அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, April 10, 2008

சித்தர்களும் பித்தர்களும் -2

இந்த தொடரை எழுத துவங்கிய பின்னரே, இனையத்தில் சித்தர்களை தேடினேன்...ஏகப்பட்ட விவரங்களுடன் பலர் எழுதியிருந்ததை காண முடிந்தது. ஏற்கனவே பலர் எழுதியதை திரும்ப எழுதுவதை காட்டிலும் இதுவரை சொல்லாத சில செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சித்தர்களின் எண்ணிக்கை குறித்து ஆளுக்கு ஒரு பட்டியலை நீட்டினாலும், எல்லா பட்டியலிலும் காணக்கிடைப்பது கோரக்காநாதர், மச்சேந்திரர் ஆகிய இருவர் மட்டுமே.பதினெட்டு சித்தர்கள் என்பது தத்துவார்த்தமான ஒரு குறியீடாகவே இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சித்தர்களிடையே காணப்படும் மற்றொரு பொதுத்தன்மை அவர்கள் கடவுள் வழிபாட்டினையோ, ஆராதனைகளையோ, இறைவனின் புகழ் பாடுவதையோ தவிர்த்திருக்கிறார்கள் என்பதே. கடவுளை வடிவநிலை படுத்தாது கருத்துநிலை படுத்தினர் என்பதுதான் உண்மை. சிவன் என்கிற பெயர் குறியீடாக குறிக்கப்பட்டதே தவிர பெரும்பாலான நேரங்களில் அது என்றே தங்களின் இறைவனை குறிப்பிடுகின்றனர். தத்துவம் என்றால் தத்= சிவன், துவம்= அதன் மெய்யியல்புகளை குறிப்பது ஆகும்.

சிவனாகிய குருவின் தொடர்ச்சியான சீடர்களே சித்தர் பரம்பரையினராய் அறியப்படுவது எந்த அளவிற்கு குரு சிஷ்யபரம்பரை முக்கியமானதாய் இருந்திருக்கிறது எனபதை புலப்படுத்தும். குருவுடன் ஒன்றுவதே பிராதனமாயும் அதை குருயோகம் என்றும் அறியத்தருகின்றனர். குருவானவர் தனது சீடனுக்கு மெய்ஞானத்தை நோக்கவும்,பயிலவும், சோதிக்கவும், சிந்திக்கவும், தியானிக்கவும்,பயிலவும் அனுபவித்து உணரவும் உதவிசெய்கிறார்.

குருவும் அவரின் தன்மையையொட்டி பலவகையாக அறியப்படுகிறார்.

பிரேரகர்கள் - சாதனைகளின் பயன்கள்,சிறப்புகளை சாதகர்களுக்கு சொல்லி ஊக்குவிப்பவர்

சூசகர்கள் - சாதனைகளை துவங்கிவைத்து அதன் நோக்கத்தை உணர்த்துபவர்

வாசகர்கள் - சாதனைகளையும் அதன் நோக்கங்களை விளக்கி காட்டுபவர்

தர்சகர்கள் - சாதனைகளை தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக்காட்டி நோக்கங்களை உணர்த்துபவர்

சிக்க்ஷகர்கள் - சாதனைகளையும் அவற்றின் குறிக்கோளையும் போதிப்பவர்

போதகர்கள் - சாதனைகளைப்பற்றியும் நோக்கங்களை பற்றியுமான உண்மை ஞானத்தை உணர்த்துபவர்கள்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சித்தர்கள் பாலவர்க்கம், மூல வர்க்கம்,கயிலாயவர்க்கம் மூன்று வகையாக கருதப்படுகின்றனர்.

பாலவர்க்கத்தினருக்கு முதல்வனாய் முருகபெருமானார் கருதப்படுகிறார். இவருக்கு சித்தசேனன் என்கிற பெயரும் உண்டு.இவர்கள் குண்டலினி சக்தியை மேம்படுத்திய முக்தர்கள் ஒருவகையில் குண்டலினி யோகிகள் என்றும் அழைக்கலாம்.

மூலவர்க்கத்தினருக்கு முதல்வனாய் திருமூலரை குறிப்பிடுகின்றனர்., இந்த மரபை நந்திவர்க்கம் என்றும் கூறுகின்றனர்.

திருமூலரும், கம்பளிசட்டை சித்தரும் கையிலாய வர்க்கம் என கூறிக்கொள்கின்றனர், இவர்களின் முதல்வனாக அகஸ்தியரை கூறுகின்றனர்.

இன்னொரு வகைப்பாட்டியலின் படி சித்தர்களை 'யோக சித்தர்', 'காயசித்தர்கள்', 'ரசவாத சித்தர்கள்' என பிரிக்கின்றனர். இதில் யோக சித்தர்கள் மற்றவரை விட உயர்ந்த நிலையை எட்டியவர்கள். யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயல்பவர்கள். காய சித்தர்கள் என்பார் தங்கள் உடலை வலுவுள்ளதாக்கி அழியாத தன்மையை பெற முயல்பவர்கள் இவர்களுக்கு முக்தி பெரிதில்லை. ரசவாத சித்தர்கள் மருத்துவத்திலும், உலோகவியலிலும் தேர்ச்சியனவர்கள்.

நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் ஒரு துளியாகத்தான் இருக்க வேண்டுமெனவும், சித்தர் பாடல்களை அழிப்பதையே தங்கள் நோக்காக கொண்ட சைவசித்தாந்திகளை பற்றிய தகவலும் அறியக்கிடைக்கிறது. இன்றைக்கு தொகுக்கப்பட்டிருக்கும் சித்தர் பாடல்கள் அனைத்துமே செவிவழியாக அறியப்பட்டு 16ம் நூற்றாண்டுக்கு பின்னரே ஓலைச்சுவடிகளில் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் இருக்கிறது.

தொடரும்....

9 comments:

said...

உள்ளேன் ஐயா

said...

//துளசி கோபால் said...

உள்ளேன் ஐயா//

நானும்...

said...

நானும் படித்தேன் ஐயா..

said...

போன வாரம் தான் இந்த கோரக்கசித்தர் பற்றிய ஒரு புத்தகம் படித்தேன்.பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தன.என்னுடைய பதிவில் ஒரு சில பக்கங்களை மட்டும் படம் எடுத்து போட்டிருக்கேன்.

said...

//இதுவரை சொல்லாத சில செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்//

அதானே, என்ன தான் இருந்தாலும் சித்தருக்கு தானே சித்தர்களைப் பற்றி தெரியும்...

அடேங்கப்பா சித்தர்கள்னா என்னமோ நினச்சுட்டு இருந்தேன்..
உண்மையிலே இது வரை கேள்விப்படாத தகவல்கள் தான்

said...

////////நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் ஒரு துளியாகத்தான் இருக்க வேண்டுமெனவும், சித்தர் பாடல்களை அழிப்பதையே தங்கள் நோக்காக கொண்ட சைவசித்தாந்திகளை பற்றிய தகவலும் அறியக்கிடைக்கிறது. /////////

இது கொஞ்சம் புதிரான செய்தியாக இருக்கிறதே,மேலதிக தகவல் தர இயலுமா?

said...

ஆராய்ச்சியில் நிறைய தகவல்கள் கண்டுள்ளீர்கள்..

said...

மேலும், சித்தர்களின் மொழி பற்றி விரிவாக எழுதவும். ஏனெனில் அவர்களின் சொல்லுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய பொருளுண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்புடன்
முத்து

said...

//துளசி கோபால் said...

நிலா said...

உள்ளேன் ஐயா//

நானும்...