அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Saturday, December 1, 2007

நேற்றைய புலம்பல்கள்....

நம்ம தமிழ்நதி வலைச்சரத்தில் அவரை கவர்ந்த கவிதைகளையும், கவிதையாளர்களையும் வரிசை கட்டியிருந்தார்.....என்ன வழக்கம் போல நம்ம பேர் லிஸ்ட்ல இல்லை(ரொம்ப நெனப்புதான்...ஹி..ஹி..)

இருந்தாலும் நாம ஒரு முன்னாள் கவிதையாளன்(என்ன கொடுமையிது...) என்பதை நிரூபிக்க பல வருடங்களுக்கு முன்னால நாம கடைசியா எழுதின கவிதைய சபையில வைக்கிறேன்....

இது கற்பனையா எழுதுனதுனெல்லாம் கப்ஸா விடமாட்டேன்....அனுபவிச்சி ஃபீலிங்க்ஸோட எளுதினதாக்கும்....

"படிச்சிட்டு அவ அழுத கண்ணீர் இன்னமும் ஈரமாய் எனக்குள்....ம்ம்ம்ம்"

ஒரு காலத்தில் நாமளும் கவிதையெல்லாம் எழுதியிருக்கோம்னு நினைச்சா ஆச்சர்யமாத்தான் இருக்கு....

எப்படியிருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க.....






பூவே என்னை தள்ளாதிரு...


..........ம்ம்ம்ம்ம்ம்

சூழ்நிலையால விலகினோமா

இல்லை

வசதிக்காக விலகினோமா

காரணிகள்(factors) காரணமாயிரம் சொல்லலாம்

கொஞ்சம் தளர்ந்துதான் போய்விட்டோம்

இதுவரை இப்படி இருந்ததில்லையே

ஏன் விலகினோம் உயிரே....

மீண்டும் மிருகவேஷம் போட்டு

பரபரப்பாய் திரிகிறேன்

யாரை ஏமாற்றுகிறேன் தெரியவில்லை.....

உணர்வுகளை தள்ளி வைக்கலாம்

உயிரை தள்ளி வைக்கமுடியுமா

வைத்திருக்கிறேனே.....

எப்படி இதெல்லாம் எனக்கு மட்டும்
சாத்தியமாகிறது.....

நீ கேட்ட போதெல்லாம்

வராத கவிதை இப்போது
மட்டும் எப்படி சரளமாய்...

காதலில் தோற்றுவிட்டேனோ

ம்ம்ம்ம்ம்ம்........

4 comments:

said...

ஒத்துக்குறோம் நீங்களும் ஒரு கவிஞர் தான்னு.. கடையியா எழுதினதுன்னா..
அப்ப இதுக்கு முன்னாடி எழுதினது எல்லாமும் போடுங்க...

said...

:-)))))))

said...

அட.. ;)

said...

//"படிச்சிட்டு அவ அழுத கண்ணீர் இன்னமும் ஈரமாய் எனக்குள்....ம்ம்ம்ம்"
//

ஹா ஹா ஹா... சாரி... மன்னிச்சிக்கோங்க... தப்பான பிலீங்ஸ், இல்ல... பதிவை வாசிச்சதும் சிரிப்பு வந்துருச்சி. அதான்... கவிதைய வாசிச்சிட்ட்ட் வர்றேன்...

வாசிச்சிட்டேன்... நல்லாயிருக்குது ராசாத்தி... நெம்ப நொந்து போயிட்டீங்க போல...

(நாளானதால நக்கல் பண்ணலாமில்ல?)
சொக்கரே...உண்மைய சொல்லுங்க... இந்த கவிதை படிச்சதும் தானே.. அவங்க பின்னங்கால் பிடறி அடிக்க ஓடுனாங்க.