்னா நன்றியெல்லாம் சொல்லலாம், தமிழச்சி அப்படியா....

டாப்லெஸ் சித்தர் ஒருவர் திருவண்ணாமலையில் பறந்து போன சம்பவத்தை வைத்து ஆயிரக்கணக்கில் தியரிகளை உருவாக்குவார்கள், கருத்து கந்தசாமிகள் ஊடகங்களில் கதை விடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன்.புஸ்ஸ்ஸென போனதில் எனக்கு வருத்தமே....பரவாயில்லை என் பங்கிற்கு நானும் கொஞ்சம் கதை சொல்கிறேன்.

இம்மாதிரி பறப்பதெல்லாம் சாத்தியமே....மந்திர, தந்திர பிரிவுகளில் தனித்தனி உபாயங்களை சொல்லியிருக்கிறார்கள்.. மந்திர முறையில் நிறைய மூச்சு பயிற்சியும், கொஞ்சம் மந்திரங்களும் இருந்தால் போதும். தந்திர முறையில் குழப்பமான ஒரு ரெசிப்பி சொல்லியிருக்கிறார்கள். அதை தயார் செய்வதற்குள் உங்கள் தாவு தீர்ந்து டவுசர் கிழிந்து போவது உறுதி.

சாம்ப்பிளுக்கு ரெண்டு மூனு வரி.....உயிருள்ள பச்சை தவளையின் மூளையை அம்மாவாசை நாளில் மண்சட்டியில் போட்டு ஒரு மண்டலம் வெயிலில் காயவைத்து அத்துடன்.........குமட்டிக் கொண்டு வருகிறதா...இந்த பறக்கும் ரகசியம் முழுமையாக வேண்டுமானால் தலைக்கு பத்து டாலருடன் தனி மெயில் செய்யலாம். பறப்பதும், பரலோகம் போவதும் உங்கள் சாய்ஸ்....

நிஜத்தில் நம்மிடையே இம்மாதிரியான ஆசாமிகள் நிறைய உலவுகிறார்களாம்,தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத அவர்களை கண்டுபிடிப்பதற்கு தனி திறமை வேண்டுமாம், மதுரையில் விஜயராகவன் என்கிற ஒருவரை ஒரு இஸ்லாமிய நண்பர் மூலம் சந்தித்தேன்....அவரின் வீட்டில் கொடிய வறுமை, ஆனால் யாரிடமும் கைநீட்டி காசு வாங்கமாட்டார்.அவரின் பேச்சும் செயலும் கடைசி வரை மர்மமாகவே இருந்தது. பத்து சூரியன் இருப்பதாகவும், அதில் எட்டு சூரியன் பார்த்துவிட்டேன் என்பார்.

நாம் நினைப்பதை மடமடவென சொல்லிவிட்டு சிரிப்பார், அவருக்கு போன் பண்ணனுமா ஏன் உங்க காச செலவு பண்றீங்க அவரயையே கூப்டசொல்றேன் என்பார், சற்று நேரத்தில் சம்பந்தப்பட்டவர் நம்மை கைபேசியில் அழைத்து, ஆச்சர்யப்படுத்துவார்...நினைத்த மாத்திரத்தில் தன்னால் எங்கேயும் போகமுடியும் என்றும், எங்கே என்ன நடக்கிறது என்பதை உட்கார்ந்த இடத்திலிருந்தே சொல்லியும் பல சமயங்களில் ஆச்சர்ய படுத்தியிருக்கிறார்.

மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு ஹோட்டல் கட்ட ஆரம்பித்தார்கள்(பெயர் வேண்டாமே!), வேலை ஆரம்பித்த முதல் நாளில் அந்த இடத்தின் உரிமையாளர் இறந்து போக, அதை இன்னொருவர் வாங்கி வேலை ஆரம்பிக்க அவர் மகன் இறந்து போக...பதறிப் போய் இன்னொருவரிடம் விறக்...புதியவர் வேலை ஆரம்பிக்க பள்ளம் தோண்டிய கூலித்தொழிலாளி ரத்தம் கக்கி செத்து போக....கொஞ்ச நாட்களுக்கு பின்னர் ஒரு இஸ்லாமியர் தைரியமாய் அந்த இடத்தை சல்லிசாக வாங்கினார்.....சில நாட்களில் அவரின் தாயார் மரணித்துப் போக.....இந்த சமயத்தில்தான் என் நண்பர் விஜயராகவனிடம் அதை சொன்னார்.அந்த இடத்திற்கு என்னை கூட்டிப்போ எனறார்.

எதை தின்னால் பித்தம் தெளியும் என்றிருந்த இடத்துக்காரர் வண்டியணுப்பி கூட்டிப்போனார். இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது....வெறும் காலுடன் அந்த காலி மனையை சுற்றி சுற்றி வந்தவர்...எனக்கு கொஞ்சம் கல் வேண்டும் என்றார். கற்களை அந்த மனையில் ஐந்தாறு இடத்தில் போட்டார்.....பின்னர் உரிமையாளரிடம் வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டி வந்து இரவு பதினோரு மணிக்கு மேல் இந்த இடத்தை தோண்டு, எலும்புக்கூடுகள் கிடைக்கும் அதை சுடுகாட்டில் வைத்து எரித்துவிடு என சொல்லி விட்டு போய்விட்டார்.

சொன்ன மாதிரியே வெளியூர் ஆட்கள் குறிப்பிட்ட இடங்களை தோண்ட குவியல் குவியலாய் எலும்புக்கூடுகள்....அதை அவர் சொன்ன மாதிரி செய்தபின்னர்...எந்த கெடுதலும் இல்லை.இன்றைக்கு அந்த இடத்தில் ஒரு லாட்ஜ் இருக்கிறது....இதற்காக அந்த மனிதர் காசு எதுவும் வாங்கவில்லையென பின்னர் கேள்விபட்டேன்.புரியாத மறைமொழிகளில் ஏதாவது பிதற்றிக் கொண்டிருப்பார்.உங்களுக்கு புலனாகாத உலகம் ஒன்று உங்களுடனே இருக்கிறது.....நீங்கள் கட்டிறுக்கியதால் கட்டுடைத்த உலகம் அது என்பார்.....

என்னாங்கடா ஓவரா படம் காட்றீங்கன்னு மனதில் நினைத்த கணத்தில்....நீ குருவின் அம்சம், உனக்கு அப்படித்தான் தோன்றும் தப்பில்லை என்பார். திடீரென ஒரு நாள் என் இடத்துக்கு வந்தவர், ஒரு பேப்பர் குடு என வாங்கி...சர சரவென கட்டங்கள் வரைந்தார். அதில் என்னென்னவோ கிறுக்கினார். இதை பத்திரமாய் உன் பர்ஸில் வைத்துக் கொள், இந்த காகிதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதே...அடுத்த பதினோரு மாதத்தில் உனக்கு ஒரு பெரிய ஆக்ஸிடண்ட் காத்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டாயானல் பிழைத்தாய், நிறைய தர்மம் செய் அப்புறம் உன் பாடு என சொல்லிவிட்டு விடுவிடுவென போய்விட்டார். இன்றைக்கும் அந்த காகிதம் என் பர்ஸில்....

நீங்கள் சித்தரா என கேட்டால் சிரிப்பார்....நான் வழிப்போக்கன்...கொஞ்ச நாள் உன்னுடன் வருவேன், உன் பேரனும் கூட என் வழியில் வருவானாய் இருக்கும்...யார் கண்டது என சொல்லி சிரிப்பார்.இன்னமும் நிறைய எழுதலாம் இந்த மனிதரை பற்றி.....பிரிதொரு சமயத்தில் விலாவாரியாய் இந்த மனிதரை பிரித்து மேய்வோம்.....

இதே மாதிரி இன்னொரு மனிதரையும் சந்தித்திருக்கிறேன்...நான் பொதுவில் கவனித்த விசயம், இவர்கள் யாருடனும் இணங்கியிருப்பதில்லை, பரிசோதனைகளில் நாட்டமிருப்பவர்களாய் இருக்கிறார்கள். எளிதில் யாரையும் தங்கள் அன்மையில் நெருங்கவிடுவதில்லை....ஒரு விதமான தாழ்வு மனபான்மையுடையவர்களாய் இருக்கிறார்கள். குரு வழிபாட்டினை மிகத்தீவிரமாய் அனுசரிக்கின்றனர்.

(இதை படிக்கிற கணத்தில் உங்களுக்கு பிடித்த மணம் உங்களை சூழும் பட்சத்தில் நீங்கள் என்னையும் ஒரு சித்தராக நினைத்துக் கொள்ளலாம். இரண்டாம் சொக்கன்ற பேர் உங்களுக்கு பிடிக்கலை, வேற எதுனா பேர் வைக்கனும்னு தோணினா போலி சித்தர்...னு வச்சுக்கோங்க....ஹி..ஹி...)

39 comments:

said...

ஸ்ஸப்பா இப்பவே கண்ணை கட்டுதேஏஏஏஏ............

said...

மெய்யாலுமா.........!!!!!!

said...

நெசமாவா?

said...

சிவா...துளசிம்மா...இளா....

நம்ம முடியாத ஆச்சர்யம் நெறய இருக்கு....ஒரு இருவத்தி அஞ்சு பின்னூட்டம் வந்துச்சின்னா....அப்படியே தொடரா கண்ட்டினியூ பண்ணீரலாம்...பார்ப்போம்.

said...

Please continue pannunga. Geetha

said...

நீங்கள் சித்தரா என கேட்டால் சிரிப்பார்....நான் வழிப்போக்கன்...கொஞ்ச நாள் உன்னுடன் வருவேன், உன் பேரனும் கூட என் வழியில் வருவானாய் இருக்கும்...யார் கண்டது என சொல்லி சிரிப்பார்.இன்னமும் நிறைய எழுதலாம் இந்த மனிதரை பற்றி.....பிரிதொரு சமயத்தில் விலாவாரியாய் இந்த மனிதரை பிரித்து மேய்வோம்.....


நான் ரெடி சார்,,,,

said...

நம்ம முடியாத ஆச்சர்யம் நெறய இருக்கு....ஒரு இருவத்தி அஞ்சு பின்னூட்டம் வந்துச்சின்னா....அப்படியே தொடரா கண்ட்டினியூ பண்ணீரலாம்...பார்ப்போம்.


இதோ 1



25



பின்னூட்டம்

said...

இன்றும் வந்துட்டேன்.

said...

சொக்கன்ஜி.. சமீபத்தில்தான் பிபிசியில் இது பற்றி ஒரு செய்திப் படம் ஒன்றை காட்டினார்கள்.. தியானம் மூலமாக ஒருவர் அந்தரத்தில் பறந்து காட்டினார். பறந்து என்றால் ஒரு பெரிய ஏழு மாடிக் கட்டடத்தின் உச்சியில் இருந்து நின்றபடியே பறக்க ஆரம்பித்து கீழே தரைக்கு வந்து நின்று காட்டினார்.

இன்னொருவர் ஒரு வீட்டுக்குள் சம்மணங்கால் போட்டு அமர்ந்த நிலையிலேயே அந்த அறையின் கூரையைத் தொட்டுவிட்டு பின்பு இஇடம், வலமாக சென்று படுக்கையில் மெதுவாக அமர்ந்தார்.

பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.. மனதை ஒரு நிலைப்படுத்தினால் நம் உடலில் இருக்கும் காற்று முழுவதையும் வெளியேற்றி நாமும் எதுவுமில்லாத ஜடமாகிவிடுவோம் என்பதுதான் இதன் வழிமுறையாம்..

சில ஆண்டுகளுக்கு முன்னால் உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி கலைஞரின் வீட்டிற்கு வந்து அவர் முன்னால் படுத்த நிலையில் பறந்து காட்டினார்.. ஞாபகமிருக்கிறதா..?

said...

25 க்குக்கு இன்னும் 15 இருக்கு

said...

இன்னும் பதினாலு பின்னூட்டம் வேணுமே....

ம்ம்ம்...பின்னூட்ட கயமை பண்ணிடலாமா....

said...

உண்மைதமிழன்...

நீங்கள் சொல்லிய செய்திகள் எனக்கு புதிது...சில நிஜங்கள் ஆச்சர்யமான ஆச்சர்யங்கள், அதை வித்தை என புறந்தள்ளி விட முடியாது.

said...

//
This blog does not allow anonymous comments.
//

இப்பிடி இருந்தா எப்பிடி இன்னும் 13 கமெண்ட் போடறது??

said...

//
Your comment has been saved.
//

ஆனா இது ஓகே.

நல்லவர்தான் நீங்க.

said...

//
இரண்டாம் சொக்கன்...! said...

இன்னும் பதினாலு பின்னூட்டம் வேணுமே....

ம்ம்ம்...பின்னூட்ட கயமை பண்ணிடலாமா....
//

எனி ஹெல்ப் ரெக்கொயர்ட்????????

said...

//
Blogger கோவி.கண்ணன் said...

25 க்குக்கு இன்னும் 15 இருக்க
//
இல்லை இன்னும் 10தான் இதயும் கணக்கெடுத்துகிட்டா 9 தான் பாக்கி.

said...

இப்ப போறேன் 25 ஆகலைனா திரும்ப வருவேன்


வர்ட்டா

said...

சுவாரஸ்யமாக இருக்கிறது.. தொடருங்களேன்.. நான் கூட இது மாதிரி நண்பர்களிடம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

said...
This comment has been removed by the author.
said...

அவரை சந்திக்க இயலுமா? அறிமுக படுத்துவீர்களா? sjsanthose@gmail.comக்கு ஒரு தனிமடலிடமுடியுமா?

said...

அடடா இன்னும் 5 பின்னூட்டம் இருந்தா சித்தர் அனுபவம் கண்டினியூவா?

அப்போ கண்டிப்பா கண்டினியூ வேனும்.

said...

சந்தோஷ் மாமாவுக்கு மட்டும் மெயில் பண்ணாதீங்க எனக்கும் அனுப்புங்க அந்த சித்தர் கிட்ட கேக்க ஏகப்பட்ட கேள்வி இருக்கு

said...

நீங்க மீன் வளர்த்ததை பத்தி சொன்னப்பவே அப்பா கமெண்ட் போட நெனச்சாராம். சொல்ல சொன்னார்.

அடிசனல் நியூஸ் அப்பா இறால் வளர்ப்புல 10 வருசமா குப்பை கொட்டிகிட்டு இருக்காராம்

said...

//
நிலா said...

சந்தோஷ் மாமாவுக்கு மட்டும் மெயில் பண்ணாதீங்க எனக்கும் அனுப்புங்க அந்த சித்தர் கிட்ட கேக்க ஏகப்பட்ட கேள்வி இருக்க
//
செல்லம் உனக்குள்ள இவ்ளோ டவுட்டா???

said...

//
Blogger நிலா said...

நீங்க மீன் வளர்த்ததை பத்தி சொன்னப்பவே அப்பா கமெண்ட் போட நெனச்சாராம். சொல்ல சொன்னார்.

அடிசனல் நியூஸ் அப்பா இறால் வளர்ப்புல 10 வருசமா குப்பை கொட்டிகிட்டு இருக்காராம
//
குப்பைய சாப்பிட்டுதான் இரால் வளருதா????????

ஓ. ஓகே.

25 ஆச்சு.

said...

ஆஹா...சொந்த செலவுல சூனியம் வச்சிட்டேனா...

சிவா...கலக்கீட்டீங்க...

ஹி..ஹி...ம்ம்ம்ம்.....

said...

ஓகே இப்ப அடுத்த பார்ட் எங்கே?

said...

நம்ம முடியாத ஆச்சர்யம் நெறய இருக்கு....ஒரு இருவத்தி அஞ்சு பின்னூட்டம் வந்துச்சின்னா....அப்படியே தொடரா கண்ட்டினியூ பண்ணீரலாம்...பார்ப்போம்.

28....

நிலா said...

ஓகே இப்ப அடுத்த பார்ட் எங்கே?

said...

அவரைச் சந்தித்தால் இலங்கைப் பிரச்சனை தீருமா? விரைவில் தீர ஏதாவது வழியுண்டா? எனக் கேட்டெழுதவும்.
தமிழ் நாட்டைச் சுனாமி அடிக்கும் போது இவர் எங்கே இருந்தார்?

said...

அண்ணே,

இந்தமாதிரி நம்ம ஊருக்குள்ளே நிறைய கேட்டுருக்கேன்... அதுவும் இந்த சதுரகிரி மகாலிங்கம் மலையிலும் அழகர் கோவில் மலையிலும் நிறைய சித்தர்கள் இருக்கிறதா சொல்லிட்டு இருப்பாங்க....

எதுதான் உண்மைன்னு தெரியலை... :)

said...

////நேற்றைய பதிவுகள் இரண்டும் தமிழச்சியின் புண்ணியத்தால் களை கட்டியது, அத்தனை நெருக்கமில்லாதவங்க, அல்லது அறிமுகமில்லாதவங்கன்னா நன்றியெல்லாம் சொல்லலாம், தமிழச்சி அப்படியா.... /////

அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியிலையே!

said...

நல்லா இருக்கு கதை
ஆனா நான் ஆXண் இல் ஒருவர் பறப்பதை காட்ட பார்த்து இருக்கிறேன் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மதிக்கு பறப்பார். அவர் பெயர் மறந்து விட்டது
அன்புடன் மகி

said...

//..ஒரு இருவத்தி அஞ்சு பின்னூட்டம் வந்துச்சின்னா....அப்படியே தொடரா கண்ட்டினியூ பண்ணீரலாம்...பார்ப்போம்//

மாமா இது சும்மா ஒரு லுலுவாய் க்கு சொன்னீங்களா?

said...

25 ஆய்ருச்சே..அப்ப தொடர்தானா..

said...

நிலா...

எழுதீட்டு இருக்கேன்...வந்துர்றேன்.

said...

இராம்...

நம்ம ஊர்ல இன்னும் நெறய ஆச்சர்யமெல்லாம் இருக்கு...

said...

நான் கூட தி.மலைல ஒருவரை சந்தித்தேன் சொக்கரே. காவி உடுத்தி, நெடுநெடுவென. அவரு பக்கத்துல யாரையும் நெருங்க விடுறதில்ல. கைல தடியோட தான் எப்பவும் பார்க்க முடியும். எதாவது சொல்லிகிட்டே இருப்பார். பல சமயங்களில் அவர் பேசுவது சுத்தமாக புரியாது. ரமணர் ஆசிரமத்திலே தான் குடியிருப்பு. இது நடந்து 14 வருடம் இருக்கும். எப்பவும் அவர் சொல்லுறதை கேட்க ஒரு கூட்டம் வந்து கிட்டே தான் இருக்கும். அவர் சொல்லுறது புரிஞ்சிக்க ஆரம்பிக்கும் போது வேறு ஒன்னு பேச ஆரம்பிச்சிருவார்.

ம்ம்ம்... சொல்லிட்டே போகலாம். அப்புறம் பதிவு மாதிரி ஆகிப் போகும். நீங்க தொடருங்க.

said...

ஆஹா இன்னொரு தொடரா...போன தொடர்லயெ இன்னும் கடைசி பாகம் பாக்கி இருக்கே...

said...

சொக்கன்,

பதிவு அருமை. தொடருங்கள் உங்கள் கதையை. 25, 26 என்று எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்.

நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.