அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, October 8, 2007

நான் ஏன் நட்சத்திரமாகவில்லை....

இந்த வார நட்சத்திர பதிவர் வலை பதியவந்த ரெண்டாவது மாசத்துலயே இந்த நட்சத்திர பதிவராயிட்டாங்ன்னு படிச்சப்பத்தான் ஒரு விசயம் நச்சுன்னு உறைச்சது...அதாவது...நாம கூட மூனாவது வருசமா எளுதறோமே, எங்க ஏரியாவுல நீங்க ஒரு வாரமாவது நச்சத்திரமா இருகனும்னு ஒரு ஈ..காக்கா கூட அழுது புலம்பலையேன்னு.....

யார் யாரோ மொக்கை பதிவர், தக்கை பதிவர்ன்னு சொல்லிக்கிறாங்க...நான் எம்புட்டு பெரிய மொக்கையா/தக்கையா இருந்திருந்தா நம்மள இத்தன நாளா லூஸ்ல விட்ருப்பாங்க...ஹி..ஹி...இது வரைக்கும் இது குறித்து எனக்கு பெருசா வருத்தமெல்லாம் வந்ததில்லை.

இப்ப மனசுல பட்டதை வெளிப்படையா சொல்லியாச்சி...இனி எதிர்காலத்துல எல்லாரும் எழுதிமுடிச்சப்புறம் வேற அள் கிடைக்கலைன்னா நம்மளை கூப்டாலும் கூப்டலாம், ஆனா எனக்கு பெரிசா அதுல இஷ்டமில்லை....

ஏன்னா...நம்ம சிவாஜிக்கு கூட கடைசி வரை தேசிய விருது கிடைக்கலியாமே!...ஹி..ஹி..அது மாதிரி நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலியாம்னு வரலாறு சொல்லனும்...அதான் நம்ம ஆசை

அப்டியாவது நான் பெரிய ஆளாயிட்டு போறேனே!....தயவு செய்து அதை நிறைவேத்த உதவுங்கப்போய்....ஹி..ஹி...

(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை....குறிப்பாக இந்தவாரபதிவர் வள்ளியை....)

16 comments:

said...

/ஏன்னா...நம்ம சிவாஜிக்கு கூட கடைசி வரை தேசிய விருது கிடைக்கலியாமே!...ஹி..ஹி..அது மாதிரி நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலியாம்னு வரலாறு சொல்லனும்...அதான் நம்ம ஆசை//

அதுசரி... படக்'ன்னு சிரிக்க வைச்சிட்டிங்க.... :))

வெகு சீக்கிரமே நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்ல வர்றோம்... :)

said...

//வெகு சீக்கிரமே நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்ல வர்றோம்... :)//

முதல் தடவையா ரிப்பீட்டே சொல்ல வாய்ப்பு...:-))..

அவதாரம் மாத்தீட்டே இருக்குறதுனால இருக்குமோ??...அப்படியும் சொல்ல முடியலை..

ஹ்ம்ம்ம்

said...

முந்தின பின்னூட்டம் ரெண்டும் ..
ரிப்பீட்டேய்!

said...

/அவதாரம் மாத்தீட்டே இருக்குறதுனால இருக்குமோ??...அப்படியும் சொல்ல முடியலை..//

அட அவரா இவரு??? ;)

said...

//அட அவரா இவரு??? ;)//

யாரு???...ராம்...நீங்க அவரத்தான் நினச்சிருந்தீங்கன்னா அவரே தான்..:-)

said...

ராம்,மங்கை,தருமிசார் எல்லாருக்கும் ஒரு ரிப்பீட்டு! வாழ்த்துக்கள் சீக்கிரமா நட்சத்திரமா ஆகறத்துக்கு!!!

said...

/மங்கை said...

//அட அவரா இவரு??? ;)//

யாரு???...ராம்...நீங்க அவரத்தான் நினச்சிருந்தீங்கன்னா அவரே தான்..:-)/


மேடம்,


யார் யாரோ மொக்கை பதிவர், தக்கை பதிவர்ன்னு சொல்லிக்கிறாங்க...நான் எம்புட்டு பெரிய மொக்கையா/தக்கையா இருந்திருந்தா நம்மள இத்தன நாளா லூஸ்ல விட்ருப்பாங்க...

இதுவே காட்டிக்கொடுத்துருச்சு.... இது எங்கன இருந்து கிளம்புன சமுகமின்னு.... :))

said...

\\நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலியாம்னு வரலாறு சொல்லனும்...அதான் நம்ம ஆசை//

:))) அட அட .. என்ன மா ஜோக் அடிக்கறீங்க..அப்படி எல்லாம் பெரியாளாகிட விடுவமா என்னன்னு ..பாருங்க உடனே எல்லாரும் வாழ்த்து சொல்ல வருவோம்ன்னு சொல்ல்றாங்க..

ஆசைப்படுவதல்லாம் நடக்குமா என்ன..? சிவாஜியளவு பெரியாளாக விடமாட்டாங்க போலயே...

said...

ரிப்பீட்

ரிப்பீட்டு போட்டவங்களுக்கெல்லாம் ஒரு ரிப்பீட்டேய்

said...

மாயாவி!
தங்கள் களஞ்சியம் பார்த்தேன். மொத்தம் 7 பதிவுகள் தெரிகிறது.
நீங்கள் நட்சத்திரமாகும் தகுதி பெற்று விட்டீர்கள்.
தகுதியானவர்களைக் கண்டு கொள்ளாப் போக்கு கண்டனத்துக்குரியதே!
கண்டு கொள்ளப்பட்டீர்கள்...
முற்கூட்டியே வாழ்த்தி விடுகிறேன்.

said...

ஆஹா....

நான் பெரிய ஆளாவறது இத்தனை பேருக்கு பிடிக்கலையா....

ஹி..ஹி..என்ன கொடுமை சார் இது!

said...

எப்பவுமே நீங்க நட்சத்திரம்தான்....

said...

மேலே செதுக்கப்பட்டிரிக்கும் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நானும் ரிப்பீட்டேய் போட்டுக்கிறேண். :-)

said...

//எப்பவுமே நீங்க நட்சத்திரம்தான்....//

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்....அப்ப இனி நாம பர்மணட் நச்சத்திரம்னு சொல்லிக்கலாம்...ஹி..ஹி..

இது கூட நல்லாத்தான் இருக்கு...

said...

3 வருஷமா எழுதியுமா... நாங்கெல்லாம் எழுதுன அன்னக்கே நட்சத்திரமாயிட்டோமில்ல... ஆனாலும் நீங்க பாவம் தான். சரி... போனாப் போகுது... நட்சத்திர வருடம் கொண்டாடிலாம்.. ஒரு மாறுதலுக்கு இருக்கட்டுமே. எப்படியும் அடுத்த வருடம் அடுத்த பேரிலே வரப் போறீங்க. அது வரைக்கும் இந்த வருட நட்சத்திரம் மாயாவி என பட்டமளித்து சிறப்பிக்கிறேன். சபையோர் எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க பார்க்கலாம். மாயாவின்னு பேர் இருக்குறனால.. எல்லா வாழ்த்துக்களும் மாயமா போகம பார்த்துக்க வேண்டியது உங்க கடமை. சரியா? வர்ட்டா?

said...

சீக்கிரமே தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துகள்