அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, June 17, 2008

நான் இப்ப நாலாங்க்ளாஸ்

மெய்யாலுமே...நாலாங்க்ளாஸ் வந்துட்டேன்....ஒரு முக்கியமான அறிவிப்பு இந்த பதிவின் கடைசியில் இருக்கிறது.

ஹி..ஹி..பதிவெழுத ஆரம்பிச்சி மூனு வருசம் முடிஞ்சத வேறெப்படி சொல்றதாம். மூனு வருசம் போனதே தெரியலை. என்னோடு சம காலத்தில் எழுத ஆரம்பித்த பலர் தாமே முன்வந்து காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். புதியவர்கள் பலர் நம்பிக்கையளிக்கிறார்கள். பலர் மின்மினி பூச்சிகளாய் வெளிச்சம் காட்டி கரைந்து போய்விட்டனர்.

இப்போது தொடர்ச்சியாக மூன்று நான்கு வருடங்களாய் பதிவெழுதுபவர்களை விரல்விட்டு என்ணிவிடலாம்.நம்மில் பலர் தங்களின் சுயபிரதாபங்களை அப்படி இப்படி கொஞ்சம் பில்டப்புடன் பதிவாய் எழுத ஆரம்பித்து,வாசக வட்டம் வந்த பின்னர் அதற்கென வலிந்து எழுத ஆரம்பிப்பதையும்,ஒரு கட்டத்தில் வாசகவட்டத்தை தக்க வைக்க எல்லாவிதமான குரங்கு சேஷ்ட்டைகள் செய்வதை என்னைப் போலவே எல்லோரும் அவஸ்தையுடன் அவதானித்திருப்பீர்கள்.

என்வரையில், நான் எந்த கும்பலையும் சேராததனாலேயே இத்தனை காலம் பதிவுலகில் இருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கென வாசகவட்டம் எப்போதுமே இருந்ததில்லை. அதை நான் விரும்பியதுமில்லை, அதற்கென எழுதுவதுமில்லை.நான் இங்கே பெரிதாய் இதுவரைக்கும் அங்கீகரிக்கப் பட்டதுமில்லை, இப்போதைக்கு அது குறித்த வருத்தமுமில்லை. சமயங்களில் பலருக்கு உவப்பில்லாத கருத்துக்களை முன்வைக்கும் வாய்ப்புகள் வந்த போது அதை நிறைவாகவே செய்திருக்கிறேன் என்கிற திருப்தி இருக்கிறது.

பதிவுலகில் என்ன சாதித்தாய் என்கிற கேள்விக்கு என்னால் பெருமையாய் பதில் சொல்லமுடியும்....இன்னமும் நிறைய சாதிக்க வேண்டியிருப்பதால் அதை பற்றி பீற்றிக் கொளள விரும்பவில்லை, ஆனால் அந்த முயற்சி எத்தகையது என்பது பதிவுலகில் என்னை தொடரும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.அந்த நண்பர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் நான் என்றென்றும் கடமைப் பட்டவன்.

நெறய எழுதலாம்தான்...அதெல்லாம் இனி அஞ்சாங்க்ளாஸ் வந்த பின்னால எழுதறேன்...சரியா

விரைவில் இந்த பதிவு கைவிடப்படும்...(ஹி..ஹி..ஆரம்பிச்சிட்டான்யா ன்னு தோணுதா?)

(இரண்டு நிமிடங்களில் தட்டிய எக்ஸ்ப்ரஸ் பதிவிது...இந்த டீட்டெய்ல் நம்ம கவி.முத்துலட்சுமி அவர்களுக்காக...ஹி..ஹி)

12 comments:

said...

\\எனக்கென வாசகவட்டம் எப்போதுமே இருந்ததில்லை. அதை நான் விரும்பியதுமில்லை, அதற்கென எழுதுவதுமில்லை//

இப்படி சொல்லிட்டு... எக்ஸ்ப்ரஸ் பதிவுன்னு டீட்டெய்ல் எல்லாம் இந்த வாசகிக்காக குடுத்திருக்கீங்களே.. அதை என்ன சொல்றது.. :))

said...

எனிவே நாலாங்கிலாஸ் பாஸ் செய்ததற்கு வாழ்த்து..
இந்த பேருல எழுத ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆகிடிச்சா .??

said...

கவி.முத்துலட்சுமி...

இப்டி சேம்சைட் கோலெல்லாம் போடப்டாது.

said...

/
பலருக்கு உவப்பில்லாத கருத்துக்களை முன்வைக்கும் வாய்ப்புகள் வந்த போது அதை நிறைவாகவே செய்திருக்கிறேன் என்கிற திருப்தி இருக்கிறது.
/

இதுக்காகத்தானே எழுதறது!!!

:))))

said...

சூப்பரு.அடுத்து என்ன பேருல மாமா?

said...

//என்வரையில், நான் எந்த கும்பலையும் சேராததனாலேயே இத்தனை காலம் பதிவுலகில் இருக்கிறேன் என நினைக்கிறேன்.//

அப்போ இவ்ளோ நாள் நீங்க எங்க கும்மி க்ரூப் இல்லையா? :P

said...

//பதிவுலகில் என்ன சாதித்தாய் என்கிற கேள்விக்கு//

இதுக்கு குட்டிபாப்பா நானே சொல்லிடுவேன். பாவம் அப்புறம் நீங்க இங்கே நிம்மதியா இருக்க முடியாது.இங்கேயும் கேள்விகளா வந்து குவியும் :P

said...

நிலா...

நெம்ப டேங்ஸ்....ஹி..ஹி...

ஆமா, என் கேள்விக்கு நீங்க பதிலே சொல்லலையே...திரும்பவும் கேக்றேன்.

(நாயகன் பாணியில் படிக்கவும்!)

நீங்க சின்னவரா, பெரியவரா?

said...

நான் சின்னவ ரெண்டு வயசு. என் டைப்பிஸ்ட்(எங்கப்பா) பெரியவர். 32 வயசு.

இப்ப ஓகேவா மாமா?

said...

வந்துருச்சுய்யா வந்துருச்சு..

எங்க இன்னும் இந்தப் பதிவு வரலையேன்னு நினச்சுட்டு இருந்தேன்...

said...
This comment has been removed by the author.
said...

மூணாம் க்ளாஸ் பாஸானத்துக்கு வாழ்த்துக்கள்! ;)