சித்தர்களை பற்றி எழுதுவதாய் வாக்குக் கொடுத்தபின்னர்...எதிலிருந்து ஆரம்பிப்பது என்கிற குழப்பம் நிறையவே இருந்தது....இருக்கிறது. சித்தர்களின் உலகம் மிகவும் விஸ்தீரனமானது. அவர்களை பற்றி நாம் அறிந்ததும், தொகுத்ததும், பதிந்ததும் மிகக்குறைவே....இதனால் பல்வேறு கருத்தியல்களும், முரன்பாடுகளும்...தெளிவின்மையும் நிறையவே தேங்கிக் கிடக்கிறது.....பொதுவில் நான் நேர்மையாக உணர்ந்த விதயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...தவறிருப்பின் தயங்காமல் சுட்டிடுங்கள்...திருத்திக்கொள்கிறேன்.
சித்தம் என்கிற தமிழ் பதம் மனம் மற்றும் அது தொடர்பான பகுப்புகளை உள்ளடக்கியது என்றாலும், சித்தர்கள் தங்களின் சமகால வாழ்வியல் சூழல்களில் இருந்து விலகியவர்களாகவும், வேறுபட்டவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. பிறர் சாராத தேடலில் தாங்கள் கண்டுணர்ந்தவைகளை தங்களளவில் புடம்போட்டு புதிய பரிமாணங்களை உருவகித்துப் பார்த்தவர்கள். அவர்களுடை ஆன்மீக தேடல் நிச்சயமாய் ஆராதனைகளோடோ, வழிபாடுகளுடனோ சம்பந்தப்படவில்லை. தனிமையையும், நிலைத்திருத்தலையுமே அவர்கள் பிரதானமாய் கருதினர் எனலாம்.
சித்தர்களின் கூற்றுப்படி நமது உடலான ஐந்து நிலைகளை கொண்டது...அதாவது 1.பரு உடல், 2.வளி(உயிர்ப்பு) உடல், 3.மன உடல், 4.அறிவு உடல், 5.ஆன்ம உடல் ...இந்த ஐந்து நிலைகளை கடந்தவரே சித்தராய் ஆகமுடியும் என்றும், இந்த நிலை இறையோடு இறையாய் கலந்த உயர்ந்த நிலை என்றும் இந்த நிலைக்கு அழிவில்லை என்பதாக வலியுறுத்துகிறார்கள். அதாவது சித்தர்கள் அனைவரும் இன்றைக்கும் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர் என்று கூட கொள்ளலாம்.
சித்தர்களின் மரபு எங்கிருந்து துவங்குகிறது என பார்த்தோமானால், முதல் சித்தனாகிய சிவன் தனது இனையான சக்திக்கு குண்டலினி எனும் பிராணயாமத்தை கற்றுக்கொடுத்ததில் இருந்து துவங்குகிறது. சிவனின் நேரடி சீடர்களாய் அகத்தியர், நந்திதேவர், திருமூலர் ஆகிய மூவரைத்தான் சொல்கிறார்கள். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பதும் அதில் இருவர் தமிழகத்திலேயே சமாதியானதாகவும் தெரிகிறது. நந்திதேவர் காசியில் சமாதியானதாய் சொல்கிறார்கள்.
தமிழ் மரபியலில் சித்தர்கள் பதினெட்டு பேர் என்றும், வட இந்தியாவில் 84 பெயரை கூறுகின்றனர். தமிழ் நூலியலில் பதினெட்டு பேர் யார் என்பதில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றன...ஆளாளுக்கு ஒரு பட்டியலை நீட்டினாலும், பா.கமலகண்ணன் என்கிற ஆய்வாளர் இதுவரை ஒரு லட்சம் சித்தர்களின் பாடல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படி சித்தர்களின் எண்ணிக்கை 102 என புதிய தகவலை தருகிறார். மேலும் போகநாதர் எழுதிய 'போக்ர் ஏழாயிரம்' என்கிற நூலின் ஆறாவது காண்டத்தில் 696-953 வரையிலுள்ள பாடல்களில் 42 சித்தர்களை பற்றிய தகவல்கள தரப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
இந்த சித்தர்கள் ஒரே மாதிரியான கோட்பாடுகளை உடையவர்களா என பார்ப்போமெனில் ஆச்சர்யமான சில உண்மைகளை காணலாம்...திருமூலர் போன்றவர்களின் குரல் ஆன்மீக சைவக் குரலாகவும், சிவ வாக்கியர் மாதிரியானவர்கள் இதற்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களாகவும், பட்டினத்தார் போன்றவர்கள் ஆனாதிக்கத்தின் பிம்பமாயும், சிலர் தலித்திய் சிந்தனைக்காரகளாகவும்...ஏன் இடதுசாரி கருத்துக்களை உடையவர்களாகவும் பகுக்க முடியும்....
பொதுவில்....அகங்காரத்தில் இருந்து விடுதலை, தன்னை அறிதல், அதிகாரங்கள், அதிகார மைய்யங்களுக்கு எதிரான போக்கு அல்லது ஆதிக்க எதிர்ப்பு, எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகி தனித்திருத்தல், சடங்குகளை எதிர்ப்பது, வழிபாடுகளை புறக்கணித்தல், தனித்துவமான மருத்துவம், யோகக்கலை போன்றவைகளைன் அடையாளமாகவே சித்தர்களை பார்க்க முடிகிறது....
மேலும் விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்வோம்....
அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்
அறிவ தெங்கே அறிந்த தெங்கே?
Monday, March 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்ல துவக்கம்.
உள்ளேன் மாமா!! :P
///திருமூலர் போன்றவர்களின் குரல் ஆன்மீக சைவக் குரலாகவும், சிவ வாக்கியர் மாதிரியானவர்கள் இதற்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களாகவும், பட்டினத்தார் போன்றவர்கள் ஆனாதிக்கத்தின் பிம்பமாயும், சிலர் தலித்திய் சிந்தனைக்காரகளாகவும்...ஏன் இடதுசாரி கருத்துக்களை உடையவர்களாகவும் பகுக்க முடியும்....///
ஓ சுவாரஸ்யமா இருக்கே..
ஒரு புஸ்தகத்தில் காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கும் விதத்தை கூட சொல்லியிருக்குறத படிச்சேன்..
இந்த காயத்துக்கு, அதாவது இந்த உடம்புக்கு திரியாக இருக்குறதுதான் காயத்திரி மந்திரம்னு சொல்லி இருக்குறத படிச்சேன்..
ரொம்ப நல்லா இருக்கு..தொடருங்க
//தவறிருப்பின் தயங்காமல் சுட்டிடுங்கள்...//
பின்னே நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? :-))))
ஆரம்பம் நல்லா வந்துருக்கு. முன்னுரை?
ம்ம்ம்ம்ம் சொல்லுங்க. அப்புறம்?
//தவறிருப்பின் தயங்காமல் சுட்டிடுங்கள்...//
பின்னே நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? :-))))
ஆரம்பம் நல்லா வந்துருக்கு. முன்னுரை?
ம்ம்ம்ம்ம் சொல்லுங்க. அப்புறம்
சித்தர் பற்றி எனக்கு எல்லாம் கேள்வி தான்,நேரடி அனுபவம் இல்லை.
அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்.
பையில அந்த சீட்டு இன்னும் இருக்கில்ல??
சார் கொஞ்சம் லேட்டாயிரிச்சு,சைக்கிள் பங்சர்.....
பொதுவில்....அகங்காரத்தில் இருந்து விடுதலை, தன்னை அறிதல், அதிகாரங்கள், அதிகார மைய்யங்களுக்கு எதிரான போக்கு அல்லது ஆதிக்க எதிர்ப்பு, எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகி தனித்திருத்தல், சடங்குகளை எதிர்ப்பது, வழிபாடுகளை புறக்கணித்தல், தனித்துவமான மருத்துவம், யோகக்கலை போன்றவைகளைன் அடையாளமாகவே சித்தர்களை பார்க்க முடிகிறது....
ஆம்.....அய்யா
கடவுள் இருக்கிறாரா...இல்லையா..?
என்று கேட்பவரும்... ஒத்துக்கொள்ளகூடிய விசயம்... சித்தர்கள்.....
ஆவலுடன்,,
க இரா
செய்திகள் இன்னும் தெரிந்து கொள்கிற ஆர்வமுண்டு..என்றாலும் உண்மையில் அவர்கள் இருந்தார்களா/ இருக்கிறார்களா என்று யோசிப்பதில்லை..
இதே சுவாரசியத்துடன் தொடருங்கள்..
Post a Comment