அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, June 17, 2008

ஒலக நாயகன் கவனத்திற்கு....

வலையுலகில் ஒரு வழியாக தசாவதார அலை ஓய்ந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த பதிவினை எழுதுகிறேன். ஒலக நாயகனை விட விஜய்.டி.ராசேந்தர் ஒரு விஷயத்தில் உயர்வானவராக தெரிகிறார். டி.ஆர் தன் சொந்த காசில் நம்மை இம்சிக்கிறார், ஒலக நாயகனோ ஊரான் காசில் தானும் இம்சைப்பட்டு எல்லாரையும் இம்சித்திருக்கிறார்.

ஆளாளுக்கு உலகத்தரம், உல்கத்தரம்னு சொல்றாங்க...என் வரையில் உலகத்தரமான தமிழ்படம்னா பருத்தி வீரனைச் சொல்வேன்...அதுதான் உலகத்தரம்..அதாவது உயர்வான தரம்.கோடி கோடியாய் செலவழிப்பதாலயே ஒரு படம் உலகத்தரமானதாகி விடாது என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.

உள்ளூர் தயாரிப்பாளர்களை போண்டியாக்கிவிட்ட ஒலக நாயகன் தனது அடுத்தடுத்த பரிசோதனைகளுக்காக இப்போது வால்ட் டிஸ்னி மாதிரியான உலகத்தர படாதிபதிகளுக்கு படம் காட்ட துவங்க்யிருக்கிறார்.பாவம் அவர்களாவது இந்த கலைஞானி(?)யிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்பதே என்னுடைய கவலை.

ஒருவேளை அப்படி யாராவது இளிச்சவாய் ப்ரொட்யூசர்கள் கிடைத்தால் கமலஹாசன் பின் வரும் சாதனைகளையும் முயற்சித்து, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு(!) கொண்டு செல்ல என் வாழ்த்துகள்.

1913ல் வெளியான Sixty Years a Queen என்ற படத்தில் Rolf Leslie, 27 வேடங்களில் நடித்திருக்கிறார்.

1929ல் வெளியான Only me என்ற படத்தில் Lupino Lane, 24 வேடத்தில் நடித்திருக்கிறார்.

1915 வெளியான Birth of a Nation என்ற படத்தில் Joseph Henabery 13 வேடங்களில் நடித்திருக்கிறார்

1965 ல் வெளியான Pas question le samedi என்ற படத்தில் Robert Hirsch 12 வேடங்களில் நடித்திருக்கிறார்.

எது எப்படியோ தனது தசாவதாரத்தின் மூலம் நமது நடிகர் திலகத்தின் அருமை பெருமையை மேலும் நம்மை உணரச்செய்த பெருமை கமலுக்கு மட்டுமே உரித்தானதாகி விட்டது.

26 comments:

said...

பதிவு போட்டு இம்புட்டு நேரம் ஆச்சு...ஒரு கமெண்ட் கூட வரலை...

ஹம்ம்ம்ம்ம்....

சரி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இது மொதலாவது பின்னூட்டம்.

ஹி..ஹி..ம்ம்ம்ம்

said...

ஓ!!! இவ்வளோ பேரு இப்படி நடிச்சி இருக்காங்களா? அப்புறம் என்ன டைட்டில ஃபர்ஸ்ட் டைம்ன்னு போடுறாங்கோ?

said...

சரவணக குமரன்...(எம்பூட்டு அழகான பேர்...)

நம்ப ஜென்ரல் நாலேட்ஜ் மேல அவய்ங்களுக்கு அம்பூட்டு நம்பிக்கை...அதான் தயிரியமா டைட்டில் போட்ராங்கோ...

said...

ஹிஹி.. ஒலகத்திலேயே முதல் முதலா அப்படீன்னு சொல்றதை ஏழெட்டு முட்டா பயலுங்களாவது (பாதி வார்த்தை பிரயோகம் நன்றி : லக்கி லுக்) நம்புவாங்கன்னு தான்!

said...

அவ்வ்வ்... இம்புட்டு சேதிய எப்பிடி சேகரிச்சீங்க?? :)

said...

Ivalo brain use panni reasearch panni,..padathai kevalapaduthuna neenga,..konjam common sense use panni,..padatha purinchukka try pannirukalaam.... Japan la avan panna,..america la ivan pannan...appadinnu nammala naame kevala paduthuvatha niruthittu,..namma ooru kaaran,oruthaan,..ivalo thooram ulachurukaanu nenainga,..Naadu urupadum.....

said...

மாயவரத்தான்...

மொதவாட்டி நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க....காலங்காலமா இந்த பசங்க மக்களை இப்படித்தான் நினைச்சிட்டு படங்காட்டீட்டு இருக்காய்ங்க...

said...

இராம்...

இந்த மேட்டரெல்லாம் அப்படி இப்படீன்னு நெட்ல சுட்டதுதான்...

said...

கார்த்திக்...

ஏன் இத்தனை ஃபீலிங்க்ஸ்,பருத்தி வீரன் உலகத்தரம்னு சொல்லீருக்கேனே...நடிகர் திலகத்தோட அருமைய சொல்லீருக்கேனே...எங்கே நம்ப ஆளுங்கள கேவலப்படுத்தினேன்.

நீங்க நவராத்திரி படம் பார்த்திருந்தீங்கன்னா...என்னோட வருத்தம் புரிஞ்சிருக்கும்.

திரு.கமலஹாசன் நடித்த முந்தைய படங்களின் தயாரிப்பாளர்கள் பலபேரின் நிலமை உங்களுக்கு தெரியுமா?...சினிமா என்பது தொழில் பாஸ்,பரிசோதனைக் கூடமில்லை.

said...

அருமையான பதிவு.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும், 2 வருடமாக ‘உலகத்தரத்தில்' கமல் படம் எடுக்கிறார் என்றதும் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ‘உலஹ நாயகனே' பாடலைக்கேட்டதும் எல்லாம் பொடிப்பொடியானது! இதுவும் கமல் style சிவாஜி யாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். உங்கள் பதிவை படித்ததும் அது உண்மையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
இன்னொரு விடயம் படித்ததும் நியாபகம் வ்ருகிறது. ஜாக்கிசானிடம் படத்தைப்பற்றியும், கமலின் 10 வேடத்தைப்பற்றியும் குறிப்பிட்டபோது.. அவர், “ஏன் உங்கள் ஊரில் நடிகர்களுக்குப் பஞ்சமா? ஏன் எல்லா வேடத்தையும் ஒருத்தரே செய்யவேண்டும்?” என்று கேட்டாராம்!
நம்ம ஆட்கள் “James Bond”, "Iron Man" "Spider Man" போன்ற hollywood படங்களைப் பார்த்துவிட்டு, அவைகளத்தான் உலகத்தரம் என்று நினைக்கிறார்கள்.. இந்த graphics குப்பைகளெல்லாம் அங்கே குழந்தைகளை கவர்வதற்காக எடுத்தப் படங்கள்.
உலகத்தரமான படங்களென்றால் என்னைப்பொருத்தவரை.. அன்னாட்டு மக்களின் உணர்வுகளயும், சிறு சிறு அவர்களுக்கே உரிய அனுபவங்களயும் பார்ப்பவர்களின் மனதை குறைந்தபட்சம் ஒரு 3 நாட்களுக்காவது அப்படத்தைப்பற்றி நினைக்கும் வண்ணம் இருக்கவேண்டும். இதற்கு graphics குப்பயோ 10 வேடஙளோ தேவையில்லை. உதாரணம் “Chidren of Heaven” போன்ற ஈரானியப் படங்கள்.
பருத்தி வீரனும், எத்தனை பேர் பார்தார்களோ, 2001 ல் வெளிவந்த “குட்டி” படமும் உலகத்தரம் வாய்ந்தது.

புஷ் வேஷம் போடரது உலகதரமா?? புஷ்-ஷே ஒரு மஹா காமடியன். கமல் ஏதோ ஹாலிவுட் லெவலுக்கு போயிருகார்.. இல்லையா பின்ன Will Ferrel போன்ற ஹாலிவுட்ல இருக்கற சூப்பர் ஷ்டார்களுக்கு போட்டியா புஷ் வேஷம் போட்டு பொளந்து கட்டறாரே..

said...

சினிமா வா?...அப்படின்னா?...:-))

said...

Come on. Give the man a little credit.

There are a lot of people who have not seen anything outside their own home, some have not seen anything outside their village, some a collection of villages, some have not gone out of state, some not gone out of country. for them 'Ulagam' is where they live and what they know.

There is no denying Kamal's capabilities as a world class actor. He has proved it in other films. This one is just to give the dying art of rubber mask making some recognition. (also for the dying trade of 'face gum')

said...

/
பதிவு போட்டு இம்புட்டு நேரம் ஆச்சு...ஒரு கமெண்ட் கூட வரலை...

ஹம்ம்ம்ம்ம்....

சரி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இது மொதலாவது பின்னூட்டம்.

ஹி..ஹி..ம்ம்ம்ம்
/

ithu super

:)))

said...

//ஓ!!! இவ்வளோ பேரு இப்படி நடிச்சி இருக்காங்களா? அப்புறம் என்ன டைட்டில ஃபர்ஸ்ட் டைம்ன்னு போடுறாங்கோ? //



சிலர் ஒன்பது வேசத்துல நடிச்சிருக்கலாம். சிலர் பன்னெண்டு வேசத்துல நடிச்சிருக்கலாம். ஆனா யாரும் பத்து வேசத்தில நடிக்கலையேய்யா! ஒலகத்துல மொதவாட்டி பத்து வேசத்தில நடிச்சது யாரு? எங்காளுதான? அதான் இத்தன பெருமை, வெளம்பரம்.

said...

மங்களூர் சிவா ,மாயவரத்தான் போன்றவர்களுக்கு படத்தில் வசூல் நிலவரம் நிச்சயம் வயித்தெரிச்சலை கொடுத்திருக்கும் போலிருக்கு.

மகாநதி மாதிரி படம் எடுத்தா பார்க்கமாட்டீங்க.. கமல் படம் ஓடாதுண்ணு நக்கல் வேற ..இப்போ படத்துல அது நொள்ளை இது நொள்ளைன்னு .. இணையத்துல நாலஞ்சு பேரு கூவி உலகம் விடிஞ்சுடாது ..வசூல் சாதனையை நோக்கி தசாவதாரம் .. கமல் பட வசூல் பத்தி பேசுறவங்களுக்கு வச்சாருல்ல ஆப்பு நம்மவர்.

said...

மலேசியாவில் இரண்டு நாள் வசூல் அமெரிக்க டாலர் $601,037.
http://www.boxofficemojo.com/intl/malaysia/?yr=2008&wk=24&p=.htm

said...

சரியாச் சொன்னீங்க சூர்யா...

மங்கை..ஒரு டைரக்டரே இப்படி சொன்னா எப்படி?

said...

சிரில்..

கமலை குத்திக் காட்டுவதோ, நொட்டை செய்வதோ என் நோக்கமில்லை.

தனது பரிசோதனைகளை தன் சொந்த காசில் செய்து கொள்ளலாம்...உலக நாயகனே என தன்னைத்தானே புகழ்ந்து படமெடுத்துவிட்டு, அதனை உலகத்தரமென கூசாமல் சொல்லும் மலிவான வியாபாரத்தை ஒரு நுகர்வோரின் பார்வையில் இருந்து விமர்சிக்கிறேன் அவ்வளவே...

வர்த்தக ரீதியாக தன்னை நம்பி பணம் போடும் முதலீட்டாளனுக்கு கமல் என்ற தொழில்நுட்ப கலைஞர் இதுவரை எத்தனை லாபத்தினை வாரிக்கொடுத்திருக்கிறார் என்பதற்கான பதிலை நேர்மையாக யோசித்துப் பாருங்கள்.

said...

இரண்டாம் சொக்கன்,
நீங்களும் ஒரு வயித்தெரிச்சல் மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டால் பலன் இருக்கும் போல தெரிகிறது.

said...

//தனது பரிசோதனைகளை தன் சொந்த காசில் செய்து கொள்ளலாம்//

ஹேராம்ம் ,தேவர் மகன் ,குருதிபுனல் ,ராஜபார்வை சொந்த காசில எடுத்த போது நீர் போய் உதவி செய்தீரா என்ன?

ஆஸ்கார் ரவிச்சந்திரன் உம்ம கிட்ட வந்து புலம்பின மாதிரி :huh:

அடுத்த படம் மர்மயோகி சொந்த காசில தான் எடுக்குறார் ..வேணும்னா நீர் பார்க்காம இரும்.

said...

ஜோ..

நீங்கள் இத்தனை வருத்தப்படுவதால் சொல்கிறேன்...சென்னையில் ஆறு திரையரங்குகளை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நடத்திவரும் குடும்பப் பின்னனி உடையவன் நான்...

நீங்கள் சொல்லும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் முதல் கமலஹாசன் வரை நேரில் பேசிப்பழகும் வாய்ப்பு பெற்றவன்....

இதுவரை கமலஹாசன் அவர்களின் எந்தவொரு ரிலீஸையும் நாங்கள் தவறவிட்டதில்லை....தசாவதாரம் எங்களுடைய திரையரங்களில் ரிலீஸ் செய்திருக்கிறோம்....

இப்போது சொல்லுங்கள், இந்தப் பதிவினை எழுதிட எனக்கு அதிக விவரங்கள் தெரிந்திருக்கும்தானே...

said...

இரண்டாம் சொக்கன்,
விவரங்களுக்கு நன்றி!உங்களுக்கு குறை சொல்ல தகுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.

ஆனால் கமல்ஹாசன் தனது சொந்த காசில் பரிசோதனைகள் செய்யாதது போல நீங்கள் பேசுவது தான் வருத்தத்துக்கு காரணம்.

சொந்த காசில் அருமையான படங்கள் எடுத்து அவரும் நஷ்டப்பட்டிருக்கிறார் .

அடுத்தவர் காசில் எடுத்த படங்கள் சில தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கலாம் .அதற்கு கமலை குறை சொல்லும் நீங்கள் ,அவரை வைத்து படம் எடுத்து லாபம் சம்பாதித்த எத்தனையோ பேரை பற்றி மட்டும் மறப்பதேன் ? அதில் கமலுக்கு பங்கு இல்லையா?

நல்ல படங்கள் எடுத்தால் ஓடவில்லையென்றால் அதற்கும் கமலை குறையும் ,கிண்டலும் செய்கிறீர்கள் ? நேற்று முளைத்த காளான்களோடெல்லாம் ஒப்பிட்டு அவரின் வியாபார சக்தியை கேலி பேசுகிறீர்கள் ..ஆனால் இப்போது வியாபார ரீதியாக வெற்றி கொடுத்தால் ,படம் சரியில்லை ..மஹாநதி மாதிரில்லை-ன்னு அறிவுஜீவித்தனமாக பேசுகிறீர்கள் .

அவர் என்ன தான் செய்வார்?

said...

இரண்டாம் சொக்கன்,
நடிகர் திலகம் பற்றி சொன்னதற்கும் மகிழ்ச்சி .நடிகர் திலகத்தை யாரோடும் ஒப்பிட முடியாது .அவர் பிறவி நடிகன் .அவருக்கு ஈடு இணை கிடையாது.

said...

/
ஜோ / Joe said...
மங்களூர் சிவா ,மாயவரத்தான் போன்றவர்களுக்கு படத்தில் வசூல் நிலவரம் நிச்சயம் வயித்தெரிச்சலை கொடுத்திருக்கும் போலிருக்கு.
/

யோவ் ஜோ எத வெச்சுய்யா சொல்லுறீங்க!?!?
படம் நல்லா இல்லைனு சொன்னேனே தவிர வசூல் பத்தி எங்க நான் பேசினேன் ????

அந்த வசூல்ல நான் மொதல்நாள் படம்பாத்த காசும் சேத்துதான் அத தெரிஞ்சிக்க மொதல்ல.

said...

//தசாவதாரம் எங்களுடைய திரையரங்களில் ரிலீஸ் செய்திருக்கிறோம்....//

இரண்டாம் சொக்கன்,
உங்க தியேட்டர்ல தசாவதாரம் போட்டதுல எவ்வளவு நஷ்டம் ஆயிருக்கும் ..ஊரெல்லாம் சூப்பர் ஹிட்..உங்க தியேட்டர்ல மட்டும் எப்படி ஊத்திகிச்சு-ன்னு அறிய ஆவல்.

said...

ஏனுங்க.. எல்லாரும் பாராட்டும் ஒரு விஷயத்தை தரக்குறைவா பேசுவது தான் வித்தியாசம்ன்னு நீங்க நினைச்சிட்டு இருந்தீங்கன்னா.. sorry you are wrong.. நீங்க சொன்ன நவராத்திரி படத்தில நடிகர் திலகம் 9 வேடங்கள் செய்திருப்பார்.. ஆனா, அந்த 9 வேடங்களும் கடைசி காட்சித் தவிர வேறு எங்கேயும் ஒன்னா வராது.. மைமகாமராஜன் படத்துலயே 4 வேடங்களும் ஒன்றாக வருவது போலவும், 4 வேடங்களுக்கும் பெருத்த வித்தியாசத்தையும் காட்டியவர் கமல்.. ”உலக நாயகன்” என்று சொல்லவேண்டாம் கமலஹாசன் என்று சொல்லக்கூட மனமில்லாமல் “ஒலக நாயகன்” என்று சொல்லும் உங்களின் பாரபட்சமில்லாத் தன்மையை என்ன வென்று மெட்சுவது??