அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, March 31, 2008

நான் ஒரு முட்டாளுங்க.....


ஏப்ரல் ஒன்ணும் நாணும்...

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காக பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....நான் ஒரு முட்டாள் என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்க முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

சக முட்டாள்களுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

அப்படியே என்னோட பேஃவரைட் பாட்ட கேட்ருங்க........

Tuesday, March 25, 2008

தமிழச்சி விவகாரமும், தமிழ்மண நிர்வாகியின் கருத்தும்?

தமிழச்சியின் பதிவுகள் தமிழ்மணத்தில் இருந்து விலக்கப்பட்டது குறித்து இருவேறு கருத்துக்கள் இருந்தாலும்...தமிழச்சியின் இந்த பதிவில் தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான திரு.சுந்தரமூர்த்தி என்பவரின் கருத்தாக இரண்டு பின்னூட்டங்கள் காணப்படுகின்றன.

இதை அவர்தான் எழுதினாரா என்பது தெரியவில்லை, ஏனெனில் அவரது பதிவில் சமீபத்தில் தான் யாருக்கும் பின்னூட்டமிடவில்லை என கூறியிருக்கிறார்.

தமிழ்மண நிர்வாகி - தமிழச்சி என்கிற தனிப்பட்ட மோதலில் தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கருத்து என்கிற போர்வையில் தேவையில்லாத பிற ப்ரச்சினைகள் எழ வாய்ப்பிருப்பதால் உடனடியாக தமிழ்மண நிர்வாகம் தங்களது நிலைப் பாட்டினை தெளிவாக்குதல் அவசியம் என நினைக்கிறேன்.....

தமிழச்சியும், தமிழ்மணமும்....எனது வேண்டுகோளும்.

தமிழச்சியின் பதிவுகளுக்கு இனி தமிழ்மணத்தில் இடமில்லையாம்....

அவரது பதிவினை தமிழ்மணத்தில் இருந்து விலக்குவதற்கான தார்மீக காரணங்கள் நிறையவே இருந்த சமயத்தில் வாளாவிருந்துவிட்டு இப்பொழுது, கடந்த சில நாட்களாய் தமிழ்மண நிர்வாகி ஒருவருடன் நடந்த எதிர்பாட்டுகளுக்காய் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்பது சொல்லாமல் புரியக்கூடிய உண்மை.

தமிழ்மணம் தனது சட்ட திட்டங்களுக்குள் வராத எவரையும் நீக்கலாமென்பதை யாரும் மறுக்கவில்லை....அதற்கு விளக்கம் தரவேண்டிய அவசியமும் இல்லைதான்....ஆனால் இத்தகைய தனிநபர் விருப்புவெறுப்புகளை முன்னிறுத்தி தனது செயல்களை நியாயப்படுத்துமானால் அது மிகவும் வருந்தத்தக்கது.

தமிழ்மணம் மீண்டும் தமிழச்சியின் பதிவுகளை திரட்டவேண்டும் என்பதே என்னுடைய எதிர்பாப்பும், வேண்டுகோளும்.....நிர்வாகம் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

Wednesday, March 19, 2008

மயங்கி...கிறங்கி...இழைந்து...குழைந்து....



இப்படித்தான் சொல்லவேண்டும்...இந்த பாடலை...சமீபத்தில் இப்படியாக மயங்கி,கிறங்கி...இழைந்து குழைய வைத்த பாடலை நான் கேட்டதில்லை.பாடலின் வெற்றியை இசையமைப்பாளரும், கவிஞரும், இயக்குனரும், நடிகர்களும் அநியாயத்திற்கு சமமாய் பகிர்ந்து கொள்கிறார்கள்....


ஹிந்தி தெரியாதவர்கள் நிச்சயமாய் கவித்துவமான இந்த பாடலின் ஜீவனை தவ்றவிட்டவர்கள் என்பது என்னுடைய கருத்து....ம்ம்ம்ம்ம்ம்

இந்த மொழிபெயர்ப்பு என்னுடையதில்லை...இனையத்தில் கிடைத்தது...இதில் பாடலின் அர்த்தம் முழுமையாக பெயர்க்கப்படவில்லை என்பது என்னுடைய கருத்து..ஆனால் நான் தேடியவரையில் கிடைத்த நல்ல மொழிபெயர்ப்பு.....

படித்துப்-பார்த்து-கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்....எப்படியிருக்கிறதென்று....

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai

It is said that this is a celebration of spring
but love is distressed to see...

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden, the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Saare sehmein nazaare hain
Soye soye waqt ke dhaare hain
Aur dil mein khoyi khoyi si baatein hain

The slow sleepy flow of time has
silenced much of the sorrow here
and many unsaid things are lost in the heart.

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden, the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Kaise kahein kya hai sitam
Sochte hain ab yeh hum
Koi kaise kahein woh hain ya nahi hamaare

How does one say what troubles them so.
I wonder this now
how does one actually tell you that they are not in love with you?

Karte to hain saath safar
Faasle hain phir bhi magar
Jaise milte nahi kisi dariya ke do kinaare

We journey through life together,
but there exists a distance between us
like that of the two banks of a river that never meet.

Pass hain phir bhi paas nahi
Humko yeh gham raas nahi
Seeshe ki ek diwar hai jaise darmiyaan

We are together, yet we are not.
This pain of separation is unacceptable to me.
There is, as it were, a wall of glass divides us.

Saare sehmein nazaare hain
Soye soye waqt ke dhaare hain
Aur dil mein khoyi khoyi si baatein hain

The slow sleepy flow of time has
quietened much of the sorrow here
and many unsaid things are lost in the heart.

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden, the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Hum ne jo tha naghma suna
Dil ne tha usko chuna
Yeh dastaan hamein waqt ne kaisi sunaai

The tune that I thought I would hear
was the song that my heart chose.
But what is this tune that fate has chosen for me to hear instead?

Hum jo agar hain gumgheen
Woh bhi udhar khush to nahi
Mulaquaato mein hai jaise ghul si gai tanhai

If it can be said that I am sad,
truth is she is not happy there either.
It is as if our encounters are blended with loneliness.

Milke bhi hum milte nahi
Khilke bhi gul khilte nahi
Aankhon mein hai baharein dil mein khiza

We meet but we do not unite
The flower blooms but doesn’t blossom.
When I look around I see that it is spring but there is an autumn in my heart.

Saare sehmein nazaare hain
Soye soye waqt ke dhaare hain
Aur dil mein khoyi khoyi si baatein hain

The slow sleepy flow of time has
quietened much of the sorrow here
and many unsaid things are lost in the heart.

Kehne ko Jashn-e-bahaara hai
Ishq yeh dekh ke hairaan hai
Phool se khushboo khafa khafa hai gulshan mein
Chhupa hai koi ranj fiza ki chilman mein

It is said that this is a celebration of spring
but love is distressed to see
that in the garden the fragrance is shying away from the flowers.
There is a hidden sorrow in the curtain of the happy air.

Monday, March 17, 2008

சித்தர்களும், பித்தர்களும்...1

சித்தர்களை பற்றி எழுதுவதாய் வாக்குக் கொடுத்தபின்னர்...எதிலிருந்து ஆரம்பிப்பது என்கிற குழப்பம் நிறையவே இருந்தது....இருக்கிறது. சித்தர்களின் உலகம் மிகவும் விஸ்தீரனமானது. அவர்களை பற்றி நாம் அறிந்ததும், தொகுத்ததும், பதிந்ததும் மிகக்குறைவே....இதனால் பல்வேறு கருத்தியல்களும், முரன்பாடுகளும்...தெளிவின்மையும் நிறையவே தேங்கிக் கிடக்கிறது.....பொதுவில் நான் நேர்மையாக உணர்ந்த விதயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...தவறிருப்பின் தயங்காமல் சுட்டிடுங்கள்...திருத்திக்கொள்கிறேன்.

சித்தம் என்கிற தமிழ் பதம் மனம் மற்றும் அது தொடர்பான பகுப்புகளை உள்ளடக்கியது என்றாலும், சித்தர்கள் தங்களின் சமகால வாழ்வியல் சூழல்களில் இருந்து விலகியவர்களாகவும், வேறுபட்டவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. பிறர் சாராத தேடலில் தாங்கள் கண்டுணர்ந்தவைகளை தங்களளவில் புடம்போட்டு புதிய பரிமாணங்களை உருவகித்துப் பார்த்தவர்கள். அவர்களுடை ஆன்மீக தேடல் நிச்சயமாய் ஆராதனைகளோடோ, வழிபாடுகளுடனோ சம்பந்தப்படவில்லை. தனிமையையும், நிலைத்திருத்தலையுமே அவர்கள் பிரதானமாய் கருதினர் எனலாம்.

சித்தர்களின் கூற்றுப்படி நமது உடலான ஐந்து நிலைகளை கொண்டது...அதாவது 1.பரு உடல், 2.வளி(உயிர்ப்பு) உடல், 3.மன உடல், 4.அறிவு உடல், 5.ஆன்ம உடல் ...இந்த ஐந்து நிலைகளை கடந்தவரே சித்தராய் ஆகமுடியும் என்றும், இந்த நிலை இறையோடு இறையாய் கலந்த உயர்ந்த நிலை என்றும் இந்த நிலைக்கு அழிவில்லை என்பதாக வலியுறுத்துகிறார்கள். அதாவது சித்தர்கள் அனைவரும் இன்றைக்கும் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர் என்று கூட கொள்ளலாம்.

சித்தர்களின் மரபு எங்கிருந்து துவங்குகிறது என பார்த்தோமானால், முதல் சித்தனாகிய சிவன் தனது இனையான சக்திக்கு குண்டலினி எனும் பிராணயாமத்தை கற்றுக்கொடுத்ததில் இருந்து துவங்குகிறது. சிவனின் நேரடி சீடர்களாய் அகத்தியர், நந்திதேவர், திருமூலர் ஆகிய மூவரைத்தான் சொல்கிறார்கள். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பதும் அதில் இருவர் தமிழகத்திலேயே சமாதியானதாகவும் தெரிகிறது. நந்திதேவர் காசியில் சமாதியானதாய் சொல்கிறார்கள்.

தமிழ் மரபியலில் சித்தர்கள் பதினெட்டு பேர் என்றும், வட இந்தியாவில் 84 பெயரை கூறுகின்றனர். தமிழ் நூலியலில் பதினெட்டு பேர் யார் என்பதில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றன...ஆளாளுக்கு ஒரு பட்டியலை நீட்டினாலும், பா.கமலகண்ணன் என்கிற ஆய்வாளர் இதுவரை ஒரு லட்சம் சித்தர்களின் பாடல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படி சித்தர்களின் எண்ணிக்கை 102 என புதிய தகவலை தருகிறார். மேலும் போகநாதர் எழுதிய 'போக்ர் ஏழாயிரம்' என்கிற நூலின் ஆறாவது காண்டத்தில் 696-953 வரையிலுள்ள பாடல்களில் 42 சித்தர்களை பற்றிய தகவல்கள தரப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

இந்த சித்தர்கள் ஒரே மாதிரியான கோட்பாடுகளை உடையவர்களா என பார்ப்போமெனில் ஆச்சர்யமான சில உண்மைகளை காணலாம்...திருமூலர் போன்றவர்களின் குரல் ஆன்மீக சைவக் குரலாகவும், சிவ வாக்கியர் மாதிரியானவர்கள் இதற்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களாகவும், பட்டினத்தார் போன்றவர்கள் ஆனாதிக்கத்தின் பிம்பமாயும், சிலர் தலித்திய் சிந்தனைக்காரகளாகவும்...ஏன் இடதுசாரி கருத்துக்களை உடையவர்களாகவும் பகுக்க முடியும்....

பொதுவில்....அகங்காரத்தில் இருந்து விடுதலை, தன்னை அறிதல், அதிகாரங்கள், அதிகார மைய்யங்களுக்கு எதிரான போக்கு அல்லது ஆதிக்க எதிர்ப்பு, எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகி தனித்திருத்தல், சடங்குகளை எதிர்ப்பது, வழிபாடுகளை புறக்கணித்தல், தனித்துவமான மருத்துவம், யோகக்கலை போன்றவைகளைன் அடையாளமாகவே சித்தர்களை பார்க்க முடிகிறது....

மேலும் விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்வோம்....

Friday, March 14, 2008

அம்பாஸ்டர் காரு நாலு கோடி ரூவாயாம்..!



பூனாவை சேர்ந்த பிரபல கார் டிசைனர் தீலீப் சபாரியா வடிவமைத்த இந்த அம்பாஸிடர் காரின் விலை நாலு கோடியாம்....ஏகப்பட்ட வசதிகளுடன் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறாராம்....

ம்ம்ம்ம்....என்னைக்கு என்னோட டிசைனர் காரும் இப்படி சுத்தப் போகுதோ....சுத்த வைக்கானும்...ம்ம்ம்ம்ம்

Thursday, March 6, 2008

பறக்கும் சித்தரும், நான் பார்த்த சித்தரும்....

நேற்றைய பதிவுகள் இரண்டும் தமிழச்சியின் புண்ணியத்தால் களை கட்டியது, அத்தனை நெருக்கமில்லாதவங்க, அல்லது அறிமுகமில்லாதவங்கன்னா நன்றியெல்லாம் சொல்லலாம், தமிழச்சி அப்படியா....

டாப்லெஸ் சித்தர் ஒருவர் திருவண்ணாமலையில் பறந்து போன சம்பவத்தை வைத்து ஆயிரக்கணக்கில் தியரிகளை உருவாக்குவார்கள், கருத்து கந்தசாமிகள் ஊடகங்களில் கதை விடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன்.புஸ்ஸ்ஸென போனதில் எனக்கு வருத்தமே....பரவாயில்லை என் பங்கிற்கு நானும் கொஞ்சம் கதை சொல்கிறேன்.

இம்மாதிரி பறப்பதெல்லாம் சாத்தியமே....மந்திர, தந்திர பிரிவுகளில் தனித்தனி உபாயங்களை சொல்லியிருக்கிறார்கள்.. மந்திர முறையில் நிறைய மூச்சு பயிற்சியும், கொஞ்சம் மந்திரங்களும் இருந்தால் போதும். தந்திர முறையில் குழப்பமான ஒரு ரெசிப்பி சொல்லியிருக்கிறார்கள். அதை தயார் செய்வதற்குள் உங்கள் தாவு தீர்ந்து டவுசர் கிழிந்து போவது உறுதி.

சாம்ப்பிளுக்கு ரெண்டு மூனு வரி.....உயிருள்ள பச்சை தவளையின் மூளையை அம்மாவாசை நாளில் மண்சட்டியில் போட்டு ஒரு மண்டலம் வெயிலில் காயவைத்து அத்துடன்.........குமட்டிக் கொண்டு வருகிறதா...இந்த பறக்கும் ரகசியம் முழுமையாக வேண்டுமானால் தலைக்கு பத்து டாலருடன் தனி மெயில் செய்யலாம். பறப்பதும், பரலோகம் போவதும் உங்கள் சாய்ஸ்....

நிஜத்தில் நம்மிடையே இம்மாதிரியான ஆசாமிகள் நிறைய உலவுகிறார்களாம்,தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத அவர்களை கண்டுபிடிப்பதற்கு தனி திறமை வேண்டுமாம், மதுரையில் விஜயராகவன் என்கிற ஒருவரை ஒரு இஸ்லாமிய நண்பர் மூலம் சந்தித்தேன்....அவரின் வீட்டில் கொடிய வறுமை, ஆனால் யாரிடமும் கைநீட்டி காசு வாங்கமாட்டார்.அவரின் பேச்சும் செயலும் கடைசி வரை மர்மமாகவே இருந்தது. பத்து சூரியன் இருப்பதாகவும், அதில் எட்டு சூரியன் பார்த்துவிட்டேன் என்பார்.

நாம் நினைப்பதை மடமடவென சொல்லிவிட்டு சிரிப்பார், அவருக்கு போன் பண்ணனுமா ஏன் உங்க காச செலவு பண்றீங்க அவரயையே கூப்டசொல்றேன் என்பார், சற்று நேரத்தில் சம்பந்தப்பட்டவர் நம்மை கைபேசியில் அழைத்து, ஆச்சர்யப்படுத்துவார்...நினைத்த மாத்திரத்தில் தன்னால் எங்கேயும் போகமுடியும் என்றும், எங்கே என்ன நடக்கிறது என்பதை உட்கார்ந்த இடத்திலிருந்தே சொல்லியும் பல சமயங்களில் ஆச்சர்ய படுத்தியிருக்கிறார்.

மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு ஹோட்டல் கட்ட ஆரம்பித்தார்கள்(பெயர் வேண்டாமே!), வேலை ஆரம்பித்த முதல் நாளில் அந்த இடத்தின் உரிமையாளர் இறந்து போக, அதை இன்னொருவர் வாங்கி வேலை ஆரம்பிக்க அவர் மகன் இறந்து போக...பதறிப் போய் இன்னொருவரிடம் விறக்...புதியவர் வேலை ஆரம்பிக்க பள்ளம் தோண்டிய கூலித்தொழிலாளி ரத்தம் கக்கி செத்து போக....கொஞ்ச நாட்களுக்கு பின்னர் ஒரு இஸ்லாமியர் தைரியமாய் அந்த இடத்தை சல்லிசாக வாங்கினார்.....சில நாட்களில் அவரின் தாயார் மரணித்துப் போக.....இந்த சமயத்தில்தான் என் நண்பர் விஜயராகவனிடம் அதை சொன்னார்.அந்த இடத்திற்கு என்னை கூட்டிப்போ எனறார்.

எதை தின்னால் பித்தம் தெளியும் என்றிருந்த இடத்துக்காரர் வண்டியணுப்பி கூட்டிப்போனார். இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது....வெறும் காலுடன் அந்த காலி மனையை சுற்றி சுற்றி வந்தவர்...எனக்கு கொஞ்சம் கல் வேண்டும் என்றார். கற்களை அந்த மனையில் ஐந்தாறு இடத்தில் போட்டார்.....பின்னர் உரிமையாளரிடம் வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டி வந்து இரவு பதினோரு மணிக்கு மேல் இந்த இடத்தை தோண்டு, எலும்புக்கூடுகள் கிடைக்கும் அதை சுடுகாட்டில் வைத்து எரித்துவிடு என சொல்லி விட்டு போய்விட்டார்.

சொன்ன மாதிரியே வெளியூர் ஆட்கள் குறிப்பிட்ட இடங்களை தோண்ட குவியல் குவியலாய் எலும்புக்கூடுகள்....அதை அவர் சொன்ன மாதிரி செய்தபின்னர்...எந்த கெடுதலும் இல்லை.இன்றைக்கு அந்த இடத்தில் ஒரு லாட்ஜ் இருக்கிறது....இதற்காக அந்த மனிதர் காசு எதுவும் வாங்கவில்லையென பின்னர் கேள்விபட்டேன்.புரியாத மறைமொழிகளில் ஏதாவது பிதற்றிக் கொண்டிருப்பார்.உங்களுக்கு புலனாகாத உலகம் ஒன்று உங்களுடனே இருக்கிறது.....நீங்கள் கட்டிறுக்கியதால் கட்டுடைத்த உலகம் அது என்பார்.....

என்னாங்கடா ஓவரா படம் காட்றீங்கன்னு மனதில் நினைத்த கணத்தில்....நீ குருவின் அம்சம், உனக்கு அப்படித்தான் தோன்றும் தப்பில்லை என்பார். திடீரென ஒரு நாள் என் இடத்துக்கு வந்தவர், ஒரு பேப்பர் குடு என வாங்கி...சர சரவென கட்டங்கள் வரைந்தார். அதில் என்னென்னவோ கிறுக்கினார். இதை பத்திரமாய் உன் பர்ஸில் வைத்துக் கொள், இந்த காகிதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதே...அடுத்த பதினோரு மாதத்தில் உனக்கு ஒரு பெரிய ஆக்ஸிடண்ட் காத்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டாயானல் பிழைத்தாய், நிறைய தர்மம் செய் அப்புறம் உன் பாடு என சொல்லிவிட்டு விடுவிடுவென போய்விட்டார். இன்றைக்கும் அந்த காகிதம் என் பர்ஸில்....

நீங்கள் சித்தரா என கேட்டால் சிரிப்பார்....நான் வழிப்போக்கன்...கொஞ்ச நாள் உன்னுடன் வருவேன், உன் பேரனும் கூட என் வழியில் வருவானாய் இருக்கும்...யார் கண்டது என சொல்லி சிரிப்பார்.இன்னமும் நிறைய எழுதலாம் இந்த மனிதரை பற்றி.....பிரிதொரு சமயத்தில் விலாவாரியாய் இந்த மனிதரை பிரித்து மேய்வோம்.....

இதே மாதிரி இன்னொரு மனிதரையும் சந்தித்திருக்கிறேன்...நான் பொதுவில் கவனித்த விசயம், இவர்கள் யாருடனும் இணங்கியிருப்பதில்லை, பரிசோதனைகளில் நாட்டமிருப்பவர்களாய் இருக்கிறார்கள். எளிதில் யாரையும் தங்கள் அன்மையில் நெருங்கவிடுவதில்லை....ஒரு விதமான தாழ்வு மனபான்மையுடையவர்களாய் இருக்கிறார்கள். குரு வழிபாட்டினை மிகத்தீவிரமாய் அனுசரிக்கின்றனர்.

(இதை படிக்கிற கணத்தில் உங்களுக்கு பிடித்த மணம் உங்களை சூழும் பட்சத்தில் நீங்கள் என்னையும் ஒரு சித்தராக நினைத்துக் கொள்ளலாம். இரண்டாம் சொக்கன்ற பேர் உங்களுக்கு பிடிக்கலை, வேற எதுனா பேர் வைக்கனும்னு தோணினா போலி சித்தர்...னு வச்சுக்கோங்க....ஹி..ஹி...)

Wednesday, March 5, 2008

*வயதுக்கு வராதவர்கள் இதை படிக்கவேண்டாம்....

பதிவெழுதி நாளாகிவிட்டது....ஆனால் தினமும் பதிவெழுதும் ஒரே பதிவரும் நானாகத்தான் இருப்பேன்.

என்ன கொடுமையிது சரவணா....

புரியாதவர்கள் மெனக்கெடாமல் தொடர்ந்து படியுங்கள். சுஜாதா போய்விட்டார், போனால் என்ன?, நானிருக்கிறேன் கவலைபடாதீர்கள் என யாராவது சொல்வார்கள் என பார்த்தேன்....ஒப்பாரி வைத்தவர்களையும், சவ ஊர்வலத்தில் டான்சாடியவர்களையும்தான் பார்க்க முடிந்தது.

நான் இருக்கிறேன் கவலைபடாதீர்கள்....

கடந்த சில நாட்களாய் பலான வார்த்தைகளை வைத்து தலைப்புகள் செய்வதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மதுரைபக்கம் புழங்கும் அத்தனை கெட்டவார்த்தைகளும் அத்துபடியாகையால் அதை வைத்து சில தலைப்புகளை யோசித்தேன். அதையெல்லாம் இங்கே சொன்னால் ஆபாசமே உன் பெயர்தான் இரண்டாம் சொக்கனாவென கொதித்தெழுவதைப் போல நடிப்பீர்கள்.தேவையா அதெல்லாம்....

தமிழச்சியின் பெயர் *****...வாம், வித்தியாசமான பெயர், விடாது கருப்பின் பதிவில்தான் இதை தெரிந்து கொண்டேன்.விடாது கருப்பாக காட்டபடும் சதிஷ் என்பவர் அப்பாவியாம், பின்னனியில் போலி டோண்டுதான் எழுதுகிறாராம்....இப்போது அவரின் பெயரை சுருக்கி செல்லமாய் 'போடோ' என்று எழுதுகிறார்கள்.இதன் மூலம் பெரியவர் டோண்டுவின் கோபத்திற்கு ஆளாகவேண்டாம் என சம்பந்தபட்டவர்களை எச்சரிக்கிறேன்.

ஒருவரின் எழுத்து நடையை திருடிக் கொள்ள முடியுமானால் இரண்டு பெண் பதிவர்களின் நடையை தைரியமாய் திருட ஆசையாய் இருக்கிறது, ஒருவர் இப்போது தமிழில் பதிவே எழுதுவதில்லை, மற்றவர் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார். யார் என தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம். சரியாய் சொல்பவர் கனவில் நமீதாவை வர வைக்கவேண்டியது என் பொறுப்பு. சரியாய் சொல்லும் பெண் பதிவர்களின் கனவில் யாரை வரவைக்கலாம்....இதை முடிவு செய்யும் பொறுப்பை சர்வேசன் கையில் கொடுத்துவிடலாம். போட்டிகளுக்கு தலைப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் மனிதர்.

எனக்கென்னவோ அடுத்த இந்திய பிரதமராக சந்திரபாபு நாயுடுதான் வருவார் என தோன்றுகிறது. காங்கிரஸும், அ.தி.மு.க வும் வேண்டா வெறுப்பாய் வெளியில் இருந்து ஆதரவு தரும். வழக்கம் போல கலைஞரின் ஆட்கள் மத்திய மந்திரியாய் தொடருவார்கள்....ஈழச் சகோதரகளுக்காக கலைஞர் தொடர்ந்து கவிதை எழுதுவார். நெடுமாறனும், வைக்கோவும் தங்கள் உடல் நலத்தினை பேணும் பொருட்டு நடைபயணம், உண்ணாவிரதமென உதார் விட்டுக் கொண்டிருப்பர்கள் என்றே தோன்றுகிறது.

இந்தியாவின் தயவில்லாமல் இலங்கை பிரச்சினையை தீர்த்துவிட முடியாது என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொண்ட அளவிற்கு புலிகள் உணரவில்லையோவென அவ்வப்போது தோன்றுகிறது. மகிந்த ராஜபக்ஷே இந்திய நடுவன் அரசிற்கு நன்றாக குல்லா போட்டு ராணுவ அனுகூலங்களை அள்ளிக் கொண்டு போகிறார். புலிகள் இன்னமும் வைக்கோ, நெடுமாறன்...இப்போது புதிதாய் முளைத்திருக்கும் திருமா,போன்ற மண் குதிரைகளை வைத்துக் கொண்டு என்ன செய்துவிடப் போகிறார்கள் என தெரியவில்லை.

சிதம்பரம் கோவில் பூசாரிகளை இந்திய மல்யுத்த அணியில் சேர்த்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பலாம், நன்றாய் குஸ்தி போடுவார்கள்,தில்லையம்பலத்தான் அருளால் மெடல் வாங்கினால் எல்லாருக்கும் பெருமைதானே,

ஜோதா அக்பர் படத்தினை கையில் வைத்துக்கொண்டு பார்க்க நேரம் கிடைக்காமல் நாலைந்து நாளாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன். என்ன வாழ்க்கையிது....

இனி இந்த மாதிரி இலக்கில்லாமல் எழுத நினைத்திருக்கிறேன்....ஆதரவு குடுக்காதீங்க!

*இந்த மாதிரி தலைப்பு வச்சாத்தான் இங்க குப்பை கொட்ட முடியும்னு தோணினதால...

வாசக்கதவ டாலர்லட்சுமி தட்டுகிற நேரமிது...!

தமிழ் பதிவுகள்ல கூகில் அட்சென்ஸ் விளம்பரங்களுக்கு வாய்ப்பில்லைன்னு தெரிஞ்ச உடனே Bidvertiser விளம்பரங்களை பதிவுல இனைச்சேன்....விளையாட்டா செஞ்சது இப்ப 49 டாலருக்கு வருமானம் வந்திருக்கு. அதுலயும் 37 டாலர் என்னோட பேபால் அக்கவுண்ட்க்கு வந்திருச்சு.

ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னுன்னு பதிவெழுதுற எனக்கே இத்தனை வருதுன்னா, டெய்லி பதிவு, எதிர்பதிவு, சூடான பதிவுன்னு போட்டு தாக்குற மக்களுக்கு எம்புட்டு வருமானம் வரும்....யோசிங்கப்பேய்...

சல்லிசா காசு வருது...வேணாம்னு ஏன் சொல்றீங்க....ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

அப்புறம் முக்கியமா ஒரு எச்சரிக்கை, நம்ம பதிவுதானேன்னு நாமளே வெளம்பரத்த சொடுக்கினோம்னா மொதவாட்டி எச்சரிக்கை அப்பால நம்ம கணக்க தீர்த்துருவாய்ங்க...அதுனால நம்ம ஏரியாவுக்குள்ள வர்றவுக தட்டினாத்தான் நமக்கு காசு...சரியா

சேரணும்னு விருப்பபட்டா கீழ இருக்கிற தொடுப்ப தட்டி போய் சேருங்கப்பா...ஏதோ ரெஃபரல் ப்ரொகிராம்னு சொல்றாய்ங்க...அதுல எம்புட்டு தேறுதுன்னு பார்க்கிறேன்.