அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, January 17, 2008

காட்டாறு....இம்புட்டு போதுமா!

ர்ர்ரொம்ப நாளா பதிவெழுதாம சுத்திட்டு இருக்கேனா...அதான் இன்னிக்கு எழுதியே தீரணும்னு ஒத்தக்கால்ல நின்னு(ச்ச்சும்மா ஒரு பேச்சுக்கு!) எழுதிட்டு இருக்கேன்...அப்படி என்ன விசேசம்னு கேப்பீங்களே....இருக்கே, அது என்னான்னு பதிவோட கடைசில சொல்றேன்....

நம்ம காட்டாறு மொக்கை பதிவு போடச்சொன்னாங்க....அல்வா குடுத்தாச்சி....ஹி..ஹி..ஆத்தா கோவமாய்ட்டாங்க, அடுத்து சான்ஸ் பிடிச்ச பதிவு எழுதனும்னு சொன்னாங்க....ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சிரலாம்னு இந்த பதிவுலயே அதையும் கலந்து கட்டி அடிச்சிர்றேன்....

மொதல்ல புத்தகசந்தை பத்திச்சொல்லனும், கடந்த ரெண்டு வருசமா தனிப்பதிவு போட்டேன், இந்த தடவை சில பத்திகள்தான்...தனிப்பதிவு எழுதற அளவுக்கு அங்க ஒண்ணுமில்லை....போன தடவைய விட இந்த தடவை நெறய ஸ்டால், என்ன பிரயோசனம் பாதி சுத்துறதுக்குள்ள பெரிசுங்க எல்லாம் டயர்டாய் உக்கார இடம் கிடைக்காதன்னு தேடிட்டு இருக்கறத பார்த்தேன். ஒவ்வொரு வரிசைக்கும் இடையில உக்கார்ரதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கலாம்.

போன தடவை வந்ததுல பாதிக்கும் குறைவாத்தான் கூட்டம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்.சரியான விளம்பரம் இல்லை,நிறைய கடைகளில் புத்தகங்கள் ஓழுங்காய் காட்சிப்படுத்தப் படவில்லை. ஏதோ காய்கறிகடையில் குவித்து வைத்திருப்பது போல குவித்து வைத்திருந்தனர். இதற்கு மான்புமிகு மஹாஜனமும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

இந்ததடவையும் நான் வருவது தெரியாததால் அழகிய தமிழ் மகள்களின் கூட்டம் மிகக்குறைவே, வர வர அழகிய பெண்களிடையே புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறதோ...என்னவோ..ஹி..ஹி..அந்த வகையில் இந்த வருடமும் Mission Failure என்றுதான் சொல்லவேண்டும்... ஹைகமாண்ட் வழக்கம் போல நிறைய புத்தகம் வாங்க நானும் வழக்கம் போல ரயில்வேஸ்டேஷன் போர்ட்டராய் கூட நடந்தேன்.ஆச்சர்யமாய் நான் இந்த வருடம் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.ஹி..ஹி...போன வருசம் வாங்கினதுலயே பாதிக்குமேல பிரிக்கலை...இந்த லட்சணத்துல புதுசா என்னத்த வாங்கறது.

இரண்டாம் சொக்கன் என்கிற பெயர் நிறைய பேருக்கு பிடித்திருக்கிறதாம்....உங்களுக்கு எப்படி?....கருத்துக்களை சொல்லலாம்.(ஹி..ஹி..இது வெளம்பரம்....)


சரி, இனி அடுத்த மேட்டருக்கு வருவோம்.....

நான் ஒன்னு சொன்னா யாரும் கோவிக்கப்டாது, அதென்ன எழுதினதுல பிடிச்சது, என் வரையில் பிடிச்சால் மட்டுமே எழுதினேன்..எழுதுறேன்...எழுதுவேன்.....அதுனால பிடிச்ச பதிவுன்னு பட்டியலிடாம சிலபதிவுகளை தொட்டுக்காட்டிச் செல்ல விரும்புகிறேன்.இதுல இன்னொரு சங்கடம் என்னன்னா, இதை எழுதுறதுக்காக நாம இது வரை நடந்துவந்த பாதையிலேயே திரும்பிசெல்ல வேண்டியிருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடில்லைதான், இருந்தாலும் நம்ம காட்டாறுக்காய்.....ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்

வலைபதிய வந்து இது மூன்றாம் ஆண்டு....என்னுடன் சமகாலத்தில் எழுதத்துவங்கிய பலரை இன்று காணவில்லை, எனக்கும் அடையாள்ங்களில் ஈர்ப்பு இல்லாததால் அவ்வப்போது என் அடையாளங்களை துறந்தே வந்திருக்கிறேன்....எனது முந்தைய வலைப்பூக்களின் கடவுச்சொல்லை கூட மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

என்வரையில் இந்த தளம் எனக்கே எனக்கான சுதந்திரவெளி....தெரிந்தது தெரியாதது, விரும்பியது விரும்பாதது என என்னுடைய தேடல், பலம், பலவீனம், விகாரம் என அத்தனையும் குவித்துவைக்கும் ஒரு இடம் அவ்வளவே....

கொஞ்சம் ஓவரா பில்ட்டப் கொடுக்கிறேனோ.....

நான் வலைபதிய வந்த சமயத்தில்தான் அனானிகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தனர்.நான் அனானிகளை ரசித்தேன், ரசிக்கிறேன்...ஆனால் இன்றுவரை அனானியாய் பின்னூட்டம் போட்டதில்லை,அதற்கான தேவையும் வந்ததில்லை.ஒரு கட்டத்தில் பெரியவர் டோண்டு மற்றும் அவரை சார்ந்த சில பதிவர்களுக்கு பிரச்சினை வந்தபோது தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கொணர்ந்தது. அதை மிகத்தீவிரமாய் எதிர்த்த வெகுசிலரில் நானும் ஒருவன்,இன்று வரை பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாத ஒரே பதிவரும் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்.

உண்மையில் நான் ஆத்திகனா?,இல்லை நாத்திகனா? என்பதில் எனக்கு இன்றளவும் குழப்பம் உண்டு, ஆனால் என்னுடைய கடந்தகாலத்தில் ஒரு தீவிரமான நாத்திகனாய் இருந்து பின் நீர்த்துப் போனவன் என்பதுதான் உண்மை.... அதே நேரத்தில் நான் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறேன், நீங்களும் கடவுளாக முடியுமெனவும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இங்கே வலைப்பதிவில் இரண்டு பேருடன் சண்டைபிடித்திருக்கிறேன்....ஹி..ஹி...ச்ச்சும்மா, சண்டையெல்லாம் இல்லை,அவர்களின் பதிவின் மீதான எனது எரிச்சலை பதிந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்,மற்றபடி இருவருமே நான் மிகவும் மதிக்கும் சகபதிவர்கள். ஒருவர் சகோதரி லிவ்விங் ஸ்மைல், இன்னொருவர் உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன்.இன்னிக்கு ரெண்டுபேருமே பெரிய ஆளுங்க, நிமிர்ந்து பார்க்க சந்தோஷமாயிருக்கிறது.

கண்ணகி தமிழ்பெண்ணே அல்ல என்றும், மஹாத்மா ஆறு கொலை முயற்சிகளுக்கு பின்னரே கொல்லப்பட் தகவல்,உலக மொழிகளில் கெட்டவார்த்தையில் திட்டுவது எப்படி என்றும், ஔரங்கசீப்பின் உயிலை வலைப்பதிவுக்கு தந்தவன் என ஏகப்பட்ட பெருமைகளை உடையவன் நான்...ஹி...ஹி...ம்ம்ம்ம்ம்!

குறிப்புகளை வைத்து ஒப்பேற்றிய பதிவுகள் என பார்த்தால் காலம் ,ராமாயணம் உண்மையா?,பொய்யா?......., சபரிமலை ஒரு பௌத்த/சமண மடம்?, இந்து,இஸ்லாமிய மதங்களின் ஆச்சர்ய்மான ஒற்றுமைகள் ,மறைந்து போன தமிழ் நூல்கள் போன்றவைகளும் உண்டு.

தொடர்கள் எழுத ஆரம்பிப்பதும், அப்புறம் பாதியிலேயே அதை மறந்துவிடுவதும்...உண்டு

தொடர்கள் என பார்த்தால்....ப்ளூபிலிம் , நானும் சாய்பாபாவும், ஸென் என இன்னும் சிலது இருக்கிறது....பாதியில் விட்ட தொடர்கள் திருமலையான் யார்?, மந்திரம் தந்திரம் யந்திரம்இது போக இன்னும் சிலதும் உண்டு.

நான் யார் என்கிற தேடல்களும் அதன் மீதான விவாதங்களும் அவ்வப்போது வரும், சமயங்களில் நானே கடவுள் என்கிற நினைப்புகளை கூட பதிந்திருக்கிறேன்.

விட்டால் பதிவு நீளமாகிவிடும்....காட்டாறு லைட்டா படங்காட்ட சொன்னாக...நான் கொஞ்சம் நீட்டி முழக்கீட்டேன்னு ஹி...ஹி....

சரி ஒரே மூச்சில் இவ்வளவு நீளமாய் பதிவெழுத அப்படி என்ன காரணம்னு சொல்றேன்னு சொன்னேன்ல....அது வந்து....இன்னிக்கு ஒரே நாள் பங்குசந்தை சரிவில் நான் இழந்தது 2,16,672 ரூபாயாக்கும். அதை கொண்டாடவே இந்த பதிவு....ஹி..ஹி...

அசரமாட்டம்ல......

24 comments:

said...

இம்புட்டு போதுமாங்கறது எது அந்த இரண்டு லகரமா.. இல்ல பதிவா.. ?
அது சரி அடையாளம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இப்படி யாரோட யோ பதிவெல்லாம் பிடிச்சதுன்னு போட்டிருக்கீங்களே.. அது என்ன வகையில் சேர்த்தி.. கடவுசொல் மறந்ததோட அது மாதிரி பதிவு எழுதியது சொக்கனல்ல என்றும் மறக்கவேண்டாமோ..

said...

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்னா அப்ப மொக்கை ப்ளஸ்சா

//இன்னிக்கு ரெண்டுபேருமே பெரிய ஆளுங்க, நிமிர்ந்து பார்க்க சந்தோஷமாயிருக்கிறது///

அப்ப உங்க கூட சண்டை போட்டா பெரியா ஆள் ஆகலாம்னு சொல்றீங்க..

உங்க பதிவுலக சரித்திரத்தையே ரெம்பபபப அழகா உங்க பதிவுகள் மூலமாவே சொல்லிட்டீங்க...

said...

விட்டுபோனது..

இழந்த ரெண்டுலட்சத்து சொச்சம்..ம்ம்ம்

அசராத சிங்கம் தான்..

said...

வாங்க முத்துலட்சுமி...

நான் அவர்களில்லை...ஒருவேளை அவங்ககிட்ட கேட்டுபாருங்க...அவங்க நானான்னு..

ஒண்ணும் புரியல...ஹி...ஹி...இன்னிக்கு ஒரே கன்ஃயூசனப்பா....

said...

மங்கை...

ஏற்கனவே நீங்க பெரிய ஆளு...இன்னும் பெரிய ஆளாவனும்னு ஆசை இருக்கா சொல்லுங்க....

ஏதோ நம்மால முடிஞ்சது....ஹி..ஹி....

பணத்தை இழக்கலாம்...ஆனா நம்பிக்கையைத்தான் இழக்கக்கூடாது....அது கைவசம் கொஞ்சம் நெறயவே ஸடாக் இருக்குன்னு நினைக்கிறேன்...அதான் இப்படி உக்காந்து மொக்கையா பதிவு எழுத முடியுது...ஹி..ஹி...

said...

காட்டாறு இன்னிக்கி கட்டுக்கடங்காம போகுது போல இருக்கே!!!!!
அன்புடன் அருணா

said...

வாங்க டாக்டர்...

நீங்க கேக்கறது நியாயமான கேள்வி...அந்த பசங்கள நான் ஆட்டத்துல சேர்த்துருக்க கூடாதுதான்...ஹி..ஹி..

said...

வாங்க அருணா...

மொதவாட்டி நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க.....டாங்ஸ்

அப்பால...இன்னிக்கு வந்தது காட்டாறே அல்ல...சுனாமி...

நிறைய பேரின் சொத்துபத்து எல்லாத்தையும் சுருட்டீட்டு போயிருச்சு....ம்ம்ம்ம்ம்

ஏறத்தாழ 12லட்சம் கோடி வரை இழப்பு இருக்குமென தெரிகிறது.

said...

//நிறைய பேரின் சொத்துபத்து எல்லாத்தையும் சுருட்டீட்டு போயிருச்சு....ம்ம்ம்ம்ம்///

:-(((

என்ன ஆகும்..எப்ப/எப்படி சரி ஆகும்

said...

மங்கை...

பிஃப்ரவரி முதல் வாரத்திற்குள் நிலமை சரியாகிவிடுமென எதிர்பார்க்கிறேன்.

said...

உங்களுக்கு மெயில் அனுப்பி வைச்சேன்...... ரீப்ளையே காணோம்??? :(

said...

மெய்யாலுமே கவனிக்கல ராம்...இதோ இப்ப பார்த்துர்றேன்....

said...

ம்ம்.. உங்க பழைய வலைப்பூவுல இருக்கிற 'அந்த காரம்' இப்ப இல்லையே..ஏனோ?

/இன்னிக்கு ஒரே நாள் பங்குசந்தை சரிவில் நான் இழந்தது 2,16,672 ரூபாயாக்கும். /

'அடி கம்மி'னு சொல்லுங்க.. ஏனா நான் இழந்தது இதைவிட இரண்டு மடங்கு!! ;(

அப்புறம்... உங்க 'பங்குவணிகம்' வலைப்பூ சன் நியூஸ்ல (Cliping)வந்தது பார்த்தீங்களா...?!! வாழ்த்துக்கள்!! :)

said...

சொல்ல மறந்ததுட்டேன்...

ஏனுங்க 'மிளகாய' பத்தி ஒரு வரிகூட சொல்லலை... குறிப்பா... 'வெள்ளிகிழமை ஸ்பெசல்' ;)

said...

//"எவன் எல்லா உயிர்களிடத்திலும் இருந்து கொண்டு எல்லா உயிர்களின் உள்ளத்தில் உறைகிறானோ....

எவனை எல்லா உயிர்களும் அறிந்து கொள்ளவில்லையோ,

எவனுக்கு எல்லா உயிர்களும் உடலாகின்றனவோ,

எவன் எல்லா உயிர்களிடத்தும் உள்நின்று அவற்றை ஆள்கிறானோ

அவனே அழிவற்றவன்....

காணப்படாமல் காண்கிறவன்...
கேட்கப்படாமல் கேட்பவன்...
நினைக்ககப்படாமல் நினைப்பவன்...
அறியப்படாமல் அறிபவன்

அவன்தான் கடவுள்// Wondering why u left this blog

கடவுள் யார்? என்ற கேள்வியும்
நான் யார் ? என்ற கேள்வியும்
ஒரே பதிலைத்தான் முடிவில் தர இயலும்.
ஆயினும் மனம் ஒரே நிலையில் ஒரே பொருளில்
ஒன்றியிருப்பாருக்கு மட்டுமே இது சாத்தியம்.
இந்த வலைப்பதிவினைத் தொடரவேண்டும்.
ஆத்ம சிந்தனைகளின் வலு எத்தனை பேர் நம் பதிவினைப்
படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல.
நாம் நல் வழியில் தான் செல்கிறோமா என
சுய பரீட்சைக்காகத்தான்.
நல் வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
பி.கு. நீங்கள் இழந்தது ரூ 2,16,000 + பரவாயில்லை.
ஆனால், தன் நம்பிக்கையை இழக்காமல் இருங்கள்.
பிப்ரவரி முதல் வாரத்திற்குள் இழந்த தொகையை
மீட்டுவிடுவீர்கள்.

said...

தென்றல்...

பங்குவணிகம், மிளகாய்...இவிங்கல்லாம் ஆரு?

நாம வேற ஆளு பாஸ்....ஹி..ஹி...

said...

/பங்குவணிகம், மிளகாய்...இவிங்கல்லாம் ஆரு?
/

அப்புறம் பங்காளி, மாயாவி -- இவிங்கல்லாம் ஆரு..?!

அது சரி...
திருநெல்வேலிக்கே அல்வாவா...!!

said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றை சூரி அவர்களே...

மெய்யியல், இறையியல் குறித்து எழுத நிறைய இருக்கிறது...அந்த சமயத்தில் என்னை தொடர்ந்து எழுதச்சொல்லி யாரேனும் ஊக்குவித்திருந்தால் எழுதியிருப்பேனோ என்னவோ....

ஏனெனில் அந்த காலகட்டத்தில் என்னுடைய பதிவுகளை பெரும்பாலும் நான் மட்டுமே படித்துகொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை...ஹி..ஹி..ம்ம்ம்ம்

said...

வந்துட்டேன். வந்துட்டேன். வந்துட்டேன். டேக் பண்ண மட்டும் தான் தெரியுமின்னு மனசுக்குள்ள பொருமியிருந்தீங்கன்னா.. மன்னிச்சிருங்க ராசா... கொடுத்துள்ள மத்த பதிவெல்லாம் படிச்சிட்டு திரும்ப இந்த பக்கம் வாரதுக்குள்ள… முதுகு கழண்டுருச்சி... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. யப்பாஆஆஆ… இவ்ளோ பதிவு எழுதியிருக்கீங்களா? பெயர் மாற்றுவதில் சினிமாகாரய்ங்க கெட்டாய்ங்க. எனக்கு பங்காளியும், சொக்கரும் தான் தெரியும். சதயத்திலே எல்லா பதிவுமே (more or less) பிடிச்சிருந்தது. ஏன் திரும்பவும் நீங்க எழுதக்கூடாது. அதுவும் நான் கடவுள் மாதிரியுள்ள பதிவுகள். அப்புறம் 'சைக்கிள் கேப்புல' வாசிச்சதும் இது நம்ம பங்காளி சொக்கரு தான்னு படீருன்னு மண்டைல வெளிச்சம். :-)

எனக்கு சொக்கரைத் தெரியுமாதலால் அவரோட பதிவிலிருந்து கார் கதை (வெள்ளி விழா) வருமின்னு எதிர்பார்த்தேன். நான் ரசிச்ச பதிவு. அம்பாசிடர்ல ஆரம்பிச்சி...என்னுடைய எண்ணங்களோட ஒத்துப்போனதாலோ?

இப்பிடியே எழுதிட்டு போனேன்னு வச்சிக்கோங்க.. தனிப்பதிவு மாதிரி ஆயிப்போடும். அதனால ஜகா வாங்கிக்கிறேன்.

டேக்கில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் சின்சியரா உங்களை எங்களுக்கு, குறிப்பா எனக்கு தெரியப்படுத்தியதால, நன்றிங்கோவ்.

said...

//இன்னிக்கு ஒரே நாள் பங்குசந்தை சரிவில் நான் இழந்தது 2,16,672 ரூபாயாக்கும். அதை கொண்டாடவே இந்த பதிவு....ஹி..ஹி...
//
இது இழந்த மாதிரி ஆகாதே... திரும்பவும் பிப்ரவரில ஏறிச்சின்னா.. வந்துறப் போகுது. இதெல்லாம் காரணமின்னு சொன்னா.. நாங்க நம்பிருவோமா?

said...

//ஆத்ம சிந்தனைகளின் வலு எத்தனை பேர் நம் பதிவினைப்
படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல.
//
சூரி அய்யா சொன்னதை கேட்டீங்கல்ல... பார்த்துக்கோங்க அப்பூ... நீங்க திரும்பவும் எழுதனும். வாசிக்க நாங்க இருக்கிறோம்; மறுமொழி தராவிடினும்.

said...

காட்டாறு...

என்ன இதெல்லாம், நன்றியெல்லாம் சொல்லி நம்மள பெரிய ஆளாக்கறீங்க...

ஆத்தா...நானெல்லாம் ர்ர்ர்ரொம்ப ச்சின்ன பையன்...ஹி..ஹி...

said...

இப்போ பங்குச் சந்தை ஒ..கே ஆய்ருச்சா?

//இந்ததடவையும் நான் வருவது தெரியாததால் அழகிய தமிழ் மகள்களின் கூட்டம் மிகக்குறைவே, //

அது சரி..

அழகிய நடை கைகூடி வருகிறது..நிறைய எழுதுங்கள்..

said...

பாசமலர்...

நீங்க ர்ர்ர்ர்ர்ரொம்ம்ப நல்லவங்க....

ஹி..ஹி...என்னோட எழுத்து நடை நலலாருக்குன்னு சொன்ன மொத ஆளு நீங்கதான்..இதை மறக்கமாட்டேன் தாயீ....நெம்ப டேங்ஸ்....