அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, June 9, 2008

எழுதவே பிடிக்கலை....

இப்பல்லாம் பதிவெழுதவே பிடிக்கலை...எழுதாம இருந்துரலாம்னு நினைச்சேன், அதுலயும் ஒரு அபாயமிருக்கறத கண்டுபிடிச்சப்புறம்தான் இந்த பதிவை எழுத ஆரம்பிச்சேன். என்ன காரணமுன்னு தெரியனும்னா முழுப்பதிவையும் நீங்க படிச்சாகனும்.

மொதல்ல கொஞ்சம் அரசியல் பேசுவம்...சரியா!, அழகிரி கலைஞருக்கு கட்டளைன்னு போட்டு ஏதோ ஒரு வாரபத்திரிக்கை வெளம்பரம் பார்த்தேன். சன் டிவி சகோதரர்களை சந்திக்கக்கூடாதுன்னு அழகிரி கலைஞரை மெரட்டின வெவகாரம் CNNIBN, லயும், அவங்க சம்பந்தி ஹிண்டுவுலயும் வந்திருந்திச்சி...மெய்யாலுமே சந்தோசமாய்ட்டேன். அழகிரி செஞ்சது கரெக்ட்டுதான்...பின்ன உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய நெனச்சவய்ங்கள இம்புட்டு விட்டதே பெரிய விசயம். என்னடா இவன் அழகிரியோட அடிவருடியாய்ட்டானான்னு யோசிக்கிறீங்களா...

மதுரக்காரய்ங்க பாசக்காரப் பயலுக, உயிரயும் கொடுப்பாய்ங்க, ஆனா அதே நேரத்துல வம்பு, த்ரோகம்னு வந்துட்டா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்...அத இப்ப அழகிரிகிட்ட பாக்கும் போது சந்தோசமாருக்கு. நான் இருக்கறவரை அந்தப் பயலுகளை எங்க குடும்பத்துக்குள்ள நொழயவிடமாட்டேன்னு சொன்னது சரிதான்னு நினைக்கிறேன். நாஞ் சொல்றது நெறயபேருக்கு புடிக்காதுன்னு நினைக்கிறேன்.

இப்ப ஒரு சினிமா பாட்டு....ஒரு காலத்ல இந்த பாட்டையும், பாட்லவர்ற புள்ளையயும் பார்த்து கெறங்கிப் போய் கெடந்தவன் நான். இது வரைக்கும் கள்ளங்கபடமில்லாத அழகோட ஒரு ஹீரோயின் வரலைன்னுதான் சொல்லுவேன். மணிஷா கொய்ராலா பம்பாய் படத்துல ஆரம்பத்துல கொஞ்சம் பாசாங்கில்லாத அழகோட வருவார்.

நான் சொல்ற ஹீரோயினோட பேரு பாக்யஸ்ரீ, கொஞ்சப்படம்தான் நடிச்சார், அப்பாலிக்கா கல்யாணம் பண்ணீட்டு செட்லாய்ட்டார்னு நினைக்கிறேன். நான் சொல்ற படம் "மைய்னே ப்யார் கியா", பாட்டு 'தில் தீவானா பின் சஜ்னா'...என்னாவொரு மெலடி, அப்படியே கரைச்சிருவாய்ங்க இந்த பாட்ல. அப்ப லவ்வடிச்சிட்டிருந்த சமயமா...இந்த பாட்ட கேட்டாலே ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே லவ்விங்ஸ்தான் ஹி...ஹி...

பாட்ட இங்கன போய் பாருங்க...இப்பவே சொல்லீட்டேன் பாட்ல சல்மான்கான் சம்பந்தமேயில்லாம குரங்கு மாதிரி குட்டிக்கரணமெல்லாம் போட்டு உங்களை படுத்துவார்...பாக்யஸ்ரீக்காக பொறுத்துக்கங்க. பாட்டு வரியையும், அர்த்தத்தையும் இங்கபோட்ருக்கேன். படிச்சிப் பார்த்துட்டு சொல்லுங்க. ஹிந்தியில விஷாரத் வரை படிச்சது இந்த மாதிரி பாட்டுக் கேக்கத்தான் யூஸாவுது(சைக்கிள் கேப்ல நான் ஹிந்தி பண்டிட்!..னு சொல்லியாச்சி..ஹி..ஹி..)

Dil Deewana Bin Sajna Ke Maane Na
The heart is crazy, without my dear, it does not listen.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na
It is mad, even after making it understand it does not understand
Dhak Dhak Bole, It Ut Dole Din Raina
It goes Dhak Dhak (beating of the heart), it dances day and night.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

Duniya Mange Apni Murade Main To Mangu Saajan
The world asks for its wishes. I just ask for my dear.
Rahe Salaamat Mera Sajna Aur Sajna Ka Aangan
Let my dear and his abode be safe
Iske Siva Dil Rab Se Kuch Bhi Chahe Na
Other than this, my heart does not ask for anything else from God.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

Jee Yeh Chahe Bana Ke Aanchal Tum Ko Lapetu Tan Pe
My heart desires that I should wrap you around my body like a Palloo (long hanging end of the sari).
Kabhi Yeh Sochu Main Ud Jau Tum Ko Liye Gagan Pe
Sometimes I think I should fly away with you in the clouds.
Aur Bhi Kuch Hain Dil Ke Iraade Kya Kehna
There are many more wishes in my heart, what should I say?
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

இப்படி இம்சை பண்றதுக்கு இவன் பதிவெழுதாமலே இருந்திருக்கலாம்னு தோணுமே....எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஆனாலும் ஏன் எழுதறேன்ன்னா...

ஒரு வேளை நான் எழுதறதை நிறுத்தீட்டா, அப்புறம் நீங்க எல்லாருமா சேர்ந்து என்னை திரு.ஜெயகாந்தனுக்கு இனையா வச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா...என்ன கொடுமையிது, இதெல்லாம் இந்த தமிழ்கூறும் நல்லுலகிற்கு தேவையா, அதுனால....நீங்க படிச்சாலும் படிக்காட்டியும், நான் தொடர்ந்து எளுதறதா இருக்கேன்.

ஹி...ஹி...ம்ம்ம்ம்

13 comments:

said...

/அப்புறம் நீங்க எல்லாருமா சேர்ந்து என்னை திரு.ஜெயகாந்தனுக்கு இனையா வச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா.//

:)))

said...

சரி தொடர்ந்து எழுதறதால ஜெயமோஹனுக்கு இணையா வெச்சி பேசிடறோம் :P

said...

சொக்கா..... நீயுமா?

காப்பாத்துப்பா .....

said...

:) பதிவை வழக்கமா எந்த ரோட்டுல போகும் போது எழுதினேன்னு விவரம் கீழே இருக்குமே அதைக்காணோம்..??

said...

அதானே...'ரன்னிங்க' கமென்ட்ரியோட சொக்கனின் பதிவ படிச்சு தான் பழக்கம்...

நீங்க சொன்ன பாட்டுல சல்மான் கோமாளி மாதிரி இருப்பார்...

அப்படியே ஒரு எங்களுக்கெல்லாம் ஹிந்தி சொல்லிக்குடுங்களேன்...

அடுத்த தொடர் ஆரம்பம் மக்களே, எல்லாரும் சீட்டு போட்டுக்கோங்க..

இது மாதிரி " உதாரணங்களுடன்" வகுப்பு எடுக்கப்படும்....:-))

said...

கப்பி..

அப்ப நான் ஜெயகாந்தன் அளவுக்கு எழுதலைன்னா சொல்றீங்க...நல்லா யோசிச்சிப் பாருங்க பாஸ்!

ஹி..ஹி...ம்ம்ம்ம்

said...

நிலா...

நாயகன் பாணியில உங்ககிட்ட ஒரு கேள்வி..

"நீங்க சின்னவரா, பெரியவரா?"

said...

துளசிம்மா...

ஒய் டென்சன்...?

ஹி..ஹி...சின்ன பையன் ஏதோ ஒளர்றான்னு கண்டுக்காதீங்க...

said...

கவி முத்துலட்சுமி !

குட் கொஸ்டின்...ஆனாலும் இம்புட்டு கவனமா பதிவை படிக்கிறிங்கன்னு நினைக்கும் போது ஒரே ஃபீலிங்காய்ட்டேன்...நீங்க சொன்ன மாதிரி அடுத்த பதிவுல இருந்து எளுதுன இடத்தையும் சேர்த்துடலாம்.

said...

மங்கைஜீ...

ஹிந்தியா, உங்களுக்கா...தில்லியிலயே உங்களை மாதிரி அழகா ஹிந்தி பேச ஆளில்லைன்னு பேசிக்கறாங்க..

நீங்க என்னடான்னா....உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா...ஹ்..ஹி..

said...

ஆஹா பதிவு எழுதாம இருக்கறதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா சரி அப்ப இன்னம் கொஞ்சநாளைக்கு தொடரலாம்...

said...

///////ஒரு வேளை நான் எழுதறதை நிறுத்தீட்டா, அப்புறம் நீங்க எல்லாருமா சேர்ந்து என்னை திரு.ஜெயகாந்தனுக்கு இனையா வச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா..////

இல்லை உங்களை நாங்க கி.ராஜநாரயணன் ரேஞ்சுல வச்சிருக்கோம்!
சந்தேகமிருந்தால் முதலாம் சொக்கனிடம் கேட்கவும்!

said...

/அப்புறம் நீங்க எல்லாருமா சேர்ந்து என்னை திரு.ஜெயகாந்தனுக்கு இனையா வச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா.//

அட கொடுமையே இப்பிடி ஒரு நெனப்பா

:))